24.6.11

EA - OU சர்க்குலர் 17.6.2011


பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)


சுற்றறிக்கை எண் : 3/2011 நாள்: 17.6.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

எழுத்தர்களுக்கும், அலுவலர்களுக்கும் புதிய பணிநியமனத்திற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மிகவிரைவில் அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கிளைகளில் புதியவர்களை பணியில் அமர்த்துவதில் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. சங்கம் இதனை வரவேற்கிறது.

கடுமையான ஆள் பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியையும், சிரமங்களையும், இந்தப் புதிய பணிநியமனங்கள் மூலம் ஓரளவுக்கு சரிசெய்ய முடியும். வங்கியில் புது ரத்தம் பரவ, நமது சேவைகளும் பணிகளும் சிறப்புறும். சங்கமும் பலமடையும். நம்பிக்கைகள் தெரிகின்றன. புதிய தலைமுறையை சங்கம் வரவேற்கிறது.

இந்த வங்கியில் முதன்முறையாக, நான்காம் நிலை (Scale IV) அலுவலர்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. வெற்றி பெறும் தோழர்களை  சங்கம் வரவேற்கிறது.

வங்கிச் சேர்மனுடன் சந்திப்பு:

சென்ற சுற்றறிக்கையில் நாம் சில பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் குறிப்பிட்டு இருந்தோம். அவைகள் குறித்து நமது வங்கியின் சேர்மன் அவர்களுடன்  PGBEA பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

1. ஆள் பற்றாக்குறை, லீவு, டெபுடேஷன் பிரச்சினைகளை புதிய பணி நியமனங்களே நிவர்த்தி செய்யும் எனவும், ஜூன் இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என உறுதியளித்தார் சேர்மன்.

2. கடைநிலை ஊழியரிலிருந்து எழுத்தராக பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கும், ஏற்கனவே மாறுதல்களில் பாதிப்புகள் கொண்டவர்களுக்கும், புதிய பணி நியமனங்களில் சாதகமான மாறுதல்கள் இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

3. கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட், Newspaper allwowance களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், ஸ்பான்ஸர் வங்கியில் தொடர்பு கொண்டு மிகவிரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட்டிற்கான அரசாணையை மீண்டும் நாம் நிர்வாகத்திற்கு கொடுத்திருக்கிறோம். இதுநாள் வரையில் நிர்வாகம் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது.

4. அனைவருக்கும் compliment  கொடுப்பது சம்பந்தமாக, வங்கியின் நிர்வாகக்குழுவிற்கு அஜெண்டா கொண்டு செல்வதாக சேர்மன் சொல்லியிருந்தார். ஆனால் நிர்வாகக்குழுவில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

5. அரசானையின்படி, புதிய கடைநிலை ஊழியர்களை employment exchange மூலம் நியமனம் செய்யப் போவதாக சேர்மன் சொல்லியிருந்தார். நாம் நம் வங்கியில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து, அனுபவம் பெற்றிருக்கும் temporary staffகளை அந்தப் பணிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் எடுக்கலாம் என கோரிக்கை வைத்தோம். அரசானையைத் தான் மீற முடியாது எனவும், ஏதேனும் வழிகள் இருந்தால், நிர்வாகக்குழு மற்றும் ஸ்பான்ஸர் வங்கியைக் கலந்து கொண்டு முயற்சிக்கிறேன் எனவும் சேர்மன் தெரிவித்தார். சில யோசனகள் சொல்லி இருக்கிறோம். தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறோம்.

6. இதற்கிடையில் சமீபத்திய  அலுவலர் மாறுதல்களில் மீண்டும் குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே தொலைதூரக் கிளைகளில் பணிபுரியும் தோழர்களுக்கு இந்த முறையும் பாதிப்புகள் சரி செய்து தரப்படவில்லை. நிர்வாகத்திடம் PGBOU  இதுகுறித்து விரைவில் பேசி சரி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஜூன் 22 ஆர்ப்பாட்டமும், ஜூலை 7 வேலை நிறுத்தமும்:

சீர்திருத்தங்கள் என்ற பெயரில் வங்கித்துறையை சீரழிக்கவும், தனியார் மயப்படுத்தவும் அரசு தீவீரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இனி வங்கித்துறையில் இருதரப்பு ஒப்பந்தங்களே இல்லாமல் செய்யவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கடைநிலை ஊழியர்களை முழுமையாக இல்லாமல் செய்யவும், எழுத்தர்களை குறைக்கவும் கூட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் நிலைமை என்றால், நம் எதிர்காலம் நிச்சய்மற்றதாகவும், கேல்விக்குறியாகவும் ஆகிவிடக் கூடும். இதனை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் மத்தியில் உருவாகி வருகிற எதிர்ப்பின் ஒரு பகுதியாக நாமும் ஜூன் 22ம் தேதி நாம் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதையும் அறிவித்து இருந்தோம்.

அதன்படி, வருகிற புதன்கிழனை ஜூன் 22ம் தேதி மாலை 6 மணிக்கு நமது தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழர்கள் திரளாக வந்து கலந்துகொண்டு, தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டுமென்று வேண்டுகிறோம்.

இப்போது இந்தப் போராட்டம் மேலும் தீவீரமடைந்து இருக்கிறது. அகில இந்திய அளவில் BEFI, NCBE, AIBEA, AIBOC, INBEF போன்ற சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதென முடிவு செய்து அறைகூவல் விடுத்திருக்கின்றன. நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது. எனவே நாம் இந்த ஜூலை 7ம் தேதி வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுகிறோம்.

தோழர்களே!
இந்த வேலைநிறுத்தம் நமது எதிர்காலத்தையும், வங்கித்துறையையும் பாதுகாக்கும் முக்கியமான ஒரு நடவடிக்கை. விளக்குகளை ஊதி அணைக்க அரசு முயல்கிறது. இருக்கிற வெளிச்சத்தை அணையாமல், நாம் அரண் போல நிற்க வேண்டியிருக்கிறது. தேசம் முழுவதும் வங்கி ஊழியர்கள் ஓரணியில் திரண்டு நிற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தம் இது. எப்போதும் போல் நாம் இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

வேலைநிறுத்தத்தை விளக்கி, திருநெல்வேலியில் 25.6.2011 மாலையிலும், மதுரையில் 30.6.2011 மாலையிலும் நமது இரு சங்கங்களின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. சங்கமிப்போம். சங்கமாயிருப்போம்.

தோழர்களே!
ஜூன் 22ம் தேதி ஆர்ப்பாட்டம்!
ஜூலை 7ம் தேதி வேலை நிறுத்தம்!!

வாருங்கள்! அணி திரள்வோம்.

தோழமையுடன்
      
(M.சோலைமாணிக்கம்)   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU