நமது குடும்பங்களில் அனேகமாக நாம்தான் அரசு வேலை பார்க்கும் முதல் தலைமுறையச் சேர்ந்தவர்களாக இருப்போம். கிராமிய வங்கிகள்தான் இந்த வாய்ப்பினையும், வாழ்க்கையையும் நமக்கு கொடுத்து இருக்கிறது.
நமது உரிமைகளை நிலைநாட்டி, நமது சலுகைகளை பெற்று மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்த உழைப்பின் சொந்தக்காரர்கள் நாம். சமூக அந்தஸ்தும், பாதுகாப்பான வாழ்வும், கனவும், நம்பிக்கையான எதிர்காலத்தையும் நாம் பெற்றது ஒரு வரலாறு. இங்கு பணிபுரியும் நாம் எல்லோருமே ஒரு குடும்பமாக இருந்து, சகலருக்கும் சொல்ல வேண்டிய கதை இது.
அதற்காகவே PGB Family என்னும் இந்தப் பகுதி. இங்கு நம் சந்தோஷங்கள், சாதனைகள், வாழ்வின் மைல்கல்கள், துயரங்கள் என எல்லாவற்றையும் பகிர்வோம்.
இது நமது குடும்பத்தின் ஆல்பம்!