21.9.11

PGBOU Circular 15.9.2011



பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்

(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)

------------------------------------------------------------------------------
website: www.pgbea.net    email:  pgbea.vnr@gmail.com, gspgbou@gmail.com
------------------------------------------------------------------------------

சிறப்புச்சுற்றறிக்கை எண் : 1/2011 நாள்: 15.9.2011


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

“வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், முருங்கை மரத்தை வெட்டி தரையிறக்க கிளம்பிவிட்டான்...” சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்த கதையின் கடைசி வரி இது.
திட்டமிடல் துறையின் சமீபத்திய சர்க்குலர் (எண்:22/2011-2012, தேதி: 30.08.2011) படித்தபின்பு மேற்சொன்ன வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது.

ஒவ்வொருமுறை நிர்வாகம் மாறும்போதும், அரசால் அனுமதிக்கப்பட்ட சனி மதியம், ஞாயிறு ஆகிய ஓய்வு நாட்களில் மேனேஜர்ஸ் மீட்டிங் போடுவதும், சற்றும் ஓய்வு என்பதே  இல்லாமல் வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், அதை நாம் தடுத்து நிறுத்துவதும் வரலாறு.

இவ்வளவுக்குப் பிறகும், சனிக்கிழமை மதியம், ஞாயிறு முற்பகலிலும் கட்டாயமாக (should) டெப்பாசிட் கேன்வாசிங்குக்கு செல்ல வேண்டும் என திட்டமிடல் துறை சுற்றறிக்கை வாயிலாக நம்மைக் கட்டாயப்படுத்துகிறது.

பாண்டியன் கிராம வங்கி எங்களின் வங்கி. எங்களின் உழைப்பால் உயர்ந்த வங்கி. எல்லா வேலை நாட்களிலும் இந்த வங்கிக்காக இரவுபகல் பாராமல் உழைக்கிறோம். நாம் உழைக்காமல், மந்திரத்தில் ஒன்றும் 5000 கோடி வணிகம் வரவில்லை.

இன்னும் சொல்லப்போனால், மணியைப் பார்த்து வேலை பார்க்கும் கலாச்சாரம் நமது வங்கியில் கிடையாது. எந்த நேரமும், வங்கிக்காக உழைப்பவர்கள் நாம். பலமுறை மேனேஜர்ஸ் மீட்டிங் இரவு 9 மணிக்கு மேல் நடந்தபோதும் கூட நாம் முகம் சுளிப்பதில்லை. நம்மை வழிநடத்தவும், ஆலோசனை கூறவும் வங்கி அதிகாரிகள் நம்மைத் தேடி வருகிறார்கள், எப்போதாவது வருகிற அவர்களுக்காக ஒருநாள் நெடுநேரம் காத்திருப்பதில் தவறு இல்லையென நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். ஒருவேளை அதுதான் நாம் செய்த முதல் தவறோ எனத் திரும்பிப் பார்க்கிற சூழ்நிலையை திட்டமிடல்துறையின் சுற்றறிக்கை உருவாக்கியுள்ளது என்றால், அதுதான் உண்மை.

இத்தருணத்தில், நிர்வாகத்திற்கு நமது வேண்டுகோள்.
அரசால் அனுமதிக்கப்பட்ட ஓய்வு நாட்களில் வேலைசெய்யுமாறு கட்டாயப்படுத்துவதை பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் கொள்கை ரீதியாக கடுமையாக எதிர்க்கிறது.

உழைக்கும் வர்க்கத்திற்கு ஓய்வு அனுமதிக்கப்படுவதன் நோக்கமே, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் வேலை செய்யத்தான் என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஓய்வற்ற வேலைப்பளு மனச்சோர்வை உருவாக்கும். எனவே மனச்சோர்வை உண்டாக்கும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் வங்கிக்கு பெருமை சேர்க்காது.

இது சம்பந்தமாக நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தின் நகல் இத்துடன் இனைக்கப்படுகிறது.

தோழமையுடன்



   
(T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBOU
------------------------------------------------------------------------------------

Pandyan Grama Bank Officers Union
(144/KMR) (affi: AIRRBEA & NFRRBO)
C.O colony, Near collectorate, Virudhunagar

To

The General Manager (A)
Pandyan Grama Bank
Administrative Office
Virudhunagar

Respected Sir,

Compelling PGBIANs to work on Government declared holidays - Our protest -reg

we refer to Planning Department Circular no22/2011-12 dated 30.8.2011 compelling all urban and semi urban branches should go for deposit canvassing in the afternoon of all saturdays and forenoon of all sundays. In this regard, we submit to state the following for your kind perusal and favourable consideration.

1.Recently our bank has crossed Rs.5000 crore business due to the hard work and sincere efforts of all PGBIANs in deposit canvassing and promoting PGB products on all working days.

2.As in the yester years, we assure you sir, our PGBIANs will certainly gear up our hard work doubly to achieve the target fixed for the year 2011-2012. We will also motivate our members by way of conducting periodical meetings and issuing circulars.

3. Most of PGBIANs working at far-away branches are having the oppurtunity to visit their home town/family only on saturday night and sunday forenoon. In this circumstances, compelling the PGBIANs to serve on saturday afternoon and sunday will morally frustrate them.

4.Hence, we register our strong protest for compelling  the urban and semi urban branches to work/canvass deposit/promote pGB product on declared Govt. holidays.

Thanking You,

Yours faithfully

(T.Sankaralingam)
General Secretary

-----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!