அருமைத் தோழர்களே!
வணக்கம்.
முதலில் உங்கள் அனைவருக்கும் உற்சாகமான செய்தி.
கர்நாடகா ஹைகோர்ட்டில், ‘சம வேலைக்கு சம் ஊதியம்' என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் நமது அகில இந்திய சங்கம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது.
“வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான பென்ஷன் கிராம வங்கி ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்”
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலான நமது போராட்டம் இப்போது வெற்றியின் விளிம்பில் வந்து நிறுத்தியிருக்கிறது. நமது மாநட்டில் தோழர்.முகர்ஜி இதுகுறித்து நம்பிக்கையோடு சொன்ன வார்த்தைகள் இதோ நிஜமாகி இருக்கின்றன.
அது மட்டுமல்ல, அத்தோடு நமக்கு உரிய ‘கம்யூட்டர் இன்கிரிமெண்ட்”டும் வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பு சொல்லி இருக்கிறது. ஊழியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கம்யூட்டர் இன்கிரிமெண்ட் உண்டு.
இவ்விரண்டையும், அரசு ஆறுமாத காலத்துக்குள் அமல்படுத்த வேண்டுமென என தீர்ப்பு கால வரையறையும் செய்திருக்கிறது.
இக்காரியம் நமது AIRRBEAவால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.
நம்பிக்கை மிகுந்த இந்த தகவலோடு நாம் நமது மாநாட்டுச் செய்திகளை பார்ப்போம்.
இன்னும் அந்த எழுச்சி மிக்க தருணங்களே நமக்குள் நிறைந்திருக்கின்றன. பிப்ரவரி, 12, 13 தேதிகளில் நடந்த நமது மாநாடுகள், நம் தொழிறசங்க வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயம் என்பதை, மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருமே உணர்ந்திருந்தார்கள். மாற்றங்களை நோக்கி மிகச் சரியான திசையில் நாம் பயணிக்கிறோம் என்பதை உறுதிசெய்த மாநாடுகளாக இவை இருந்தன.
பெண் ஊழியர், அலுவலர் மாநாடு:
பிப்ரவரி 12ம் தேதி காலையில், நமது சங்கங்களின் உறுப்பினர்களாக இருக்கும் பெண் தோழர்களின் மாநாடு நடைபெற்றது. அன்றை தினம் வங்கிக்கு விடுமுறை இல்லாத போதும், வங்கியில் நிலவும் கடுமையான ஆள்பற்றாக்குறையை மீறியும், முப்பது பெண் தோழர்கள் மாநாட்டுக்கு வந்திருந்தனர். மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ், இத்தனை வருட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குப் பிறகு, இப்படியொரு மாநாட்டை நடத்த இப்போதுதான் முடிந்திருக்கிறது என்பதை சுயவிமர்சனமாக முன்வைத்தார். அதே நேரம், நமது சங்கங்கள் எப்போதுமே, பெண்களின் பிரச்சினைகளை உணர்ந்தே செயல்பட்டு வந்தது என்பதை நினைவுபடுத்தினார். கிளைகளில் கழிப்பிடங்களைத் திறக்க வேண்டும் என்று இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்து போராடியதிலிருந்து, இன்று மாறுதல்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது வரை நம் இரு சங்கங்களின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டினார். இருந்தபோதும், பெண்களுக்கான பிரச்சினைகளை அவர்களே பேசுவதும், முன்வைப்பதுமே இன்னும் அழுத்தமானதும் அர்த்தமுள்ளதும் ஆகும் என மாநாட்டின் அவசியம் குறித்துப் பேசினார்.
தொடர்ந்து பங்கேற்ற பெண் ஊழியர்களும், அலுவலர்களும் தாங்கள் கிளைகளில் சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசினர். மெல்ல மெல்ல எழுந்த அவர்களின் குரல்கள் பிறகு வெப்பத்தோடு பற்றியதை மாநாட்டு அரங்கம் கண்டது. அவைகளை தொகுத்தும், விளக்கமளித்தும் தோழர்.பிரேமலதா (கனரா வங்கி), BEFI-TN சார்பில் அவர்கள் பேசினார்கள். பெண் ஊழியர்கள் இன்றைய காலக்கட்டத்தில் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவற்றை எப்படி எதிகொள்வது என்பதையும் பல நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களின் மூலம் தெளிவாக்கினார். இறுதியாக தோழர்.கிருஷ்ணன் ( BEFI -TN மாநிலச் செயலாளர்) அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.
