20.5.12

Madurai and karaikudi regional meetings

தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மண்டலக் கூட்டங்கள் நடந்து முடிந்தவிட்ட நிலையில், நேற்றும் (19.5.2012), இன்றும் (20.5.2012) மதுரை மற்றும் காரைக்குடி வட்டாரக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

தோழர்களின் உற்சாகமான பங்களிப்பும், விவாதங்களில் தெரிவித்த கருத்துக்களும் சங்கத்திற்கு எழுச்சியளிக்கக் கூடியதாக அமைந்திருந்தன.

இன்றைய வேலப்பளு, மன அழுத்தம், பதற்றம் கூடிய பணிச்சூழல் குறித்தே பெரும்பான்மையான தோழர்களிடமிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டன.

சேர்மனோடு அமைந்த courtesy call  நல்ல தொடக்கமாக கருதப்பட்டாலும், இது போன்ற சூழல் தொடர்ந்து நீடிக்குமா என சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன.

Recruitment, Promotion, Transfers எல்லாம் எந்த முடிவுமற்று, தெளிவற்று இருக்கும் சூழல் கடும் அதிருப்தியை தோழர்களிடையே எழுப்பியிருக்கிறது.

வரக்கூடிய காலங்கள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. நாம் ஒற்றுமையோடும், சமரசமற்ற பார்வையோடும் அவைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் ஒட்டு மொத்த கருத்தாக உருவாகி இருக்கிறது.

ஜூன் 8ம் தேதி நமது அகில இந்திய வேலை நிறுத்தத்தை பெரும் வெற்றியாக்குவதன் மூலம் நமது சக்தியை உணர்த்த வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

ஐந்து மண்டக் கூட்டங்களிலும் வந்திருக்கும் தோழர்களின் கருத்துக்களை தொகுத்து அதன் அடிப்படையில் நமது செயற்குழுக்கள் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும்.

மதுரை, காரைக்குடி மண்டலக் கூட்ட காட்சிகள்...


மதுரை









காரைக்குடி










No comments:

Post a Comment

Comrades! Please share your views here!