அவரது வருகையையொட்டி, 100% CBS, Mobile Banking வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைப்பது, NEFTவசதியை அறிமுகப்படுத்துதல் போன்ற முப்பெரும் விழாவை அறிவித்து பெரும் விமரிசையாக ஏற்பாடுகள் செய்திருந்தது நிர்வாகம்.
திரும்பிய பக்கமெல்லாம் ஐ.ஓ.பி MD திரு.நரேந்திராவின் டிஜிட்டல் உருவங்களாய் இருந்தன. சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட தலைமையலுவலகம் நமக்கே புதிதாய் இருந்தது! அங்கங்கே நம் மக்கள் நின்று பேசிக்கொண்டும், விஷயங்களை பகிர்ந்துகொண்டும் நின்றிருந்தனர். ஒருவர், “இன்றைக்கு ஐ.ஓ.பி MD நமக்கு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் announce பண்ணப் போறாராமே?” என ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தார்.
பாண்டு வாத்தியங்கள் முழங்க, சரவெடிகள் கொண்டாட, ஐ.ஓ.பி எம்.டி வரவேற்கப்பட்டார். Mobile Banking வாகனத்தில் ஏறி, உட்கார்ந்து, கலெக்டர் ஆபிஸ் வளாகத்தில் கொஞ்ச தூரம் சென்றார். பின் உள்ளே வந்து NEFT தொடங்கி வைத்தார். கம்ப்யூட்டர் திரையில் மத்தாப்புகள் மலர்ந்தன. பின் அவர் முன்னிலையில் MOU கையெழுத்திடப்பட்டது.
தொடர்ந்து மாடியில் கான்பரன்ஸ் ஹாலில் மீட்டிங் நடந்தது. நமது வங்கியின் சேர்மன் மிகுந்த உற்சாகத்தோடும் மன நிறைவோடும், இந்த சாதனைகளுக்குப் பொறுப்பான ஐ.ஓ.பி அதிகாரிகள், பி.எஸ்.என்.எல் அதிகாரிகளை பாராட்டினார். ஐ.ஓ.பி MD யின் வருகை, பாண்டியன் கிராம வங்கியின் வரலாற்றில் மிக முக்கியநாள் என்றும், அவரது முன்னிலையில் இக்காரியங்கள் சாத்தியமாகியிருப்பது பெருமையென்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஐ.ஓ.பி எம்.டி, “பாண்டியன் கிராம் வங்கி மேலும் சாதனைகள் நிகழ்த்தும்” என்று வாழ்த்தியவர், “இந்தக் காரியங்கள், பாண்டின் கிராம வங்கியில் பணி புரிகிற அனைவராலும்தான் சாத்தியமானது” என்று மறக்காமல் குறிப்பிட்டார். பாண்டியன் கிராம வங்கி பொதுமேலாளர்கள் இருவரும் தொகுத்தும், நன்றி கூறியும் நிகழ்ச்சியில் பங்கு வகித்தனர்.
அந்தக் காட்சிகள்-
இது போன்ற விழாக்கள் மூலம், நமது வங்கியின் பேரையும், நடவடிக்கைகளையும் பொதுவெளியில் பிரபலப்படுத்துகிறோம் என்பதில் நமக்கு ஒன்றும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், மார்ச் 2011 லேயே நமது வங்கி 100% CBS ஆனாலும், அதை ஐ.ஓ.பி MDயினால்தான் உறுதிசெய்யப்பட வேண்டும் என ஏறத்தாழ 5 மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இனி கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கிடைக்க எத்தனை காலமோ?
சக தோழர்களையும், நம் மக்களையும் பார்த்ததில் சந்தோஷமிருப்பினும், இதுபோன்ற நிகழ்வுகளிலும், விழாக்களிலும் ஒரு வெற்றுப் புன்னகையோடுதான் நாம் நிற்க வேண்டியதிருக்கிறது!
விழா முடிந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்டது இந்தக் காட்சி!
SUPER..
ReplyDeleteNEFT FACILITY COME MEANS..?
HOW..?
ITS ONLY TRANSFER TO IOB TO PGB OR ANY BANK TO PGB..?