“நிர்வாகத்தின் கட்டளைகளை ஏற்று செயல்படுகிற மேலாளர்களில் ஒருவர்தான் கமுதி மேலாளர். Payment number இல்லாமல் வந்த வவுச்சர் குறித்து கேட்டதற்கு பழிவாங்கும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? பல மேலாளர்கள், கமுதி கிளை மேலாளார் போல இருக்கிறார்கள். தங்களுடைய பெயர் பிரமோஷன் லிஸ்ட்டில் வருவதற்கு அலைகிறார்கள். வங்கியில் இருக்கும் அனைவரும் நிர்வாகத்தை பாலிஷ் செய்ய முயற்சிக்கிறார்கள். சில தொழிற்சங்க வாதிகளும் முயற்சிக்கிறார்கள். எழுதுவதற்கு முன்னால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.”
கமுதிப்பிரச்சினையையொட்டி இன்னொரு தோழர் இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். ‘வங்கியில் இருக்கும் அனைவரும் நிர்வாகத்தை பாலிஷ் செய்ய முயற்சிக்கிறார்கள்’ என்பதை நிச்சயமாய் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோரும் அப்படியல்ல. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையினர் அப்படியல்ல.
நிர்வாகத்தின் மனம் குளிர நடந்துகொண்டு, அதன் மூலம் டிரான்ஸ்பர், பிரமோஷன்களில் காரியம் சாதித்துக் கொள்வோம் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இது ஒருவகையான அடிமைத்தனம். இப்படி எல்லா இடங்களிலும் ஒன்றிரண்டு பேர் இருக்கவேச் செய்வார்கள். அவர்களை ‘கருங்காலி’ என்றும் ‘கரும்புள்ளி’ என்றும் சக தொழிலாளர்கள் கிண்டல் செய்வது உண்டு.
இந்த அடிமை மனோபாவத்தைத்தான் டிரான்ஸ்பர்களும், பிரமோஷன்களுமாய் ஊட்டி வளர்க்கிறது நிர்வாகம். Payment number இல்லாமல் வந்த வவுச்சர் குறித்து கேட்பவர்களுக்கு, ரூல்ஸ்களில் கறாராய் இருப்பவர்களுக்கு, 10 மணியிலிருந்து 5 மணி வரைதான் வேலைபார்க்க முடியும் என்பவர்களுக்கு நிர்வாகம் சாதகமாய் டிரான்ஸ்பர் தர யோசிக்கும். எளிதில் பிரமோஷனும் கொடுக்க மறுக்கும். இதன்மூலம், நிர்வாகம் தன்னை அனுசரித்துப் போகிறவர்களுக்கு மட்டுமே தனது அருள் பார்வை கிட்டும் என சொல்லாமல் சொல்கிறது. கியூ வரிசையில் முன் நிற்பவர்களை விட்டுவிட்டு, பின்னால் நிற்பவர்களை அழைத்து டிக்கெட் கொடுக்கிறது. இதனால் வரிசையை விட்டு விலகுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்கள் போராட்டங்களுக்கும், தொழிற்சங்க நடவடிக்கைக்கும் வரமாட்டார்கள். இப்படித்தான் அடிமைத்தனத்தை ‘de-unionised mentality'யாக வடிவமைக்கிறது நிர்வாகம்.
நியாயம், தர்மம், ஒழுங்குகள், வரம்புகள், விதிகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு, இந்த deunionised mentalityயோடு ஒரு கூட்டம் உருவாகிறது. நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளவே சிந்திக்கிறவர்கள் அவர்கள். சுயநலமே உருவானவர்களாகவும், பொதுநலன் குறித்தும், பொது நியாயம் குறித்தும் கவலைப்படாதவர்களாகவும் இருப்பார்கள். வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கென்றும் ஒரு தொழிற்சங்கம் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இதனால்தான் அவர்களை நாம் தொழிற்சங்க வியாதிகள் என அழைக்கிறோம்.
எதையும் இழக்காமல் சலுகைகள் பெற விரும்புபவர்கள் அதன் பின்னால் திரளுகிறார்கள். யாராவது போராடி, யாராவது நமக்கு உரியதை பெற்றுத் தருவார்கள் என்று பரிதாப வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். அவர்களுடன் நாம் தொடர்ந்து கருத்து ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் உரையாடி, அந்தக் கூட்டத்திலிருக்கும் மனசாட்சி உள்ளவர்களை வெல்வதற்கும், unionised ஆக்குவதற்கும் முயற்சிக்கிறோம்.
விதிப்படி வேலை பார்ப்பவர்களுக்கும், நேர்மையாய் உழைப்பவர்களுக்கும், சாதகமான டிரான்ஸ்பர் , சரியான பிரமோஷன் கிடைக்க வலியுறுத்துகிறோம். அதற்காக கடுமையாக போராட வேண்டி இருக்கிறது. நிர்வாகத்தின் பாரபட்சங்களை, விதி மீறல்களை எதிர்த்து பெரும் பிரச்சாரம் செய்து அம்பலப்படுத்த வேண்டி இருக்கிறது. நீதிமன்றங்களின் கதவைத் தட்ட வேண்டி இருக்கிறது. கோஷங்கள் எழுப்பி, ஊழியர்களை அணி திரட்ட வேண்டி இருக்கிறது. இதில் வெற்றி பெறும்போது, தொழிற்சங்கத்தில் இருப்பவர்களுக்கும், வெளியில் இருக்கும் மற்றவர்களுக்கும் நம்பிக்கை பிறக்கிறது. unionised ஆகிறார்கள். ஒரு சரியான தொழிற்சங்கத்தின் இடைவிடாத பணி இது.
