முதல் சில மாதங்கள் நீங்கள் பழகும்வரை, உங்கள் cell phoneஐ silent modeல் வைத்துக் கொள்ளுங்கள். கவனம் சிதறிவிடக் கூடாது. உங்கள் Id (Roll number)ஐயும், passwordஐயும் கொடுத்து login செய்து cash module க்குள் செல்வதையும், Cash receipts அல்லது cash payments ஐ select செய்யவும் அறிந்துகொண்டு இருப்பீர்கள். இனி-
Cash receipts:
1. ஒரு வாடிக்கையாளர் பணம் கட்டும் ரசீதை உங்கள் முன் கவுண்டர் வழியாகத் தருகிறார். சேமிப்புக் கணக்கில் கட்டுவதாகவோ, வாங்கிய கடன்களில் பணைத்தை செலுத்துவதாகவோ அந்த ரசீது இருக்கும். ரசீதை வாங்கிப் பார்த்துவிட்டு, பிறகு கேஷ் வாங்கிக்கொள்வோம் என ஒருபோதும் இருந்துவிடாதீர்கள். ரசீதை வாங்கிய கையோடு அவர் தரும் பணத்தையும் உடனடியாக வாங்கி விடுங்கள். சிலர் மொத்தமாக பணத்தைத் தராமல் ‘இதை எண்ணிப் பாருங்கள்’ , ‘இதை எண்ணிப் பாருங்கள்’ என பகுதி பகுதியாகத் தருவார்கள். இதை அனுமதிக்காதீர்கள். மொத்தமாக பணத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது.
2. அடுத்து, பணம் செலுத்துபவரின் கையொப்பம் இருக்கிறதா என கவனித்துகொள்ளுங்கள். வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்தும் credit cash voucherல் (பச்சைக் கலர்) மட்டும் பணம் செலுத்துபவரின் கையொப்பம் பின்பக்கம் இருக்கும். மற்றபடி, SB account, Current account, Part payment challan அனைத்திலும் முன்பக்கமே பணம் செலுத்துபவரின் கையொப்பம் இருக்கும்.
3. பணம் எவ்வளவு கட்டப்படுகிறது என்பதை கவனியுங்கள். நம்பரில் இருக்கும் தொகையும், அருகிலேயே எழுத்தில் எழுதப்பட்டு இருக்கும் தொகையும் ஒன்றாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
4.இனி, நீங்கள் வாங்கி வைத்திருக்கிற தொகையை எண்ண ஆரம்பியுங்கள். ருபாய்த் தாள்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் counting machine மூலம் எண்ணவும். ரசீதில் குறிப்பிடப்பட்டிருப்பது போல denomination (அதாவது ஆயிரத்தில் எத்தனை நோட்டு, ஐநூறில் எத்தனை நோட்டு, நூறில் எத்தனை நோட்டு என்பதாய் ) சரி பார்த்துக்கொண்டு, அவைகளுக்கு நேரே ஒவ்வொன்றாக ‘டிக்’ செய்துகொள்ளுங்கள்.
5. பணத்தை உடனடியாக டிராயரில் வைக்காதீர்கள். சிலநேரங்களில் வாடிக்கையாளர்கள் கட்டும் பணம் குறைவாகவோ/கூடுதலாகவோ இருக்கக் கூடும். அந்த சமயங்களில் நாம் எண்ணி டிராயரில் போட்ட பணம் கூட இருந்ததா, குறைவாக இருந்ததா என தடுமாற்றம் வந்துவிடும். எனவே ஒவ்வொரு deniminationலும் பணத்தை சரி பார்க்கும் வரை மேஜையிலேயே வைத்திருங்கள்.
6 செலுத்த வேண்டிய தொகைக்கு கூடுதலாக பணம் இருந்தால், திருப்பிக் கொடுக்க வேண்டிய மீதியை எண்ணி அதற்குரிய denominationஐ அந்த ரசீதின் பின்பக்கத்தில் குறித்துக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் கொடுங்கள்.
