பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) ( இணைப்பு :AIRRBEA & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) ((இணைப்பு: AIRRBEA)
அருமைத்தோழர்களே!
வணக்கம்.
சங்கம் தொடர்பான செய்திகளையும், தகவல்களையும் அவ்வப்போது நமது முன்னணித் தோழர்களுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். அவர்கள் மூலமாக அனைத்துத் தோழர்களும் அறிந்து கொண்டு இருப்பீர்கள். சில முக்கியமான விஷயங்களை விரிவாக இப்போது பகிர்ந்து கொள்கிறோம்.
ஒன்பதாவது இருதரப்பு ஒப்பந்தப்படி, வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தை கிராம வங்கி ஊழியர்களுக்கு வழங்கிட மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் அரசாணைக்கு ஒப்புதலளித்த இரண்டு நாட்களுக்குள் அந்த ஆணையின் நகலை நமது அகில இந்திய சங்கம் AIRRBEA பெற்று அனுப்பி வைத்தது. நாமும் நம் தோழர்களுக்கு அதனை அனுப்பி இருந்தோம். அரியஸ் தவணை முறையில் இல்லாமல், முழுவதும் நம் ஊதியத்தோடு பெற்றிடும் வகையில் அரசாணை இருப்பது சிறப்புக்குரிய விஷயம். ஆனால், இதர அலவன்சுகளுக்கு ஸ்பான்ஸர் வங்கியை கேட்க வேண்டும் என்னும் மோசமான ஷரத்து இன்னும் தொடர்கிறது. அதனை எதிர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.
இதனைத் தொடர்ந்து, நாம் நமது சேர்மன் அவர்களிடம் சென்ற வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினோம். மிக சுமூகமாகவும், பயனுள்ள வகையிலும் பேச்சு வார்த்தை இருந்தது.
1. இந்த மாதமே புதிய சம்பளமும், அரியர்ஸ் தொகையும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுவிடும் என உறுதிபட தெரிவித்தார்.
2. புதிய பிரமோஷன் பாலிசிபடிதான் பதவி உயர்வு இருக்கும், இரண்டு மூன்று வாரங்களே காலதாமதாகும் என தெரிவித்தார். புதிய பதவி உயர்வுக் கொள்கையையும், சர்வீஸ் ரெகுலேஷனையும் சர்க்குலராக வெளியிட்டு, அதன்படி ஒவ்வொரு நிலையிலும் காலியிடங்களை அறிவித்து, பிரமோஷன் நடத்தப்படும்.
3.நம் தோழர்களுக்கு கொடுக்கப்பட்ட சார்ஜ்ஷீட்களை சுமுகமாக, எந்தவித மேல் நடவடிக்கை இல்லாமல் முடித்துத் தருவதாகச் சொன்னவர், இடைப்பட்ட காலத்தில் வேலைநிறுத்தம் தவிர்த்த விடுமுறைகளுக்கு சம்பளவெட்டு செய்திருப்பதையும் விலக்கி, அதற்குரிய ஊதியத்தைத் தரவும் சம்மதித்திருக்கிறார்.
4.பிரமோஷனையொட்டி அனைத்து நிலைகளிலும் மாறுதல்கள் இருக்கும் எனவும், அதற்கிடையில் உடல்நலம், அத்தியாவசியம் முன்னிறுத்தி சில மாறுதல்களைச் செய்து தரவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், வங்கியின் பிஸினஸை நாம் அனைவரும் ஒன்றினைந்து மேம்படுத்த வேண்டுமென சேர்மன அவர்கள் வலியுறுத்தினார். நாம் நிச்சயம் ஒத்துழைப்பதாக தெரிவித்திருக்கிறோம்.
தோழர்களே!
புதிய பிரமோஷன் பாலிசி படி அனைத்து நிலைகளிலும் கூடுதல் காலியிடங்கள் இருக்கும்.
மெஸஞ்சர்த் தோழர்களுக்கு இதுவரை, மொத்தமுள்ள காலியிடங்களில் பத்து சதவீதத்திற்கு மட்டுமே பிரமோஷன் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வந்தது. புதிய பாலிசி பிரகாரம் 25 சதவீதம் பிரமோஷன் வழங்கப்பட வேண்டும்.
ஸ்கேல் நான்கு நிலையில், பதினான்கு அலுவலர்க்கு ஸ்கேல் மூன்று நிலையிலிருந்து பிரமோஷம் வழங்கப்பட வேண்டி இருப்பதால், அந்தக் காலியிடங்கள் ஸ்கேல் மூன்று நிலைக்கான காலியிடங்களில் கூடும். அதுவே ஸ்கேல் இரண்டு மற்றும் ஒன்று நிலைகளிலும் தொடரும்.
இதுகுறித்த, சுருக்கமான தெளிவான விதிகள் சுற்றறிக்கையோடு இணைக்கப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு தோழர்கள் சங்கத் தலைமையினை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
புதிய சம்பள விகிதத்தில், நமது அடிப்படைச் சம்பளத்திற்கு இணையான புதிய சம்பளத்தின் அட்டவனையும் இந்த சர்க்குலருடன் இணைக்கப்படுகிறது. அதற்குரிய DA, HRA, Transportation Allowance -ஐ தோழர்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
தோழர்களே!
23.7.2010 அன்று மதுரையில் நம் இரு சங்கங்களும் இனைந்து நடத்திய தொழிற்சங்க கருத்தரங்கம் மிக எழுச்சியானதாகவும், உனர்வு பூர்வமாகவும் இருந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். நம் ஒற்றுமையையும், உறுதியையும் வலுப்படுத்துவதாக இருந்தது.
தொடர்ந்து பேசுவோம். இயங்குவோம்.
தோழமையுடன்