இன்று பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகத்தில், 2012 மற்றும் 2011ம் ஆண்டுகளில், பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நமது ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஒரு நிறைவான, சந்தோஷமான குடும்பவிழாவாக அமைந்திருந்தது. நமது எதிர்காலமான குழந்தைகளின் வரவால், தலைமையலுவலகம் குதூகலம் கொண்டதாக காட்சியளித்தது.
வந்திருந்த அனைவரையும் தோழர் உமா (AIVD) அவர்கள் வரவேற்றார். இந்த விழாவின் சிறப்பு விருந்தினர், சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் சாதனை (490 மார்க்குகள். ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்றாவது இடம்)படைத்திருந்த கணேஷ்வர். தொலைக்காட்சிகளில், குட்டிப் பேச்சாளராக பேர் பெற்றிருக்கும் இவர், இளம் விஞ்ஞானியாக இன்னொரு பரிணாமம் கொண்டு தேசீய அளவிலான அங்கீகாரமும் பெற்று வருகிறார். திசையன்விளை கிளையில் பணிபுரியும் நமது S.சுப்பிரமணியனின் மைந்தர் அவர். அவரை அறிமுகம் செய்து தோழர். சரஸ்வதி (Advances) அவர்கள் பேசினார்கள். தொடர்ந்து கணேஷ்வரை முன்வரிசைக்கு அழைத்து சேர்மன் அறிமுகம் செய்து வைத்து, அவரை உரையாற்றச் சொன்னார். மிக செறிவான ஆங்கிலத்தில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டவிதம் பிரமிப்பூட்டியது. வந்திருந்த அனைவருக்கும் ஒருinspirationஆக அவர் இருந்தார்.
கணேஷ்வரையும், அதிக மதிப்பெண்கள் பெற்று வந்திருந்த குழந்தைகள் அனைவரையும் பாராட்டியும் வாழ்த்தியும் திரு.ஞானப்பிரகாசம் (RM, Tuticorin), தோழர்.மாதவராஜ் (President- PGBEA), திரு.அண்ணாமலை (SM, ARD), திரு.சங்கிலிப்பாண்டி (RM, Sivagangai)ஆகியோர் பேசினர்.
தோழர் மாதவராஜ் தனது பேச்சில், “இளஞர்கள்தாம் நம் நம்பிக்கை, அவர்களோடு இருக்கும் தருணங்கள் நமக்கும் புத்துணர்வைத் தருவதாக இருக்கிறது” என்றும், “இளைய தலைமுறை மீது நமக்கு அவநம்பிக்கைத் தேவையில்லை. அவர்கள் நம் தோள்களின் மீது நிற்பதால் நம்மைவிடவும் சிறப்பாக வருவார்கள்” என்றும் சொன்னார். “இந்தக் கல்வியைத் தாண்டியும் வாழ்வின் அற்புதங்களை புத்தகங்கள் நமக்குக் காட்டுகின்றன” என்று புகழ்பெற்ற அந்தோன் செகாவின் ‘பந்தயம்’ சிறுகதை பற்றி பேசினார். “அறிவினை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப்பார்வயால் விழுங்கு மக்களை, மானிட சமுத்திரம் நானென்று கூவு” எனும் பாரதிதாசன் கவிதையைச் சொல்லி, அந்த மானுடசமுத்திரத்தின் புத்தம்புது அலைகளே இந்தக் குழந்தைகள் என வாழ்த்தினார்.
தொடர்ந்து, வந்திருந்த குழந்தைகள் தயக்கத்தோடு உரையாட ஆரம்பித்தனர். ஆனால் அவர்களது பேச்சில் வெளிப்படைத்தன்மை மிக இயல்பாக இருந்தது. தங்கள் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களை அவர்கள் நன்றியோடு நினைவு கூர்ந்தனர். நமது வங்கியின் சேர்மன் மிகுந்த உற்சாகத்தோடு அவர்களோடு உரையாடியது சிறப்பான விஷயம். அடுத்து, குழந்தைகளின் பெற்றோர் பேச அழைக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கு, Chairman, GM, RM மற்றும் தலைமையலுவலகத்தில் பணிபுரியும் SM கள் பரிசு வழங்கினர். இரண்டு பொதுமேலாளர்களும் வாழ்த்திப் பேசினர்.
வங்கியின் சேர்மன் திரு.சேவியர் செல்வராஜ் அவர்களின் உரை எளிமையானதாகவும், முக்கியமானதாகவும் இருந்தது. இதுபோன்ற விழாக்கள் அவசியம் என்றும், Regional office அளவில் நம் நம் வீட்டுக் குழந்தைகளின் cultural programmeகள் நடத்தப்படுவது ஆரோக்கியமானதாக இருக்கும் எனவும் தொடங்கினார். படித்துப் பட்டம் பெற்று, அவர்கள் PGBக்கு வேலைக்கு வரவேண்டும் என வேண்டுகோள் வைத்தார். Hardworkம், Honestyம் இருந்தால் நாம் நமது இலக்கை நிச்சயமாக அடையமுடியும் என நம்பிக்கையளித்தார்.
இறுதியாக, PAD, SM சுரேஷ், இந்த விழாவினை ஏற்பாடு செய்தது நமது தலைமையலுவலகத்தின் young blood என்பதைக் குறிப்பிட்டு அவர்களை பாராட்டினார். இனி இதுபோன்ற விழாக்கள் தொடர்ந்து இதுபோல் சிறப்பாக நடத்தப்படும் என தெரிவித்தார். வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அனைவருக்கும் dinner ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சந்தோஷமான விசாரிப்புகள், பரிமாற்றங்களோடு, தலைமையலுவலகத்தின் மொட்டை மாடி கலகலவென்று இருந்தது. சுகமான காற்று வீசிக்கொண்டு இருந்தது.
பரிசு பெற்ற மாணவ,மாணவியருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் விழாவை ஏற்பாடு செய்து சிறப்பித்த தலைமையலுவலகத்தின் young blood களுக்குமாய் வாழ்த்துக்கள்.அதெல்லாம் சரி தோழர்.ஒரு சின்ன தகவலாவது வேண்டாமா?
ReplyDeleteதோழர், தலைமையலுவலகத்திலிருந்து கிளைகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. நமது பொதுச்செயலாளருக்கு sms மூலம் தெரிவித்து, அழைப்பு விடுத்திருந்தார்கள். அதன் மூலமாக இந்நிகழ்வினை அறியப்பெற்று நமது வெப்சைட்டில் news in briefலும், Facebookலும் வெளியிட்டு இருந்தோம்.
Deleteஇதயம் நனைந்த இனிய அனுபவம். அகமகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் நம்மவர்கள் கணேஷ்வரை உச்சிமுகர்ந்து மெச்சிய போது ஆனந்தத்தின் அர்த்தம் அறிந்தேன் சேர்மனின் கலந்துரையாடல்களில் அவரது மென்மையும், மேன்மையும் புரிந்தது.அவருக்கும், PAD SM அவர்கள், திருநெல்வேலி RM மற்றும் விழாவினை ஏற்பாடு செய்திருந்த ஒவ்வொரு அன்பு உள்ளத்திற்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றிகள். இவ்வளவு விரைவில் இத்தனை அருமையாய் நம் வலைதளத்தில் பதிவு செய்த தோழர். மாதவராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஇப்படிக்கு
நன்றியுடன்,
S.சுப்ரமணியன்.