20.7.12

RTI Act, 2005 and Pandyan Grama Bank



Right to Information Act, 2005 பற்றி தோழர்கள் ஒரளவுக்கு அறிந்திருப்பீர்கள். சென்ற காங்கிரஸ் அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்த போது, விதித்த நிபந்தனைகளையொட்டி, தவிர்க்க முடியாமல், இந்த சட்டத்தை 2005ம் ஆண்டு அரசு கொண்டு வந்தது.

இதன் மூலம், மேலே அதிகார மையங்களில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு இந்த தேசத்தின் பிரஜைகள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிதம்பர ரகசியங்களாக இருந்த பல உண்மைகளை இப்போது பொதுவில் வைத்து விவாதிக்க முடிகிறது. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நம்பகத்தன்மையை உருவாக்கவும், தவறுகளை அம்பலப்படுத்தவும், பாரபட்சங்களை முறியடிக்கவும் இந்தச் சட்டம் உதவுகிறது. உயர் மட்ட அளவிலான ஊழல்கள், காலதாமதத்தைக் குறைக்க வழிவகுக்கிறது.

இதுகுறித்து பல உதாரணங்களைச் சொல்ல முடியுமென்றாலும், கிராம வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டலாம்.

அண்மையில் நமது AIRRBEA வின் அகில இந்தியப் பொதுச்செயலாளர்  தோழர்.திலிப்குமார் முகர்ஜி அவர்கள், ஜூன் 20ம் தேதி, நிதியமைச்சரை சந்தித்துப் பேசிவிட்டு, ’கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷனை ஒப்புக்கொண்டு நிதியமைச்சர் ஆபிஸ் நோட்டில் கையெழுத்திட்டுவிட்டதாக தன்னிடம் சொன்னார்” என்னும் உற்சாகமான தகவலை கிராம வங்கி ஊழியர்களுக்குத் தெரிவித்தார். எல்லோரும் சந்தோஷத்தில் ஆரவாரித்த சமயத்தில், இதை பொறுத்துக்கொள்ள  முடியாத சிலர், “இது தவறான தகவல்” என பொய்யை எஸ்.எம்.எஸ்களாக அனுப்பிக்கொண்டு இருந்தனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம வங்கி அலுவலர் தோழர்.பசவராஜ், அவர்கள் இது குறித்து Ministry of financeல், Dept of Financial servicesக்கு RTI Act மூலம், “நிதியமைச்சர் கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கும் ஆபிஸ் நோட்டில் கையெழுத்து விட்டாரா, அந்தக் கோப்புகளை நான் பார்க்கலாமா?” எனவும் தகவல்களை கேட்டார். உடனடியாக dept.of Financial servicesன் Research officer திரு.சுரேஷ் ஆர்யா அவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் அந்த செய்தி உண்மைதான் என்பதைச் சொன்னதோடு, சம்பந்தப்பட்ட அந்தக் கோப்புகளை இரண்டு வாரத்துக்குள் டெல்லி வந்து பார்த்துக்கொள்ளலாம் எனவும் அனுமதியளித்திருக்கிறார். உண்மை வெளிச்சமாய் உலகுக்கு தெரிந்தது. இதுதான் RTI Actன் மகத்துவம்.

அதுபோல, கர்நாடக மாநில AIRRBEAவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர்.கணபதி ஹெக்டே கர்நாடகா கிராம வங்கியிடம் RTI Actமூலம் சில தகவல்களை கேட்டு இருக்கிறார். ஸ்பான்ஸர் வங்கிக்கு இணையான அலவன்சுகளை கர்நாடகா கிராம வங்கியில் கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்பதையும்  இது குறித்து ஸ்பான்ஸர் வங்கிக்கு எழுதப்பட்ட கடிதப் போக்குவரத்து என்னென்ன என்பவைகளையும் தெரிவிக்கவும், ஸ்பான்ஸர் வங்கி அதிகாரிகளுக்கும் கர்நாடகா கிராம வங்கி அதிகாரிக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகள், அதுகுறித்த ஆவணங்களைக் கேட்டும் இருக்கிறார். கர்நாடகா கிராம வங்கி, அந்த official documentகளைத் தர முடியாது எனச் சொல்லியது. தோழர்.கணபதி ஹெக்டே Central Information Commissionக்கு இதுகுறித்து புகார் செய்திருக்கிறார். விசாரணை நடைபெற்று, இறுதியில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கணபதி ஹெக்டேவுக்கு உடனடியாக கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆக, இங்கு ஓளிவு மறைவு எல்லாம் இனியும் கதைக்கு உதவாது.  சித்து வேலைகள் எல்லாம் இந்த RTI Act மூலம் மட்டுப்படுத்தப்படுகின்றன. இதனை  சரியாக பயன்படுத்துவதன் மூலம் நாம் தெளிவு பெற முடியும். உயரத்தில் இருப்பவர்களை நமக்கு பதில் சொல்ல வைக்க முடியும். ஒரு ஒழுங்கை ஏற்படுத்த முடியும்.

