4.4.12

PGBEA-PGBOU success stories -1



நேற்று (3.4.2012) பொதுமேலாளர் (A) அவர்களை நேற்று நமது சங்கங்களின் தலைமையிலிருந்து சந்தித்தோம். அப்போது, நாம் முன்வைத்த சில முக்கிய கோரிக்கைகளை, நிர்வாகம் நிறைவேற்றியிருக்கிறது என்பதைத் தெரிவித்தார்.

1. Messenger to clerk promiotionல் கல்வித்தகுதியாக 10th pass இருக்க வேண்டும் என நிர்வாகம் சொல்லியது. நாம் இதனை கடுமையாக ஆட்சேபித்தோம். புதிய  பிரமோஷன் பாலிசிக்கு முன்பே, மெஸஞ்சரான தோழர்களுக்குத்தான் இந்த புதிய கல்வித்தகுதி. அதற்கு முன்பே மெஸஞ்சர்களாய் ஆனவர்களுக்கு பழைய கல்வித்தகுதிதான் என தெரிவித்தோம். நிர்வாகம் சம்மதிக்கவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு சேர்மனை சந்தித்து, “இது சரியில்லாத நடைமுறை’ என விளக்கினோம். சென்ற வருடம் இதே புதிய பாலிசி படி பிரமோஷன் நடந்தாலும், கல்வித்தகுதியாக மெஸஞ்சர்களுக்கு 10th pass  இருக்கவேண்டும் என சொல்லப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம். “சென்ற முறை தவறு செய்தால் இந்த வருடமும் தவறுதான் செய்ய வேண்டுமா? இந்த தடவை அந்தத் தவறை சரி செய்கிறோம்” என்றெல்லாம் நிர்வாகத்தரப்பில் பதில்கள் சொல்லப்பட்டன. நாம் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. நிர்வாகத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுதினோம். தொடர்ந்து நமது சமீபத்திய சுற்றறிக்கைகளில் எழுதி, தோழர்களுக்கு உண்மையை எடுத்துகூறினோம்.

அதன் விளைவாய் இப்போது, கல்வித்தகுதி 10th pass  என்பது விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இது நமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி. இங்கே நம்மைத் தவிர வேறு யாரும் குரல் எழுப்பவில்லை எனபதையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.


2. பிரமோஷன்கள் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டாலும்,  Messenger to clerk promiotionக்கான தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. புதிய பணி நியமனப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில், கிளர்க்குகள் ஆபிஸர்கலாகி, மெஸஞ்சர்கள் கிளர்க்குகளாகாமல் இருந்தால் இந்த வங்கியில் கடுமையாக பணிகள் பாதிக்கப்படும், லீவு எடுக்க முடியாது, டெபுடேஷன்கள் ஏற்பாடு செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டி இருந்தோம். நிர்வாகம் இதனை ஏற்றுக்கொண்டு, messenger to clerks மற்றும் clerk to promotionகளை மட்டும் ஒன்றுபோல் நடத்தி முடிக்கும் என சொல்லி இருக்கிறது.

3. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாய் நாம் exserviceமென்  pay fitmant குறித்து கோரிக்கை வைத்து பேசிக்கொண்டு இருந்தோம். ‘ஸ்பான்ஸர் வங்கிக்கு எழுதி இருக்கிறோம்.’, ‘நபார்டுக்கு எழுதியிருக்கிறோம்’ என நிர்வாகம் சொல்லியது. இவ்விஷயத்தில் நிலவும் காலதாமதத்தைச் சுட்டிக்காட்டி நமது அதிருப்தியை தெரிவித்தோம். இப்போது இந்த கோரிக்கையும் சாதகமாகி இருக்கிறது. சம்பந்தப்பட்ட தோழர்களுக்கு, pay protect  செய்து கொடுப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டன. முதற்கட்டமாக, exservicemen  தோழர்களிடமிருந்து, சில particulars  நிர்வாகம் கேட்டு இருக்கிறது.

தோழர்களே, இதுவும் நமது இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி.

4. பணி ஓய்வு பெறும் சமயத்தில், ஊழியர்களோ அலுவலர்களோ, அந்த வருடத்தில் எத்தனை மாதம் பணிபுரிகிறார்களோ, அத்தனை நாட்கள்தாம் கேஷுவல் லீவு எடுக்க வேண்டும், அதற்குமேல் எடுத்தால் அதற்கான ஊதியம், அவர்களது ஓய்வூதிய சலுகைகளில் இருந்து கழிக்கப்படும் என்று ஒரு நியதி வைத்திருந்தது. ஆனால், பணி ஓய்வு பெறுகிற ஒருவர் ஜனவரி மாதத்திலிலேயே, 12 நாட்கள் கேஷுவல் லீவு எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் நியதி. இந்த நியாயத்தை வலியுறுத்தியும், நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்தும் குரல் எழுப்பியிருந்தோம். இப்போது நிர்வாகம் இதனையும் ஒப்புக்கொண்டு, சரி செய்வதாக சொல்லியிருக்கிறது.

தோழர்களே, இவையாவும், PGBEA, மற்றும் PGBOUவின் சாதனைகள் ஆகும். நாம்  ஆர்ப்பாட்டமில்லாமல், அதே நேரம் அழுத்தமாக நமது கடமைகளைச் செய்து வருகிறோம். தொடர்ந்து செய்து வருவோம். ஆனால் தொழிற்சங்கங்கள் என்ற பேரில் இருக்கும் சில வியாபாரிகள் இதுகுறித்தெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் எந்த உபகாரமும் செய்யாமல் ரூ.1000/, ரூ.2000/- என ஆரம்பித்து ரு.10000/- வரை ஊழியர்கள், அலுவலர்கள், அப்ரைசர்களிடம் வசூல் செய்து வருகிறார்கள். நமது மக்களும் பணம் கொடுக்கிறார்கள். அவர்களிடம் உறுப்பினர்களாகுகிறார்கள். இதுதான் வேதனை.

யார், சங்கமாக செயல்படுகிறார்கள், யார் ஊழியர்களுக்காகவும் அலுவலர்களுக்காகவும் நிற்கிறார்கள், யார் நிர்வாகத்துடன் சமரசமின்றி இயக்கம் நடதுகிறார்கள் என்பதை இங்குள்ள அனைவரும் உணரவேண்டும். மனசாட்சி உள்ளவர்கள் , உண்மை அறிவார்கள்.

1 comment:

Comrades! Please share your views here!