இதன் ஒரு பகுதியல்ல, ஒரு புள்ளிதான் கமுதிக் கிளையின் பிரச்சினையும். அங்கு ஒருவர் விதிகளை மீறி வேலை பார்க்கச் சொல்கிறார். இரண்டு பேர் மறுக்கிறார்கள். ஒருவர் de-unionsed ஆக இருக்கிறார். இருவர் unionised ஆக இருக்கிறார்கள். நாம் அதில் சரியான நிலைபாடு எடுத்து அந்த இருவர் பக்கம் நின்று, உண்மையை உரக்கப் பேசுகிறோம். இப்போது பலரும் பேச ஆரம்பிக்கிறார்கள். தங்கள் கிளைகளிலும் இது போன்ற பிரச்சினைகள் இருப்பதை தயக்கமின்றி வெளிப்படுத்த ஆரம்பிகிறார்கள். இதுதான் ஒரு சரியான தொழிற்சங்கம் செய்ய வேண்டிய பணி. நாம் மிகுந்த கவனத்துடன் செய்திருக்கிறோம்.
The need or the desire to move up easily make many to act accordingly. The management identify and make use of them.The only concern is such number is growing. At this situation union has a role of a teacher educating the socialistic principles to its members. It will be the prior agenda to union in near future.
ReplyDeleteசரியான திசையில் தங்கள் சிந்தனைகள் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.நேர்வழியில் சென்று சிரமப்படுபவர்களை ‘ஏமாளி’, ’பைத்தியக்காரன்’, ‘காரியம் சாதிக்கத் தெரியாதவன்’ என்று இந்த அமைப்பு கருதவைக்கிறது. எதையும் எளிதாகப் பெறுவதற்கு அல்லது குறுக்கு வழியில் பெறுவதற்கு சாத்தியங்களையும், விருப்பங்களையும் இந்த அமைப்பு உருவாக்கி வைத்திருக்கிறது. தனியாகவே எதையும் பெற்றுவிட முடியும் என சகமனிதர்களிடமிருந்து பிரித்து விடுகிறது.தொட்டால் விழுந்துவிடும் பலவீனங்களின் விளிம்பில் மனிதர்களை கொண்டு போய் நிறுத்தி விடுகிறது. அந்த இடத்திலிருந்து மனிதர்களை மீட்டெடுத்து நேர்மையாய் இருப்பதில், சரியாய் இருப்பதில், தவறுகளை எதிர்ப்பதில், சகமனிதர்களோடு சேர்ந்து இருப்பதில் இருக்கும் சந்தோஷங்களையும், அர்த்தங்களையும் நாம் நம் ஊழியர்களுக்கு காட்ட வேண்டி இருக்கிறது. அதைச் செய்வதற்கு தொழிற்சங்கங்களே சரியான இயக்கமாய் இருக்கிறது. இது தொழிற்சங்கங்களுக்கும் புரிய வேண்டும். தொழிலாளர்களுக்கும் புரிய வேண்டும்.
Deleteஒருகாலத்தில் payment number இல்லாமல் வந்த வவுச்சர் குறித்து கேட்டதற்கு பழிவாங்கும் போக்கை கடைபிடித்த அந்த மேலாளரையும் நமது தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளால் நம் பக்கம் வென்றுள்ளோம் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ReplyDeleteதொழிற்சங்கங்க அரங்கங்கள் வெகுஜன அமைப்பாகும். அங்கு பலதரப்பட்ட மனிதர்கள் தத்தமது சித்தாந்தங்களோடும், நம்பிக்கைகளோடும் உறுப்பினராய் இயங்குவது இயல்பான ஒன்றே!
ஆனால் ஒரு முற்போக்கான தொழிற்சங்கம் அவர்களது perception-ல் உள்ள கோளாறுகளை இனம் கண்டு அவர்களையும் தொழிற்சங்கமய படுத்துவதற்கான அணுகுமுறையை நம்பிக்கையோடு தொடர்ந்து மேற்கொள்வதே சரியாகும். அதில் நாம் மிகச்சரியாகவே இருக்கிறோம். தவறு செய்யும் மேலாளர்களை தட்டிக் கேட்கும் நாமே அவர்கள் நிர்வாகத்தால் கருவேப்பிலை கொத்தைப் போல் தூக்கி எறியப்படும் போதும் தாங்கி நிற்கிறோம்....நின்றுள்ளோம்!!! இதே கமுதி மேலாளருக்கும் ஒருநாள் இந்த நிலை ஏற்படுமாயின் அவருக்காக விதியில் நின்று நாமே குரல் கொடுப்போம் என்பதையும் இங்கே உறுதியுடன் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.....
ஆஹா... எவ்வளவு சரியாக, பொட்டில் அறைகிற மாதிரி உன்னால் சொல்ல முடிகிறது. மிகத் தெளிவான பார்வை தம்பி, அண்டோ!
Delete