23.4.12

PGBOU talks with Chairman on 23.4.2012



3.4.2012, இன்று மாலை, நமது வங்கிச் சேர்மன் அவர்களுடன், PGBOU பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. சில முக்கியமான, அடிப்படையான விஷயங்கள் பேசப்பட்டன. சுமூகமாகவும், தீர்வுகளை நோக்கியும் இந்தப் பேச்ச்சுவார்த்தை அமைந்திருக்கிறது.

1. சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற தோழர்கள் சிலருக்கு சார்ஜிஷீட் கொடுக்கப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு ஓய்வுகாலச் சலுகைகள் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அவர்களுடைய PF தொகையைப் பெறுவதற்கான அப்ளிகேஷனையும், PF Officeக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தப் பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டது. உடனடியாக PF அப்ளிகேஷன்கள் அனுப்ப ஏற்பாடு செய்வதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

2. கிளைகளில் ஜெனரேட்டர் இல்லாமல், பணி செய்வதில் இருக்கும் சிரமங்கள் முன்வைக்கப்பட்டன. இன்வெண்டர் வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நம் தரப்பு நியாயம் உணர்ந்த சேர்மன், “கிளைகளில் இன்வெண்டருக்கு பதிலாக solar சிஸ்டம் வைக்கலாமே” என்றார். நாம்  நிர்வாகத்தரப்பிலிருந்து வந்த யோசனையை வரவேற்றோம். இந்த யோசனை உடனடியாக செயல் வடிவம் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

3. பொருளாதாரக் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்படாமலேயே இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பேலன்ஸ் ஷீட் approve ஆனதும், நிச்சயம் சில பொருளாதாரக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நிர்வாகத்தரப்பில் சேர்மன் உறுதியளித்தார்.

4. பிரமோஷன் குறித்தும், அதில் சீனியாரிட்டிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதும் OU தரப்பில் விளக்கிப் பேசியுள்ளனர். சென்ற பிரமோஷனை விட இந்த பிரமோஷன் நன்றாகவும், நேர்மையாகவும் இருக்குமென நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது. மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.  “மதிப்பெண்களை வெளியிடுவதில் நிர்வாகத்திற்கு எந்த சிரமுமில்லை, ஆனால் சில அலுவலர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு தர்மசங்கடங்களை ஏற்படுத்தும். அதைத் தவிர்க்கவே மதிப்பெண்களை வெளியிட முடியவில்லை.” என சேர்மன் தெரிவித்தார்.

5. மாறுதல்கள் குறித்து மிக விரிவாக பேசப்பட்டது. டிரான்ஸ்பர் லிஸ்ட் கொடுக்கச்  சொன்னார் சேர்மன். முடிந்தவரை சாதகமாகச் செய்து தருவதாக நிர்வாகத் தரப்பில் நம்பிக்கையளிக்கப்பட்டு இருக்கிறது.

6. பல கிளைகள் போதுமான பணிச்சூழல் இல்லாமலும், தேவையான ஃபர்னிச்சர்கள் இல்லாமலும் இருப்பது குறித்த கவலை சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. “சங்கத்திலிருந்து ஒவ்வொரு Regionக்கும் பத்து கிளைகள் செலக்ட் செய்து சொல்லுங்கள். முதற்கட்டமாக அவைகளை fully furnished  ஆக ஆக்கித்தருகிறோம்” என நிர்வாகத்தரப்பில் சேர்மன் உற்சாகமாய்ச் சொன்னார்.

7. கிளைகளில் no frill account open  செய்வதில் இருக்கும் சிரமங்களையும், ஆபத்துக்களையும் நமது சர்க்குலரில் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அவைகள் சேர்மனிடம் எடுத்துரைக்கப்பட்டன. ஒப்புக்கொண்ட சேரம்ன், அனைத்துக் கிளைகளுக்கும் பிரத்யேக குழுக்கள் அனுப்பி, அவைகளை ஆராய்ந்து சரி செய்ய ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார்.

8. சங்கத்தின் சார்பில் நிர்வாகத்துக்கு எதிராக ஏராளமாய் வழக்குகள் தொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அவைகளால் நிர்வாகத்துக்கு பல சிரமங்களும், பொருட்செலவுகளும் ஏற்படுவதாக நிர்வாகத்தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ‘முடிந்தவரை எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாமே’ என்று சேர்மன் நல்லிணக்கமாய் யோசனை தெரிவித்தார். பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமென்றால் எங்களுக்கு மகிழ்ச்சியே, அது முடியாதபோதுதான் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியிருக்கிறது’ என நம் தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. இருதரப்பிலும், தீர்வு எட்டக் கூடிய வழக்குகள் குறித்து சங்கத்தின் சார்பில் பரிசீலிப்பதாகவும் சொல்லப்பட்டது.

PGBOU சார்பில் அதன் தலைவர் தோழர். போஸ்பாண்டியனும், பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கமும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ‘இன்று உலகப் புத்தக தினம்’என்பதைக் குறிப்பிட்டு சேர்மனுக்கு ஒரு புத்தகத்தை ஒரு நினைவுப்பரிசாக அளித்திருக்கிறார்கள். சேர்மன் அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டிருக்கிறார். டெல்லியில் 26ம் தேதி AIRRBEA சார்பில் நடக்க இருக்கும் தர்ணா, செமினார் குறித்தும் சேர்மனிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் எல்லோருக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டுமென சேர்மன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!