நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் அறைகூவலை ஏற்று நமது வங்கியின் தலைமையலுவலகம் முன்பாக 6.9.2011 அன்று தர்ணா நடந்து முடிந்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டம் நமத உறுதியையும், சமரசமற்ற முயற்சியையும் உணர்த்தியிருக்கிறது.
பென்ஷன், வணிக வங்கிக்கு இணையான அலவன்சுகள், தற்காலிக பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும், வங்கியின் நிர்வாகக்குழுவில் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் பிரதிநிதிகள் வேண்டும் போன்ற கோரிக்கைகள் கோஷங்களாக எழும்பி இருக்கின்றன.இதேநாளில் தேசம் முழுவதும் அனைத்து கிராம வங்கிகளின் தலைமையலுவலகங்கள் முன்பாகவும் இதே குரல்கள் எதிரொலித்திருக்கின்றன.
போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை. நமக்கான, நம் எதிர்காலத்துக்கான போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தோழர்களையும் PGBEAவும், PGBOUவும் பெருமையுடன் பார்க்கிறது...
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!