நம் வங்கியில் பணிபுரியும் பெண் உழியர்கள் மற்றும் அலுவலர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராயவும் பெண் ஊழியர்களுக்கான சப்-கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அதன் கன்வீனராக, தோழர். சிவகாமி ( பாப்பாக்குடி ) அவர்களும், உறுப்பினர்களாக தோழர்.வசந்தா ( எட்டையபுரம் ), தோழர்.புஷ்பராணி (புதுக்குடி ), தோழர். சித்திரகவிதா ( அரசரடி ), தோழர்.சுகப்பிரியா ( விருதுநகர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வப்போது இந்த சப்-கமிட்டி கூடி, விவாதித்து, நிலைமைகளை ஆராயும். பெண் ஊழியர்களும், அலுவலர்களும், இந்த சப்-கமிட்டியை தொடர்புகொண்டு தங்கள் நமது தொழிற்சங்க வரலாற்றில் இது ஒரு மைல்கல்.
பொது மாநாடு:
பிப்ரவரி 12ம் தேதி மாலையில் PGBEA தலைவர், தோழர்.மாதவராஜ் கொடியேற்றி வைக்க, கோஷங்களோடு மாநாடு களை கட்டியது. அருமைத் தோழர். பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவரங்கத்தில் PGBEAவின் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. தோழர்.கிருஷ்ணன் ( BEFI -TN மாநிலச் செயலாளர்) நமது கடந்த கால போரட்டங்களை நினைவுகூர்ந்து, வங்கித்துறை இன்று சந்திக்கும் சவால்களையும் தெளிவுபடுத்தினார். அவுட்சோர்சிங் குறித்த தெளிவும், அந்த தற்காலிக நிரந்தரமாக்கும் உறுதியும் சங்கங்களுக்கு இன்றைக்கு வேண்டு இருக்கிறது என நமக்கு இருக்கும் கடமையை சுட்டிக்காட்டினார். அத்துடன் அன்றைய மாநாட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.
அடுத்த நாள், பிப்ரவரி 13ம் தேதி காலை பொது மாநாடு துவங்கியது. அரங்கம் கொள்ளாமல் தோழர்கள் திரண்டு இருந்தனர். பார்த்து, சிரித்து, அரட்டையடித்து, ஒரே உற்சாகக்குரல்கள் எங்கும் மலர்ந்திருந்தன. பொது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய தோழர்.போஸ் பாண்டியன் , எந்தச் சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்பதையும், தீரமிக்க போராட்டங்களுக்குப் பிறகு திரண்டு நிற்பதையும் எடுத்துரைத்தார். அடுத்து பேசிய தோழர். தமிழ்ச்செல்வன் ““ஒரு தொழிற்சங்க மாநாட்டில், எழுத்தாளனை ஏன் பேச அழைத்தீர்கள்?” என்ற கேள்வியுடன் துவங்கி, அதற்கு பதிலும் அவரேச் சொல்வதாக மொத்தப் பேச்சும் இருந்தது. “நம்முடைய நிலத்த யாரோ ஒருத்தன் வந்து culture செய்வதை நாம் அனுமதிப்போமா? வெட்டுக்குத்து, பஞ்சாயத்து என அவ்வளவு அலப்பரை செய்வோம். ஆனா நம்ம மூளைய மட்டும் காலகாலமா எவன் எவனோ cultureசெய்றானே, அதுபத்தி யோசிக்கவாவது செய்றோமா?” என்ற அவரது உரை கலாச்சாரம் குறித்த பல கேள்விகளை தொழிற்சங்க அரங்கத்தில் எழுப்புவதாய் அமைந்திருந்தது. புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்திலிருந்து வந்திருந்த தோழர் செந்தமிழ்ச்செல்வன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.
