10.5.2012 அன்று தலைமையலுவகத்திற்கு IOB ED மற்றும் GM வருவதையொட்டி விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தோரணம், பந்தல் என தடபுடலாக வரவேற்கப்பட்டு இருந்தனர். சிறப்பாக செயல்பட்டு வரும் கிளை மேலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். (ஆனால் அப்படி வந்தவர்கள் சிலர் சமீபத்து பதவி உயர்வில் கழிக்கப்பட்டவர்களாயிருந்தனர்.)
அன்று, நமது PGBEA, PGBOU செயற்குழு உறுப்பினர்களும் தலைமையலுவலகத்திற்கு mass deputation சென்றோம். Memorandum Day என்னும் பேட்ஜ் அணிந்து, நமது இயக்கத்தை துவக்கினோம்.
வந்திருந்த ஐ.ஓ.பி உயரதிகாரிகளோடு பிஸியாக இருந்தார் சேர்மன். வங்கியில் நமது உழைப்பில் நிகழ்ந்த காரியங்கள் அவரது சாதனைகளாக அரங்கேற்றப்பட்டன. (ஆனாலும் இந்த மொபைல் வேனையும், சூரிய அடுப்பையும் காண்பித்து காண்பித்து, இன்னும் எத்தனை பேரோடு, எத்தனை முறைதான் படம் எடுக்கப் போகிறார்களோ!)
நாம் mass deputationஆக பொது மேலாளரை சந்தித்து மெமொரெண்டம் கொடுத்தோம். மாலையில் கோரிக்கைகளை விளக்கி வாயிற்கூட்டம் நடத்தினோம்.விரிவான செய்திகளும், மெமொரெண்டமும் நாளை நமது வெப்சைட்டில் வெளியிடப்படும்.
படங்களும், வீடியோக்களும் இங்கே.....
வீடியோ
அண்ணே பின்னி பெடல் எடுத்துட்டீங்க!!!சூப்பரோ சூப்பர்
ReplyDeleteநன்றி தோழரே!
Deleteஎல்லாம் சரிதான்.கொஞ்சம் போன் பண்ணி சொல்லக்கூடாதா தோழர்.ஒரு வேளை தொடர்பு இல்க்கிற்கு அப்பால் இருக்கிறேனோ?
ReplyDeleteதோழா... இந்த இயக்கத்தில் EA-OU செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பது என கூட்டுச் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டதனால் மற்ற தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. தாங்கள் வருத்தப்பட வேண்டாம்.... ஒரு நெடும் இயக்கத்தின் துவக்கம் தான் இது.... போருக்கான தயாரிப்பு முரசுதான் ஒலிக்கப்பட்டுள்ளது.... போர்களங்கள் நமக்காக காத்திருக்கவே செய்கிறது. படைக்கு பிந்தி விடாதீர்கள்!!!!
Deleteதோழர் அண்டோ சொல்லியிருப்பது உண்மைதான். இது ஒரு துவக்கமே. செயற்குழு உறுப்பினர்கள் முன்னிற்க அணி திரளுவோம்!!!!
Delete