1.1.12
2012 புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2011 முடிவடைந்துவிட்டது.
கடந்த ஆண்டின் நாட்கள் நினைவுகளில் நீச்சலடிக்கின்றன.
CBS என்னும் புதிய தொழில்நுட்பத்திற்குள் காலடி எடுத்துவைப்பதாய் ஆரம்பித்த 2011, நமது மாநாடுகள், ஆட்கள் பற்றாக்குறையால் கடும் பணி நெருக்கடிகள், புதிய பணிநியமனங்கள், மாறுதல்கள் என கடந்து இருக்கிறது. நாம் மிகுந்த பொறுமையோடும், நிதானமாகவும் அவைகளை எதிர்கொண்டு இருக்கிறோம்.
பென்ஷன் என்னும் நமது எதிர்காலத்திற்கான வெளிச்சம் மிக அருகில் நெருங்கியிருக்கிறது. Amalagamationகள் அறிவிக்கப்பட்டு மாநில அளவில் ஒரே கிராம வங்கியாக மாறும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
ஏராளமான கிராம வங்கிக் கிளைகள் திறக்கப்பட இருக்கின்றன. புதிய பணிநியமனத்திற்கும், பதவி உயர்வுகளுக்கும் வாய்ப்புகள் உருவாகக் கூடும்.
நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதமாக வங்கித்துறையை சீர்குலைக்க மத்திய அரசு ஏற்பாடுகள் செய்துவருகிறது. இருதரப்பு ஒப்பந்தங்களே இல்லாமல் போகச் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. அவற்றை முறியடிக்க வேண்டிய கடமையும் நம்முன் இருக்கிறது.
2011 முழுவதுமே எந்த பொருளாதார கோரிக்கைகளையும் நிர்வாகம் நமக்கு நிறைவேற்றிடவில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மையாய் முன்நிற்கிறது. கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஆண்டாக 2012ஐ முன்வைத்து நகர வேண்டியிருக்கிறது.
கனவுகளோடும், கோரிக்கைகளோடும், நம்பிக்கைகளோடும், சவால்களோடும் 2012 நம்முன் வந்து நிற்கிறது.
அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவோம். வெப்பம் கொள்வோம்.
தோழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(இனி, நமது வெப்சைட் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு, செய்திகளைப் பரிமாறும் களமாக விரிவடையும்)
Subscribe to:
Post Comments (Atom)
தோழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeletehappy new year
ReplyDelete