7 இனி வாங்கிய பணத்தை டிராயரில் வைக்க வேண்டிய பணி. இதில் தாங்கள் செய்ய வேண்டிய காரியங்கள்:
(a) கட்டப்பட்ட denominationல் இருபது தாள்களுக்கு மேலே இருந்தால் அவைகளை rubber bandனால் கட்டி, அதன் மீது எத்தனை தாள்கள் என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உதாரண்மாக ஐநூறு ருபாய் தாள்களில் 28 எண்ணிக்கையும், நூறு ருபாய்த் தாள்களில் 59 எண்ணிக்கையும் இருந்தால் அவைகளை rubber bandல் தனித்தனியாக கட்டி 28 என்றும், 59 என்றும் குறித்துக் கொள்ளுங்கள்.
(b) இனி, டிராயரில் ஒவ்வொரு denominationக்கும் என்று தனித்தனியாக இருக்கும் பகுதிகளில் பணத்தை கவனமாக வைக்க ஆரம்பியுங்கள். ரூ.1000த்திற்குரிய பகுதியில் ரூ.500ஐ வைத்துவிடக் கூடாது. ரூ.500க்குரிய பகுதியில் ரூ.100ஐ வைத்துவிடக் கூடாது.
8 அடுத்து கம்ப்யூட்டரில் add பட்டனுக்கான ‘A' keyஐ அழுத்தி, கிளைக்குரிய code, module code, account number அடித்து வாங்கிய பணத்தை வரவு செய்யத் துவங்குங்கள். 'A'key அழுத்தியவுடன், கம்ப்யூட்டர் சொல்லும் Transaction numberஐ வவுச்சரில் எழுதிக் கொள்ளுங்கள். தொகையைக் குறிப்பிடும்போது ரசீதை ஒருமுறைக்கு இருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.
9. அடுத்து, ‘Q' keyஐ அழுத்தி, denomination பிரகாரம் பதிவு செய்யுங்கள். வாங்கிய தொகை சரியாக இருந்ததும் ‘yes' கொடுத்து, திரும்பவும் ‘yes' கொடுங்கள்.
அவ்வளவுதான். ஒரு cash receiptsஐ நீங்கள் வங்கியில் வரவு செய்துவிட்டீர்கள்.
10. சிலசமயம், module codeஐ, account number, amount ஐ தவறாக அடித்துவிட நேரும். அந்த சமயங்களில் denomination பக்கத்தில் 'yes' கொடுத்துவிட்டு, அடுத்த main பக்கத்தில் 'yes' கொடுக்காமல் modify செய்வதற்குரிய 'M' keyஐ அழுத்தி transactionஐ சரிசெய்துகொள்ளலாம்.
Cash Payment:
1. Cash Receiptsலும் Cash Paymentலும் மாற்றி மாற்றி ஈடுபடாதீர்கள். அது குழப்பங்களை ஏற்படுத்தும். கூடுமான வரையில் Cash receipts என்றால் அதிலேயே தொடர்ந்து கொஞ்ச நேரம் ஈடுபடுங்கள். பிறகு Cash Receiptsஐ கொஞ்சம் நிறுத்திவிட்டு, Cash paymentsல் மட்டுமே கொஞ்ச நேரம் ஈடுபடுங்கள். வாடிக்கையாளர்கள் கூட்டமாக நிற்பதாலோ, அவசரப்படுத்துவதாலோ பதற்றமடைய வேண்டாம். நிதானமாக இருங்கள்.
2. Cash Paymentல் முதல் நடவடிக்கை, payment voucherன் பின்பக்கம் இருக்கும் token numberஐ அழைப்பதே. தானாக முந்திக்கொண்டு tokenஐ கவுண்டருக்குள் நீட்டுபவர்களை வரிசையில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, வந்திருக்கும் voucherகளை வரிசையாக அடிக்கி வைத்துக் கொண்டு, ஒவ்வொருவருவராக நீங்களே அழையுங்கள்.
3. உங்கள் குரலைக் கேட்டு, கவுண்டர் அருகே வருகிறவர்களிடமிருந்து, tokenஐ வாங்கி, வவுச்சரில் எழுதியிருக்கும் token numberஉடன் சரிபார்த்து, டிக் செய்து கொள்ளுங்கள்.