அடுத்து நமது அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்.திலிப் குமார் முகர் ஜி பலத்த கரவொலிகளுக்கிடையில் பேச ஆரம்பித்தார். BEFI-TN செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன் அவர்கள் மிக அற்புதமாக அவரது பேச்சை மொழியாக்கம் செய்தார். AIRRBEA என்னும் நமது அகில இந்திய சங்கம், கிராம வங்கி ஊழியர்களின் வாழ்வில் எப்படி இரண்டறக் கலந்து இருக்கிறது என்பதை நிலைநிறுத்துவதாக தோழர்.முகர்ஜியின் உரை இருந்தது. சமவேலைக்கு சம ஊதியம் என்னும் கோரிக்கையை வென்றெடுத்தது, அதில் இருந்த அனாமலிகளைச் சரிசெய்தது, பிரமோஷன்களில் முன்னேற்றம் காணப் போராடியது என நீண்ட வரலாற்றில், நாம் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதை உணர்த்தியது. கிராம வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனக்களுக்கு தாரை வார்க்க அரசு செய்யும் முயற்சிகளைக் குறிப்பிட்டு, நாம் அதனை முறியடிப்போம் என சூளுரைத்தார். ‘தேசீய கிராமப்புற வங்கி' என்பதுதான் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பதையும், அதை முன்னெடுத்துச் செல்ல அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
இறுதியாக பென்ஷன் குறித்து நாம் தொடர்ந்த வழக்கினையும், அதைத் தொடர்ந்து அரசோடு நாம் நடத்திய பேச்சு வார்த்தைகளையும், அரசுக்கெதிராக நாம் நடத்திய போராட்டங்கலையும் விவரித்தார். இப்போது, ‘பென்ஷன் கொடுத்தே ஆக வேண்டும்' என்னும் நிலைமை அரசுக்கு ஏற்பட்டு இருப்பதையும், அதற்கான வழிமுறைகளை ஆராயும் கட்டத்திற்கு அரசு இறங்கி வந்திருப்பதையும் ஒவ்வொன்றாக விளக்கினார். அதற்கான நிதி 9000 கோடி தேவைப்படுவதையும், கையிருப்பில் 2000 கோடி இருப்பதையும், இன்னும் 7000 கோடிக்கு என்ன செய்வது என்று அரசு நம்மிடம் யோசனைகள் கேட்பதையும் தெரிவித்தார். நாம் ‘சம வேலைக்கு சம ஊதியம்' அமல் செய்யப்பட்ட 1992ம் வருடத்திலிருந்து, பென்ஷன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதையும், அரசு 1995ம் ஆண்டிலிருந்து தருவதற்கான சாத்தியங்கள் இருப்பதையும் சொல்லி, “இன்னும் அதிக பட்சம் மூன்று மாதங்களுக்குள் பென்ஷன் கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கிடைக்கும்” என உறுதிபடத் தெரிவித்தார். வந்திருந்தவர்களின் உற்சாக கரவொலிகள் அடங்க வெகுநேரம் பிடித்தது.
அத்துடன் பொது மாநாடு நிறைவடைந்தது. நம்பிக்கையில் நிறைந்து நின்ற நம் தோழர்கள், அற்புதமான மதிய உணவை ரசித்தனர்.
பிரதிநிதிகள் மாநாடு:
மதியத்திற்கு மேல் PGBOU, PGBEA வின் பிரதிநிதிகள் மாநாடு தனித்தனியே நடந்தது. PGBOUவின் பிரதிநிதிகள் மாநாட்டில் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்.பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார். PGBOU உறுப்பினர்களின் சந்தாத்தொகை ரூ 100/லிருந்து ரூ.150/ஆகவும், PGBEA உறுப்பினர்களின் சந்தாத் தொகை ரூ 50/-லிருந்து ரூ.100/ஆகவும் இம்மாநாடுகளில் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.
இரண்டு சங்கங்களின் பிரதிநிதிகள் மாநாட்டிலும் பொதுச்செயலாளர் அறிக்கைகளும், வரவு செலவு அறிக்கைகளும் வைக்கப்பட்டன. தோழர்கள் ஆக்க பூர்வமான விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்குப் பிறகு இரண்டு சங்கங்களின் புதிய செயற்குழுக்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
PGBOU புதிய செயற்குழு:
1.President : தோழர். போஸ்பாண்டியன் (விருதுநகர்)
2.Vice president : ” ” . விஸ்வநாதன் (சிங்கம்புனரி)
3.General Secretary : ” ” . சங்கரலிங்கம் (வட்டார அலுவலகம், தூத்துக்குடி)
4. Joint Secxretary : ” ” . சுல்பிஹர் அலி (கடமலைக்குண்டு)
5. treasurer : ” ” . பெருமாள் சாமி (கல்குறிச்சி)
6. Asst.Trearurer : ” ” . சுப்புராஜ் (தலைமையலுவலகம்)
7. EC member : ” ” . சாமுவேல் ஜோதிக்குமார் ( ஒத்தக்கடை)
8. ” ” : ” ” . சண்முகநாதன் (வள்ளியூர்)
9. ” ” : ” ” . நடராஜன் (வட்டார அலுவலகம்,
திருநெல்வேலி)
10. ” ” : ” ” .நரேன் (மானாமதுரை)
11. ” ” : ” ” . முத்துக்கருப்பன் ( புளியால்)
PGBEA புதிய செயற்குழு:
1.President : தோழர். மாதவராஜ் (சாத்தூர்)
2.Vice president : ” ” . சங்கர் (சங்கரலிங்கபுரம் )
3.Vice president : ” ” . அருண் பிரசாத் சிங் (வி.எம்.சத்திரம்)
4.General Secretary : ” ” . சோலைமாணிக்கம் (விருதுநகர்)
5. DGS : ” ” . காமராஜ் (ஏழாயிரம் பண்ணை)
6. AGS : ” ” . சுப்பிரமணியன்(பழைய பேட்டை)
7. AGS : ” ” . அண்டோ கால்பட்(பசுவந்தனை)
8. treasurer : ” ” . சுந்தர வடிவேல்(டி.யூ.மங்கை)
9. Asst.Trearurer : ” ” . அருளானந்தம்(பரமக்குடி)
10. EC member : ” ” . சட்டையப்பன்( வள்ளியூர்)
11. ” ” : ” ” . ராஜேந்திரன் (திருமங்கலம்)
12. ” ” : ” ” . பாலசுப்பிரமணியன்(பாரதிநகர்)
13. ” ” : ” ” .நாசர் (எஸ்.வி.கரை)
14. ” ” : ” ” . சுப்புலட்சுமி ( சிவகாசி)
15. ” ” : ” ” .புஷ்பராணி ( புதுக்குடி)
16. ” ” : ” ” . சிவகாமி ( பாப்பாக்குடி)
17. ” ” : ” ” . சந்திரசேகர்( காரைக்குடி)
18. ” ” : ” ” . ராஜமனோஹர் ( ஏர்வாடி-R)
19. ” ” : ” ” . சக்திவேல் ( பேரையூர்)
முதன் முறையாக நமது சங்க செயற்குழுவில் மூன்று பெண் தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களில் மூன்று தோழர்களும், சங்க செயற்குழ்வில் இணைக்கப்பட்டு இருக்கின்றனர். இதுவும் இம்மாநாட்டின் புதிய அத்தியாயங்கள்.
