30.7.12

PGBEA - PGBOU circular 10/2012 dt 30.07.2012


சுற்றறிக்கை எண்: 10/2012 நாள்: 30.7.2012

அருமைத் தோழர்களே!

கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது!

இது சாதாரண செய்தியல்ல. 1980களின் ஆரம்பத்தில்  'சம வேலைக்கு சம ஊதியம்' என கோரிக்கை வைத்து, 1990களின் ஆரம்பத்தில் வணிக வங்கிக்கு இணையான ஊதியம் பெற்று வந்த நமக்கு ஒரு பெருங்குறை இருந்தது. அது பென்ஷன். வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையாக நமக்கு அரசு வழங்கிடவில்லை. அடுத்தக் கட்டம் போராட்டம் ஆரம்பமாகியது. இதோ 2020களின் ஆரம்பத்தில் அது நம் அருகில் நெருங்கி வந்திருக்கிறது. ஆக, ஒரு 30 வருட வரலாறும், பின்னணியும் இந்த செய்திக்கு உண்டு. இதனை சாத்தியமாக்கிய பெருமையும், வரலாறும் AIRRBEAவையேச் சேரும். அப்படி ஒரு வீரியத்தோடும், விடா முயற்சியோடும் போராடியது AIRRBEA. இதனை யாரும் மறுத்திட முடியாது.

கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல ஒரு Pension schemeஐ உருவாக்குமாறு,  இப்போது நபார்டுக்கு பொறுப்பு அளித்திருக்கிறது நிதியமைச்சகம். Pension scheme உருவாக்கப்பட்டவுடன்  அதற்கு ஒப்புதல் அளித்து அரசு ஆணை பிறப்பிக்கும். அதன் பிறகு ஒவ்வொரு வங்கியின் நிர்வாகக் குழு (BOARD of Directors)வில் வைத்து அந்தந்த கிராம வங்கிகளில் அமல்படுத்தப்படும்.   ‘Loss making RRBகளுக்கு கிடையாது, employees sharing 30% இருக்க வேண்டும்' என்கிற நிபந்தனைகளை  அரசு விதித்துக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. அவைகளையும் AIRRBEA சரிசெய்யும். அதற்கான திட்டங்களும், பார்வைகளும் AIRRBEAவிடம் இருக்கின்றன.

வணிக வங்கிகளில் அமல்படுத்தப்பட்டு இருக்கிற பென்ஷன் குறித்த அடிப்படையான விஷயங்களை, பென்ஷனை கணக்கிடும் முறையை, அதன் விதிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். PGBEAவும்,  PGBOUவும் அதற்கான ஒரு சிறப்புக் கருத்தரங்கத்தை நடத்துவது என முடிவு செய்திருக்கின்றன.


பென்ஷன் சிறப்புக் கருத்தரங்கம்


நாள் 
05 - 08- 2012 (ஞாயிறு)


இடம் 
AVKC கல்யாண மஹால், 
தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன் அருகில், மதுரை
(மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையங்களிலிருந்து பஸ்கள் உண்டு.)





இந்த கருத்தரங்கில் நமது வங்கியின் சேர்மன் திரு.M.சேவியர் திலகராஜ் அவர்கள் வந்து வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார். கர்நாடக ஹைகோர்ட்டில் AIRRBEA வழக்குத் தொடர்ந்து அதில் பெற்ற வெற்றி, நமக்கு பென்ஷனுக்கான நம்பிக்கையளித்தது. அந்த மாநிலத்தின், AIRRBEAவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோழர்.நாகபூஷண்ராவ் வர இருக்கிறார். வணிக வங்கிகளில் இருக்கும் பென்ஷன் குறித்து மிக ஆழமான புரிதல்களோடு இருக்கும் BEFI-TN  தமிழ் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான தோழர். சி.பி.கிருஷ்ணன் கலந்து விளக்கம் தருகிறார்.  நமது வங்கியின் ஓய்வு பெற்ற தோழர்கள் சார்பில் அந்த அமைப்பின் Adhoc  கமிட்டி கன்வீனர் தோழர்.சந்திரசேகர் கலந்துகொண்டு நம்மோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள இருக்கிறார்.

பென்ஷன் நமக்கு சாத்தியமாகி இருப்பதைக் கொண்டாடுவதாகவும், அந்த பென்ஷன் குறித்து நமக்கு இருக்கும் கேள்விகள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதாகவும் இந்தக் கருத்தரங்க நிகழ்வுகள் இருக்கும்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடரும் இந்த ஒருநாள் பென்ஷன் சிறப்புக் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகள் ஒரு மாநாட்டு அளவில் நடைபெற்று வருகின்றன. ஓய்வு பெற்ற தோழர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். பல்லவன், பாரதியார் கிராம வங்கிகளிலிருந்தும் எராளமான தோழர்கள் வருவதாக இருக்கின்றனர். நமது வங்கியிலும் சங்க பேதமின்றி அனைவரும் வந்து கலந்து கொள்ள அழைக்கிறோம்.

இந்தக் கருத்தரங்கத்தை PGBEAவும், PGBOUவும் நடத்துவதாக இருந்தாலும், இதன்  செய்திகளும், தன்மைகளும் அனைவருக்கும் பொதுவானவை. 



ஒரு பெருங்கனவு நிறைவேற இருக்கிறது. அதனைக் கொண்டாடுவோம்.

காலம் கனிந்திருக்கிறது. அதனை கைவசப்படுத்துவோம்.

ஒரு விரிந்த தளத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம்.

வாருங்கள்.... அனைவரும் வாருங்கள்.


தோழமையுடன்


   
(M.சோலைமாணிக்கம்)                                   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                      பொதுச்செயலாளர் - PGBOU

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!