சென்ற முறை சேர்மன் அவர்களிடம் PGBEAவும், PGBOUவும் பேசும்போது, “இந்த வங்கி நிர்வாகத்திடம் எந்த வரைமுறைகளும் இல்லை. எந்த ஒழுங்கும் இல்லை. unofficialஆகவே காலத்தையும், காரியங்களையும் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். தங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த வங்கி சிகரங்களைத் தொடுகிறதோ இல்லையோ, முதலில் இங்கு ஒழுங்கற்று இருக்கும் யாவையும் சரி செய்ய வேண்டும்” என்றோம். சேர்மன் அவர்களும் புன்னகைத்துக்கொண்டே, “இவ்வளவு நாளும் சரிசெய்யாமல் எல்லாவற்றையும் எனது காலத்தில் வந்து சொல்கிறீர்களே?” என கேட்டார்.  “நாங்களும் எவ்வளவோ, எத்தனை தடவையோ பேசிப் பார்த்துவிட்டோம். எல்லாம் அளவுக்கு மீறும்போது நாங்களும் தீவீரமாக இறங்க வேண்டி இருக்கிறது” என விளக்கம் அளித்தோம்.

நாம் ஆரம்பித்திருக்கும் ‘சீர்திருத்த இயக்கத்தின்’ அடிப்படையான நோக்கம் இதுதான்.  பிரச்சாரம், வட்டாரக் கூட்டங்கள் எல்லாம் நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.  ஊழியர்களையும், அலுவலர்களையும் பாதிக்கும் நிர்வாகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தலையிடுகிறோம். நமது எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இப்போது RTI Actஐயும் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறோம். கேள்விகள் எழ, எழ  அதிகார மையங்கள் ஆட்டம் காணும்.

கேள்விகள் எழுப்ப, RTI Act குறித்த வங்கியின் வெப்சைட் http://pandyangramabank.in  சென்று பார்த்தால் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. முதலில் நமது சீர்திருத்த இயக்கத்தை அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் போல் இருக்கிறது. வங்கியில் RTI Actற்கான Central Public Information Officer யார், Central Assistant Public Information Officer யார் யார் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். Appellate Authority யார் எனச் சொல்லவில்லை. எப்படி பணம் செலுத்துவது என்று குறிப்பிடப்படவில்லை.

அப்புறம் RTI ACT, 2005 sec 4(1)பிரகாரம் குறிப்பிட வேண்டியவை என இவ்வளவு சொல்லப்பட்டு இருக்கின்றன:


a) maintain all its records duly catalogued and indexed in a manner and the form which facilitates the right to information under this Act and ensure that all records that are appropriate to be computerised are, within a reasonable time and subject to availability of resources, computerised and connected through a network all over the country on different systems so that access to such records is facilitated;

(b) publish within one hundred and twenty days from the enactment of this Act,—
i) the particulars of its organisation, functions and duties;

(ii) the powers and duties of its officers and employees;
(iii) the procedure followed in the decision making process, including channels of supervision and accountability;
(iv) the norms set by it for the discharge of its functions;
(v) the rules, regulations, instructions, manuals and records, held by it or under its control or used by its employees for discharging its functions;
(vi) a statement of the categories of documents that are held by it or under its control;
(vii) the particulars of any arrangement that exists for consultation with, or representation by, the members of the public in relation to the formulation of its policy or implementation thereof;
(viii) a statement of the boards, councils, committees and other bodies consisting of two or more persons constituted as its part or for the purpose of its advice, and as to whether meetings of those boards, councils, committees and other bodies are open to the public, or the minutes of such meetings are accessible for public;
(ix) a directory of its officers and employees;
(x) the monthly remuneration received by each of its officers and employees, including the system of compensation as provided in its regulations;
(xi) the budget allocated to each of its agency, indicating the particulars of all plans, proposed expenditures and reports on disbursements made;
(xii) the manner of execution of subsidy programmes, including the amounts allocated and the details of beneficiaries of such programmes;
(xiii) particulars of recipients of concessions, permits or authorisations granted by it;
(xiv) details in respect of the information, available to or held by it, reduced in an electronic form;
(xv) the particulars of facilities available to citizens for obtaining information, including the working hours of a library or reading room, if maintained for public use;
(xvi) the names, designations and other particulars of the Public Information Officers;
(xvii) such other information as may be prescribed; and thereafter update these publications every year;

ஆனால் நமது நிர்வாகம் Interest rates, Service Charges, Remittance facilities,Cheque collection, Loan processing Charges அப்புறம் Balance Sheetஐ குறிப்பிட்டு முடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிர்வாகம் RTI Actஐ எவ்வளவு ஈஸியாக பார்த்திருக்கிறது! (ஸ்பான்ஸர் வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வெப்சைட்டில் இந்த சட்டத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள்!)  மேலே உள்ள லிஸ்ட்டுக்கும், கீழே உள்ள லிஸ்ட்டுக்கும்  வித்தியாசங்களைப் பாருங்கள். எவையெல்லாம் சொல்லப்படவில்லை என்று தெரியும்.

மேலும், RTI Act பிரகாரம் சொல்லப்பட வேண்டிய  அனைத்துத் தகவல்களையும், சட்டம் அமலுக்கு வந்த 120 நாட்களுக்குள் பொதுவில் வைத்திருக்க வேண்டும். 7 வருடங்கள் ஆகிறது. இன்னும் duties of its officers and employees கூடச் சொல்லப்படவில்லை! முதலில் அவை இங்கு பணிபுரியும் நமக்கேக்  கூடச் சொல்லப்படவில்லை.

இவை யாவும் சரி செய்யப்பட வேண்டும். உடனடியாக நிர்வாகம் RTI ACT குறித்த முழுமையாக தெரிந்துகொள்ளட்டும்.தெரிவிக்க வேண்டியவை யாவற்றையும் பொதுவில் தெரிவிக்கட்டும்.

தொடர்ந்து பதில் சொல்லத் தயாராகட்டும். கேள்விகள் நம்மிடம் நிறைய இருக்கின்றன.

1 comment:

Comrades! Please share your views here!