AIRRBEA-TN மாநில மாநாடு:
மாலை ஐந்து மணி அளவில், நமது மாநில மாநாடு நடைபெற்றது. இப்போது புதுவையிலிருந்தும் கிராம வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு அங்குள்ள் சங்கம் நம்மோடு இணைக்கப்பட்டு இருப்பதால், இனி AIRRBEA - TN and Pondicherry என சங்கம் விரிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இப்போது நமது மாநில அமைப்பில் 6 உறுப்புச் சங்கங்கள் இருக்கின்றன. புதிதாக மாநிலக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர். பாரதி கிருஷ்ணகுமார் நிறைவுரையாற்றினார்.
புதிய மாநிலக்குழு:
1.President : தோழர். பிச்சைமுத்து (Pandyan GBOU)
2.Vice president : ” ” .செல்வகுமார் திலகராஜ் (Pandyan GBOU )
3.Vice president : ” ” . சிவராமன்(Puduvai barathiyar GBOU)
4.General Secretary : ” ” . சோலைமாணிக்கம் (Pandyan GBEA)
5. JGS : ” ” . காமராஜ் (Pandyan GBEA)
6. JGS : ” ” . சுரேஷ்(Pallavan GBEU)
8. treasurer : ” ” . சாமுவேல் ஜோதிக்குமார்(Pandyan GBOU)
9. Asst.Trearurer : ” ” . சீனிவாசன்(Pallavan GBEU)
10. EC member : ” ” . மாதவராஜ்( Pandyan GBEA)
11. ” ” : ” ” . சங்கரலிங்கம் (Pandyan GBOU)
12. ” ” : ” ” . விஸ்வநாதன் (Pandyan GBOU)
13. ” ” : ” ” .கணேசன் (Pandyan GBOU)
14. ” ” : ” ” . சுப்பிரமணியன் ( Pandyan GBEA)
15. ” ” : ” ” .அண்டோ கால்பட்( Pandyan GBEA)
16. ” ” : ” ” . அருண் பிரசாத் சிங் (Pandyan GBEA)
17. ” ” : ” ” . சிவசங்கரன்(Pallavan GBOU)
18. ” ” : ” ” . மஹேஸ்வரன்( Pallavan GBOU)
19. ” ” : ” ” . ஸ்ரீனிவாச மூர்த்தி (Pallavan GBOU)
19. ” ” : ” ” . ரவீந்திரன்((puthuvai barathiar GBEU)
19. ” ” : ” ” . சசிக்குமார்((puthuvai barathiar GBEU)
19. ” ” : ” ” . செந்தமிழ்ச்செல்வன்(puthuvai barathiar
GBEU)
19. ” ” : ” ” . முருகன் (puthuvai barathiar GBOU)
19. ” ” : ” ” . விஜய் ஜெயந்திநாதன் (puthuvai barathiar
GBOU)
19. ” ” : ” ” . சிவராமன் (puthuvai barathiar GBOU)
தோழர்களே!
மிகுந்த நம்பிக்கைக்குரிய செய்திகள் இந்த நேரத்தில் வந்திருக்கின்றன. நம் எதிர்காலத்தை உத்திரவாதப்படுத்தும் நிலைமை உருவாகி இருக்கிறது. மாற்றங்களை நோக்கிய நமது பயணம் தொடர்கிறது. நம் சங்கங்களின் நடவடிக்கைகள் செயல் ஊக்கம் பெறுகின்றன.
இந்த நாள் நமது நாள்.
இனி வரும் நாட்களும் நமது நாட்களே!!
தோழமையுடன்
(M.சோலைமாணீக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU