இந்த Mobile banking பாண்டியன் கிராம வங்கியில் மட்டுமில்லை, அனைத்து வணிக வங்கியிலும் அறிமுகப்படுத்துவதற்கு அரசும், நிர்வாகங்களும் துடித்துக்கொண்டு இருக்கின்றன. வங்கித்துறையில் தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில், வங்கியின் நிரந்தரப் பணிகளில் (permanent jobs) அவுட்சோர்சிங் இருக்ககூடாது என்பதும், வங்கித்துறைக்கு அப்பாற்பட்ட information and technology போன்ற நடவடிக்கைகளுக்கு அவுட்சோர்சிங் செய்துகொள்ளலாம் என்பதே ஒப்புக்கொள்ளப்பட்ட ஷரத்தாக இருக்கிறது. ஆனால் இங்கே Mobile banking என்ற பேரில் சேமிப்பு, பண பட்டுவாடா போன்ற வங்கிச்சேவையின் நிரந்தரப்பணிகளை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதாவது Mobile banking என்ற பேரில் அவுட்சோர்சிங் நடத்தவும், பெரும் உழைப்புச் சுரண்டல் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. நாம் இதனை அனுமதிக்க முடியாது. வரும் ஜூலை 7ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் இதுவும் ஒரு கோரிக்கையாக இருக்கிறது. Mobile bankingக்கு குறைந்த ஊதியத்தில் அவுட்சோர்சிங் என்று ஆட்களை நியமிக்காமல், நிரந்தரப்பணிக்குரிய ஊதியத்துடன், நிரந்தரஊழியர்களையே நியமிக்க வேண்டும் என்பதே நமது நிலைபாடு!