சமீபத்தில் messenger to clerk ஆக பதவி உயர்வு பெற்ற நம் அருமைத் தோழர். பழனியப்பன் இன்று மாலை காலமாகிவிட்டார்.
பதவி உயர்வையொட்டி, அவருக்கு கோனாபட்டிலிருந்து ரெகுநாதபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. இன்று (25.6.2012) மாலை வங்கிப்பணி முடித்துவிட்டு, ஊருக்கு ரெயிலில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து இறந்துவிட்டதாக தோழர்கள் தகவல் சொல்கின்றனர்.
மிகுந்த வேதனையாகவும், தாங்க முடியாத சோகமாகவும் இருக்கிறது.
நமது ஒவ்வொரு இயக்கத்திலும், போராட்டங்களிலும், கூட்டங்களிலும் கலந்துகொண்ட அந்த அற்புத மனிதரின் முகம் நிழலாடுகிறது. முப்பது வருடங்களாக நம்மோடு பழகி, சிரித்தவர் இன்று இல்லை!
Messenger to clerk பதவி உயர்வையொட்டி, நமது சங்கம் நடத்திய trainingல் அவரைப் பார்த்ததும், மாறி மாறி அவரிடம் கேள்விகள் கேட்டு, அவருக்கு ஆங்கிலத்தைச் சொல்லித் தந்ததும் நினைவில் ஆடுகின்றன.
“நீச்சலுக்கு என்று ஆற்றுக்குப் போனவனை
உள்வாங்கும் சுழி;
அதைக் கண்டும் காணாமல் போகும் நதி”
என்ற கவிதை வரிகள் வந்து அவஸ்தை செய்கின்றன.
அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்குஆறுதல் சொல்வோம்!
விதியின் வழி இழுத்து செல்கிற வாழ்க்கை என இதைத்தான் சொல்கிறார்களா? கிடைத்த பலனை அனுபவிக்கக்கூட வாய்க்கப்பெறாமல் காலமாகிப்போனார்.அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அஞ்சலி/
ReplyDeleteதிரு பழனியப்பன் அவர்கள் குடும்பத்தினருக்கு அஞ்சலி.
ReplyDeleteநமக்கெல்லாம் வயது ஏறிக்கொண்டேயிருக்கிறது. வாகனத்தில் செல்லும் போதும் சரி மற்ற பயணங்களிலும் சரி கவனமாக பயணம் செய்வதுடன், சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.
அஞ்சலி என்ற ஒரு வார்த்தையில் இரங்கலை அள்ளித் தெளித்துவிட்டு செல்ல முடியவில்லை.....இப்படி ஒரு வயதில் என் தாயையும் இழந்ததாலோ என்னவோ தெரியவில்லை....அவரது பிள்ளைகளில் ஒருவனாய் என்னையும் இருத்தி பார்க்க வைக்கிறது மனது.ஒரு குடும்பத்தின் ஆதாரமாய் இருந்த ஒரு உயிர் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது உழைப்பை உறுஞ்சி தன்னை வளர்த்து கொண்டிருக்கும் அரசு எந்திரம் மௌனமாய் தன் உதட்டோரம் சுவைத்து முடித்த இரத்த துளிகளை துடைத்து விட்டுக் கொண்டு வேடிக்கை பார்பதை சகிக்க முடியவில்லை தோழர்களே! இது போன்ற இழப்புகளை ஈடு செய்ய இயலாது தான் ஆனால் மனிதாபிமான அடிப்படையில் வாரிசு வேலை போன்ற சிறுசிறு உதவிக்கரங்களையும் வெட்டி எடுத்துக் கொண்ட ஆணவமிக்க இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரிகொடுத்த நம் உரிமைகளை மீட்டிட நாம் கரம் கோர்க்கவில்லை எனில் நாம் இழப்பதற்கு இன்னும் நிறையவே இருக்கிறது.....
ReplyDeleteதோழர். பழனியப்பன் இறுதிச்சடங்குக்குப் போய்விட்டு இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். தோழர்.சோலைமாணிக்கம், வைரவன், அண்ணாமலை, நாச்சியப்பன், பழனியப்பன், ஆண்டியப்பன், விஜயலட்சுமி, கிருஷ்ணன் போன்றோர் வந்திருந்தனர்.
ReplyDeleteதாங்க முடியாத வலி அலைக்கழிக்கிறது. பார்த்தவுடன் ‘தலைவரே’ என்று அழைக்கும் அவரது குரலும், சிரித்த முகமும் நினைவில் வந்து வந்து வாட்டுகிறது. மிகப்பெரிய துயரம், எவ்வளவு சாதாரணமாக நிகழ்ந்துவிடுகிறது.
போஸ்ட் மார்ட்டம் எல்லாம் முடிந்து, சுடுகாட்டில், இறுதிச்சடங்குகள் மதியம் இரண்டரை மணி வாக்கில் நடந்து முடிந்தது. அவருக்கு இடப்பட்ட மாலைகளைத் தின்பதற்கு ஆடுகள் வந்து குவிந்திருந்தன. நிர்வாகத் தரப்பில் அதுவரை யாரும் வரவில்லை.!
So Sad...Am ex employee of this PGB...
ReplyDeleteVery Sad news this was. This news was spread like a forest fire in entire PGB within 3 hours after the incident. Very sad moment of PGBEA& PGBOU Family. R.I.P to Mr.Palaniyappan.Please take care all PGBians nowadays road and track incidents are increasing gradually. So follow safety rules and protect ourselves. Because everyone waits for us in our home and they are very eager to expect us to reach the home safely when we r working in Office. So follow traffic rules and take safety precautions.
ReplyDeleteMessage received from Parithi Raja from Pallavan Grama Bank...
ReplyDelete"sudden demise of a co-comrade is certainly a big loss to all. my deep condolence to the family and friends. death is inevitable to all but the thought of com.anto about securing the compassuonate appoimtment is to be taken in our hands. this os the right time to think of that.'