25.7.12

PGBOU circular dated 25.7.2012




பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
விருதுநகர்


சுற்றறிக்கை எண் : 3/2012                                                    நாள் : 25.7.2012


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

ஆபிஸர்கள் டிரான்ஸ்பர்களில்  நிர்வாகம் செய்த காலதாமதத்தை விளக்கி சென்ற சர்க்குலர் வெளியிட்டு இருந்தோம். அதுகுறித்து தோழர்களிடம் கருத்துக்கள் கேட்டு இருந்தோம்.  அதிக அளவில், தோழர்களிடமிருந்து ஆழமான கருத்துக்கள் வந்திருந்தன. இதுதான் நமது சங்கத்தின் ஆதார சுதி. நமது செயற்குழு பெருமைப்படுகிறது.

சென்ற ஞாயிறு, 22.7.2012 அன்று நமது சங்க செயற்குழு கூடி, வந்திருந்த கருத்துக்களின் அடிப்படையில், இப்பிரச்சினையை விவாதித்தது. தெளிவான வரையறைகளுடன் கூடிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. நிர்வாகம், system generated NPAவையும், டிரான்ஸ்பர்களையும் இணைக்கிறது. அப்படி இணைத்துப் பார்க்கக்கூடாது என்பது  நமது நிலைபாடு. ஆனால், system generated NPA ஒரு மிக முக்கியமான பிரச்சினையாக முன்வந்திருப்பதால், நாம்  அதுகுறித்தும் கவனம் கொள்ள வேண்டி இருக்கிறது. system generated NPA வில் இத்தனை கோடிகள் திடுமென தோன்றியதில்லை. கடந்தகாலங்களில், NPAவாக காட்ட வேண்டாமென்று கிளைகளுக்குச் சொன்னவர்கள்தான் இன்றும் LRDயின் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.நமது அலுவலர்கள் எந்த வகையிலும் என்றும் பொறுப்பாக மாட்டார்கள். ஆனால் அதற்கு நாமே சிரமப்பட வேண்டி இருப்பதுதான் இந்த வங்கியின் துரதிர்ஷ்டம்.

2. system generated NPAவில் காட்டியுள்ள தொகை முழுவதையும் 30.9.2012க்குள் cash recoveryசெய்வது சாத்தியமில்லை என்பதை  நமது செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

3. நிர்வாகம் விரும்புகிற வகையில் system-க்குள்ளேயே மாற்றங்கள் செய்து பலகோடி NPAவை நிர்வாகம் சொல்கிறபடி குறைக்க முடியும். அதற்கு நாம் நிச்சயமாக ஒத்துழைப்போம்.

4. அதேவேளையில், நமது தோழர்கள் விரும்புகிற கிளைகளுக்கு இப்போதே நிர்வாகம் டிரான்ஸ்பர் ஆர்டர்களை கொடுத்துவிட வேண்டும்.  தற்போது இருக்கும் கிளைகளில், நிர்வாகம் விரும்புகிற மாற்றங்களை system-க்குள் செய்து முடித்துவிட்டு, உடனடியாக மாறுதல்களில் செல்வதாக அந்த டிரான்ஸ்பர் ஆர்டர்கள் இருக்க வேண்டும்.

5. system-க்குள் மாற்றங்களை செய்து கொடுத்துவிட்டு நமது தோழர்கள் மாறுதல்களில் செல்வார்கள்.

இந்த முடிவை நாம் நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுவிட்டோம் . நிர்வாகமும்  இதனைச் சரியாக புரிந்துகொண்டு positive-ஆன முடிவு எடுக்கும் என நம்புகிறோம்.

சென்ற நிர்வாகம் CBSஆக்கி பேர் வாங்க வேண்டுமென்பதற்காக, மேலாளர்களின் கவனமும், சம்மதமுமில்லாமலேயே loan account masterகள் உருவாக்கி வேக வேகமாய்  ஆன்லைன் செய்ததன் விளைவுகளில் ஒன்று இன்றைய NPA.

ஆனால், இந்த நிர்வாகம் தானாகவே அதைச் சரிசெய்ய முயற்சிக்காமல், நம்மை அழைத்துப் பேசி, பிரச்சினையை விளக்கி, நம் மூலமாக அதனை சரிசெய்ய விரும்புகிறது. இது போன்ற ஜனநாயகமும், வெளிப்படைத்தன்மையுயும் வங்கியின் அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும் என்பதே நமது பிரதான கோரிக்கை. எனவே நாம் இந்த ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான நடைமுறைக்கு ஒத்துழைக்கிறோம்.

அதுபோல நிர்வாகம், நமது பிரச்சினைகளை, சிரமங்களை புரிந்துகொண்டு, டிரான்ஸ்பர்களில் ஒத்துழைக்க வேண்டும்.


System Generated NPA மிக முக்கியமான பிரச்சினையாக முன்வந்திருக்கும் இந்த வேளையிலும், தலைமையலுவலகமும், தலைமையலுவலக அதிகாரிகளும் கடந்த ஒருவார காலமாக சிவகங்கையில் முகாமிட்டு இருக்கின்றனர். நமது பாண்டியன் கிராம வங்கியின் சிந்தனையில், உழைப்பில் விளைந்த ‘உழவர் பயிற்சி மையம்’ (Farmers Training Centre) வருகிற 29.7.2012, ஞாயிற்றுக்கிழமை மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களால் திறக்கப்பட இருப்பதையொட்டியும், அதற்கு ஐ.ஓ.பி CMD திரு.நரேந்திரா அவர்கள் வருவதையொட்டியும் பெரிய திருவிழாவாக நடத்த இருக்கின்றனர். நமது உழவர்களுக்கான மையமாக அது இருப்பதாலும், நமது வங்கிக்கு அகில இந்திய அளவில் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்வதாலும் நாமும் இந்நிகழ்ச்சியினை வரவேற்கிறோம். ஆனால், இந்த ‘உழவர் பயிற்சி மையத்தை’ (FTC ) விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதாகவும் ஒரு செய்தி கசிகிறது. வருந்துகிறோம். அது உண்மையாக இருக்கக் கூடாது என விரும்புகிறோம். இந்தியாவிலேயே, இப்படியொரு மையத்தை வைத்திருக்கும் முதல் கிராம வங்கி, நமது பாண்டியன் கிராம வங்கியாகத்தான் இருக்க வேண்டும் என வேண்டுகோளை இந்த நேரத்தில் முன் வைக்கிறோம்.

தோழமையுடன்


(T.சங்கரலிங்கம்)
GS - PGBOU

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!