15.8.11

Independence day at our Bank's Head Office

நம் வங்கி ஆரம்பித்து இத்தனை வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக, இந்த வருடம்தான் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு இருக்கிறது.  இது ஒரு ஆரோக்கியமான, நல்ல நடைமுறையாக நாம் பார்க்கிறோம்.

தியாகங்களாலும், துயரங்களினாலும் எழுப்பப்பட்ட இந்த தேசத்தின் நாள் இது. வருங்காலத்திற்கு சொல்ல வேண்டிய வரலாற்றின் தருணம் இது. இதனை நம் சிந்தையில் இருத்தவும், அனுபவங்களிலிருந்து நம்பிக்கையைப் பெறவும் இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம்.

வரலாறு என்பதை மக்கள் எப்போதும் மறந்து போகிறார்கள். அதனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதுதான் சுதந்திரதினத்தின் முக்கியச் செய்தியாக எப்போதும் இருக்கிறது.

இனி சுதந்திரதினம் நம் தலைமையலுவலகத்தில்.....