1.8.11

Accommodation for new clerical recruitees during training at PGB Head Office

புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிளரிக்கல் தோழர்களுக்கு ஆகஸ்ட் 3,4,5,6 தேதிகளில் முதல் Batch ஆகவும், ஆகஸ்ட் 8,9,10,11 தேதிகளில் இரண்டாம் Batchஆகவும் பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகத்தில் வைத்து training இருக்கிறது.

பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் அமைந்திருக்கிற விருதுநகர் கலெக்டர் ஆபிஸ் வளாகம் மதுரை-திருநெல்வேலி நெடுஞ்சாலையில், விருதுநகருக்கு வெளியே அமைந்திருக்கிறது.  Training  வருகிறவர்கள் தங்க வேண்டுமானால் லாட்ஜ்களோ, மேன்ஷன்களோ விருதுநகர் ஊருக்குள்ளேதான் அமைந்திருக்கின்றன. அங்கிருந்து பஸ்ஸோ, ஆட்டோவோ பிடித்துத்தான் வரவேண்டும். கலெக்டர் ஆபிஸ் அருகில் லாட்ஜ்கள் இல்லை.

எனவே, training  வருகிறவர்களின் வசதியைக் கவனத்தில் கொண்டு, PGBEA கலெக்டர் ஆபிஸ் அருகிலேயே, அவர்கள் தங்குவதற்கான இடங்களை ஏற்பாடு செய்திருக்கிறது. இரண்டு சங்க அலுவலகக் கட்டிடங்களும், 11 அறைகள் கொண்ட ஒரு மேன்ஷனும் இருக்கின்றன. கலெக்டர் ஆபிஸுக்கு எதிரே Regional Transport Office (RTO) அலுவலகம் அருகே உள்ள CO colonyயில் அமைந்திருக்கின்றன. எனவே accommodationக்காக தனியாக trainees  செலவு செய்யத் தேவையில்லை. மேலும் ஒரே இடத்தில் அருகருகே தங்கிக்கொள்வதன் மூலம் உங்களுக்குள் பரிச்சயமும்,புரிந்துணர்வும் ஏற்படும்.

ஆண்கள் தங்குவதற்கு ஒரு தனிக் கட்டிடமும், பெண்கள் தங்குவதற்கு தனிக் கட்டிடமும், குடும்பத்தோடு வருகிறவர்கள் தங்க ஒரு மேன்ஷனும் (சுகன்யா மேன்ஷன்) என திட்டமிடப்பட்டு இருக்கின்றன. (படத்தில் காண்க).

(படத்தை கிளிக் செய்து பெரிதாக காணலாம்)
Print/download

மொத்தம் 50 பேர் வரை ஒரே சமயத்தில் தங்கிக் கொள்ள முடியும். இதுவரை 11 பெண் தோழர்களும், 21 ஆண் தோழர்களும் தங்க வருவதாகச் சொல்லியிருக்கின்றனர். மேலும் accommodation விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட போன்களிலோ, இ-மெயில் முகவரியிலோ உடனடியாக தொடர்பு கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறோம். ஏற்கனவே வருவதாகச் சொன்னவர்கள், தாங்கள் எப்போது விருதுநகர் வருகிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

போன்கள்:
9443866719
9443373135

இ-மெயில்கள்
pgbea.vnr@gmail.com
gs@pgbea.net

மதுரையிலிருந்து திருநெல்வேலி வழியாகச் செல்கிற பேருந்துகளும், திருநெல்வேலியிலிருந்து மதுரை வழியாகச் செல்கிற பேருந்துகளும், Virudhunagar collectorate ல் நிற்கும்.

சுகன்யா மேன்ஷக்கு எதிரே PGBOUவின் உறுப்பினரும், பாண்டியன் கிராம வங்கி மேலாளர்களில் ஒருவருமான தோழர்.விஜயராகவன் அவர்களின் வீடு இருக்கிறது. தங்களின் உதவிக்கு அவரையும் நாடலாம். அவரது போன் நம்பர்: 9442060454.

நமது PGBEA  தோழர்களும் ஆகஸ்ட் 2 ம் தேதி இரவிலிருந்து சங்க அலுவலகத்தில் இருப்பார்கள். அவர்களும் தங்களுக்கு உதவுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு FEEDBACK மூலம் தொடர்பு கொள்ளலாம்.