4. Cash paymentல், கொடுக்க வேண்டிய தொகையைப் பார்த்து, வவுச்சரின் பின்பக்கம் நீங்களும் ஒருமுறை உங்கள் கைப்பட எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
5. பிறகு எந்தெந்த denominationல் கொடுப்பது என முடிவு செய்யுங்கள். ரூ.5250 payment கொடுக்க வேண்டும் என்றால் 500X10, 100X2, 50X1 எனவும் கொடுக்கலாம். 52X100, 5X10 எனவும் கொடுக்கலாம்.
6. நீங்கள் ஏற்கனவே Cash Receiptsல் வாங்கி Rubber band போட்டு, எண்ணிக்கையை குறிப்பிட்டு வைத்திருக்கும் பணம் , இந்த சமயத்தில் உபயோகமாக இருக்கும். எண்ணிக்கை எழுதப்பட்டு இருந்தாலும் ஒருமுறை counting machineல் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
7. கொடுப்பதற்காக எடுத்து வைத்திருக்கும் பணத்திற்குரிய denominationஐ, நீங்கள் வவுச்சரின் பின்பக்கத்தில், உங்கள் கைப்பட எழுதிய தொகைக்குப் பக்கத்திலேயே எழுதிக்கொள்ளுங்கள். ஒருமுறைக்கு இருமுறை கூட்டலை சரிபார்த்தபிறகு பணத்தை வாடிக்கையாளரிடம் கொடுங்கள்.
8.பெரும்பாலும் cash paymentஐ உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் வழக்கம் இருப்பதில்லை. அதற்கு நேரமும் வாய்க்காது. கம்ப்யூட்டரில் cash receipts, cash payments modeஐ மாற்றி, மாற்றி enter செய்வதில் குழப்பங்களும் ஏற்படக் கூடும். எனவே, cash receipts இல்லாமல், கவுண்டர் freeயாக இருக்கும் சந்தர்ப்பங்களில் நிதானமாக கம்ப்யூட்டரில் Cash payments பதிவு செய்யுங்கள்.
இதுபோல, cash counterல் கவனமாகவும், உங்கள் பணியை ஒரு systamaticஆகவும் வைத்துக்கொண்டால் போதும். பதற்றம் கொள்ளாமல் எப்போதும் நிதானமாயிருந்தால் போதும். எந்தத் தவறும் நடக்காது. உங்களால் நிச்சயம் முடியும். (View/ download)
கள்ள நோட்டுகள்
குறிப்பாக ரூ.1000, ரூ.500, ரூ.100 ஆகிய ருபாய் நோட்டுகளில் கள்ளப்பணம் புழக்கத்தில் இருக்கிறது. வங்கி ஊழியர்களாகிய நாம், அதுவும் கேஷ் செக்ஷனில் இருக்கும் நாம் இதுகுறித்து தெளிவு கொள்வது அவசியமாகிறது. எது நல்ல நோட்டு என்பதும், எது கள்ள நோட்டு என்பதையும் நாம் அடையாளம் காணத் தெரிய வேண்டும். அதற்கான விபரங்களை கீழ்க்காணும் படங்கள் உங்களுக்கு புரியவைக்கும்.
இதனை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நோட்டையும் நாம் துருவித் துருவிப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. எண்ணிப் பார்க்கும்போது, வழக்கமாய் ருபாய் நோட்டுகளில் இருக்கும் stiffness இல்லாமல் வித்தியாசமாய்த் தெரியும் நோட்டுகளில் மேற்கண்ட அடையாளங்கள் இருக்கின்றனவா என ஒப்பிட்டு பார்க்கலாம்.
இவைகள் தெரியாமல் நாம் வாங்கி வைத்துக் கொள்ளும் கள்ள நோட்டுகளுக்கு கேஷியரே பொறுப்பேற்க வேண்டும் என விதிகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், நமது பாதுகாப்புக்கு வங்கி நிர்வாகம்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். நல்ல fake currency detecting machineஐ அனைத்து கிளைகளுக்கும் வழங்க வேண்டும். ஆனால் அவை நமது வங்கியில் சில கிளைகளில்தான் இருக்கின்றன. பல கிளைகளில் மோசமான மெஷின்களும், வேலை செய்யாத மெஷின்களுமாய் இருக்கின்றன. அவைகளைச் சரிசெய்ய வேண்டும் என்று PGBEA தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!