24.6.11

EA சர்க்குலர் 1.5.2011

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு:AIRRBEA &BEFI)
விருதுநகர்

சுற்றறிக்கை எண்: 3/2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

சென்ற ஆண்டுக் கணக்கின் விபரங்கள், உற்சாகமூட்டுவதாக இருக்கின்றன.
நிர்ணயித்த இலக்கான 5000 கோடி வணிகத்தைத் தொட முடியவில்லையென்றாலும்
வங்கியின் வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருக்கிறது. ஏறத்தாழ 70கோடியை
வங்கியின் லாபம் தொட்டு நிற்கிறது.  கடுமையான ஆள் பற்றாக்குறை,
சிக்கல்கள் தந்த  சி.பி.எஸ் சூழல் எல்லாவற்ரையும்ம் இதனை சாதிக்க
முடிந்திருக்கிறதென்றால், அது பாண்டியன் கிராம வங்கியின் ஊழியர்கள்
மற்றும் அலுவலர்களின் உழைப்பும், வங்கியின் மீது இருக்கிற அக்கறையுமே
முதற்காரணமாகிறது. அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நமது சங்கம்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

வங்கியில் பிரமோஷன்களை விரைவாக நடத்தி, முடிவுகளை காலதாமதமின்றி அறிவித்த
நிர்வாகத்தை நிச்சயம் நாம் பாராட்டலாம்.   பொதுவாக பிரமோஷன்களில் இதுவரை
இல்லாத அளவுக்கு சீனியர்கள் பதவி உயர்வு பெற்றிருப்பதும் நல்ல விஷயமே.
அதே வேளையில், மெஸஞ்சர்களிலிருந்து கிளரிக்கல் பிரமோஷனில்,
சீனியாரிட்டியில் முதலிரண்டு இடம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்
படாதது உறுத்துகிறது. இந்தை பிரமோஷன்களில் இதுபோன்ற குறைகள்
கரும்புள்ளிகளாக நீடிக்கின்றன.

மிகக் குறைவாக ஊதியம் வாங்கிக்கொண்டு, மெஸஞ்சர்களாயிருந்து எழுத்தர்களாக
பதவி உயர்வு பெற்றவர்களை இரண்டு மாவட்டங்கள் தள்ளி, தொலைதூரத்திற்கு
மாறுதல் அளித்துவிட்டு, அதிகச் சம்பளம் பெறுகிற ஸ்கேல் திரி அலுவலர்களில்
சிலருக்கு மிக அருகிலேயே மாறுதல் போடப்பட்டு இருப்பது சரியில்லாத
நடைமுறை. இதுபோன்ற குறைகள் பணிச்சூழலையும், பணிகள் செய்வதிலிருக்கும்
ஆர்வத்தையும் பாதிக்கும். பொதுவாகவே, இங்கு சிலருக்கு எல்லாம் அவர்கள்
விருப்பபடியே  எல்லாம் நடக்கின்றன. அவை மிக வெளிப்படையாகவும்
இருக்கின்றன. நிர்வாகம் இந்தப் போக்கை மாற்றிக்கொண்டு அனைவருக்கும்
பொதுவானதாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
வேண்டுகோள் விடுக்கிறோம்.

அடுத்து, புதிதாக எழுத்தரகப் பதவி உயர்வு பெற்றவர்களை, அதிக வணிகம் உள்ள
கிளைகளில் கேஷ் பார்க்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிரது. பெரும்
சிரமத்திற்கிடையில், அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கிளைகளில் அந்த
ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என
விரும்புகிறோம்.

சமீபத்தில் போடப்பட்ட கிளரிக்கல்  டிரான்ஸ்பர்களில், பாரபட்சங்கள்
இருந்தன. அவற்றை சேர்மனிடம் எடுத்துரைத்தோம். உடனடியாக சிலவற்றையும்,
பிதிய பணிநியமனத்தின்போது மற்றவற்றையும் சரிசெய்து தருவதாக
உறுதியளித்திருக்கிறார்.

இந்த நிதியாண்டில் அதிக லாபம் ஈட்டியதற்காகவும், சி.பி.எஸ் நூறு சதவீதம்
ஆனதற்காகவும், ஊழியர்கள் அனைவருக்கும் cash reward ஆக, ரூ.5000/-
தோழர்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.  வரும் மே9ம்தேதி
நடக்கும் வங்கி நிர்வாகக்குழு கூட்டத்தில் வைத்து cash reward  கொடுக்க
முயற்சிப்பதாய் சேர்மன் கூறினார்.

100 சதவீதம் சி.பி.எஸ் ஆன வங்கிகளில், அனைவருக்கும் கம்ப்யூட்டர்
இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும் என  அரசு ஆணைப் பிரப்பித்து இருக்கிறது.
வணீக வங்கியில் உள்ளதுபோல ,  restrospective effective ஆக கொடுக்க
வேண்டும் என்பதே நமது நமது நிலைபாடு. இருந்தாலும், இப்போதைக்கு அரசு
ஆணைப் பிறப்பித்திருப்பதை இங்கும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை
வைத்திருக்கிறோம். அதுகுறித்து நபார்டிலிருந்து கடிதம் வந்தவுடன்
தருகிறோம் என சேர்மன் உறுதியளித்திருக்கிறார். மிக விரைவில் நம்
அனைவருக்கும் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கிடைக்கும்.

நடந்து முடிந்த பிரமோஷனையொட்டி, கிளரிக்கல் எண்ணிக்கை கணிசமாய்க்
குறைந்திருக்கிறது. இங்கு ஒன்றிரண்டு கிளைகளைத் தவிர, அனைத்துக்
கிளைகளும்  single man  கிளைகளாகி விட்டன. பெரும் ஆள் பற்றாக்குறை
தாண்டவமாடுகிறது. லீவு, டெபுடேஷன் முதற்கொண்டு அனைத்துமே
சிரமமாயிருக்கிறது. நிர்வாகம் மிக விரைவாக பணிநியமனம் நடத்தி, இந்த
இக்கட்டான இந்தச் சூழலை சரிசெய்ய வேண்டும்.

தோழர்களே!
அதிக பணிச்சுமை, மன அழுத்தம், தொலைதூர மாறுதல் எல்லாம் அலைக்கழிக்கும்
ஒரு சோதனையான காலம் இது.  எல்லாவற்றையும் விரைவில் சரி செய்ய முனைவோம்.
ஆரோக்கியத்தை பேணுங்கள். நம்பிக்கையோடு இருங்கள்.

தோழமையுடன்

(மெ.சோலைமாணிக்கம்)
பொதுச்செயலாளர்