பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நமது அகில இந்திய சங்கம் நடத்தி வரும் இயக்கத்தை நமது சர்க்குலரில் தெரியப்படுத்தி இருந்தோம். அதன் அடுத்தக் கட்டமாக, 26.4.2012 அன்று டெல்லியில் கிராம வங்கி ஊழியர்கள் திரளுவது என்றும், கருத்தரங்கம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இவ்வியக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக நாடெங்கிலுமிருந்து ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தோழர்கள் டெல்லியை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழகத்திலிருந்து 20 தோழர்கள் டெல்லியில் முகாமிட்டு இருக்கின்றனர்.
நமது கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதற்காக ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட தமிழக எம்.பிக்களை சந்தித்துப் பேசியிருக்கிறோம். அவர்களும் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதி வருகின்றனர். இன்று 25.4.2012 அன்று மேலும் மூன்று எம்பிக்கள் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களை சந்தித்துப் பேசிய காட்சிகள் இங்கு....
With DMK M.P sri. Sugavanam
With DMK M.P sri. Aathisankar
With DMK M.P sri. Ramalingam
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!