7.8.12

Pension Seminar, a great success!



5.8.2012 அன்று மதுரையில் ‘பென்ஷன் சிறப்புக் கருத்தரங்கம்’ அர்த்தபூர்வமாகவும், ஆரோக்கியமானதாகவும் நடந்து முடிந்தது. முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர் அதுவும் முழுக்க முழுக்க PGBEANS!   இத்தனைக்கும் காரைக்குடி, தூத்துக்குடி, ராமநாதபுரத்திலிருந்து எப்போதும் வருகிற பல முக்கிய தோழர்கள் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் வரமுடியாமலிருந்தனர். இருந்தபோதும் AVKC மஹாலின் அந்த பெரிய அரங்கு முழுவதும் தோழர்கள் நிரம்பியிருந்தனர். நம்மிடமிருந்து ஓய்வு பெற்ற தோழர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண் தோழர்கள் கலந்துகொண்டதும் முக்கியமான, குறிப்பிடத்தக்க விஷயம்.  சமீப காலங்களில் மிக அதிகமான தோழர்கள் கலந்துகொண்ட ஒரு விசேஷமான நிகழ்ச்சியாக இதனை குறிப்பிடலாம்.

கருத்தரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும் தோழர்.சோலைமாணிக்கம் (பொதுச்செயலாளர், PGBEA) வரவேற்றுப் பேசினார். தலைமை தாங்கிய தோழர்.மாதவராஜ் (தலைவர்-PGBEA) கருத்தரங்கத்தின் நோக்கத்தை தெளிவு படுத்திப் பேசினார். “ஏற்கனவே பெற்றிருக்கும் சலுகைகளை இந்த அரசு தொழிலாளர்களிடமிருந்து ஒவ்வொன்றாக பறித்து வருகிற வேளையில், கிராம வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் பென்ஷனை பெற்றுத்தந்த அற்புதத்தை AIRRBEA நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. போராடிப் பெற்றவர்களுக்குத்தான் அந்த பலனின் அருமை தெரியும். அதைக் கொண்டாடத் தெரியும். அப்படி கொண்டாடுவது கருத்தரங்கத்தின் முதல் நோக்கம்.  வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் வணிக வங்கியில் பென்ஷன் எப்படிக் கொடுக்கப்படுகிறது என்கிற அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதுதான் இந்தக் கருத்தரங்கத்தின் இரண்டாவது நோக்கம்.” எனக் குறிப்பிட்டார்.

" புதிய சேர்மன் பொறுப்பேற்ற பிறகு ஒப்புக்கொண்ட மூன்று கோரிக்கைகளான halting allowance, exservicement payfitment, newspaper allowance ஆகியவற்றை நிறைவேற்றி இருப்பதை நினைவுகூர்ந்து, இந்த உற்சாகமான வேளையில், இங்கு பணிபுரியும் அலுவலர்களையும், ஊழியர்களையும் வங்கி நிர்வாகம் ஒரு friendly approachயுடன் motivate  செய்ய வேண்டும்”  என பாண்டியன் கிராம வங்கியின் சேர்மனை வாழ்த்திப் பேச அழைத்தோம். பென்ஷன் நனவாகியிருப்பதற்கு தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட சேர்மன், நமது வங்கியில் பணிபுரியும் அனைவரும் திறமைகளும், ஈடுபாடும் மிக்கவர்கள் என்றும், அவர்கள் மூலம் நமது வங்கியை தேசீய அளவில் முதன்மையான வங்கியாக உயர்த்திக்கொள்ள முடியும் என உறுதிபட தெரிவித்தார். டெல்லியில் நிதியமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கிராம வங்கிச் சேர்மன்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டதையும், profitabilityஐ அரசு வலியுறுத்துவதையும் குறிப்பிட்ட அவர், நமது வங்கி அந்தத் தகுதிகளைப் பெற்று மேலும் சிறக்கும் எனவும் சுட்டிக்காட்டினார். நட்புமிக்க,  நம்பிக்கையான வாழ்த்துரையாக சேர்மனின் பேச்சு அமைந்திருந்தது. தொடர்ந்து இரு பொதுமேலாளர்களும் சுருக்கமாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். கவிதைகளை மேற்கோள் காட்டிய GM(O), திரு.கார்த்திகேயனின்  உரையை வந்திருந்தவர்கள் ரசித்தனர்.

அடுத்ததாக PGBEA மற்றும் PGBOUவின் சார்பில் ‘a dream comes true'  என கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் இந்தப் புத்தகத்தினை தொகுத்த PGBEAவின் AGS தோழர். அண்டோ கால்பட்டினையும், வடிவமைத்த தோழர்.மாதவராஜையும் தோழர்.சோலைமாணிக்கம் பாராட்டிப் பேசினார். AIRRBEA(TN) organising secretary தோழர்.T.கிருஷ்ணன்  புத்தகத்தை வெளியிட தோழர்.புளுகாண்டி அவர்கள் பெற்றுக்கொண்டார்.  Retired staff சங்கத்தின் adhoc கமிட்டிக் கன்வீனர் தோழர்.சந்திரசேகரன், தங்களை ஒருங்கிணைத்து சங்கமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட PGBEAவையும், PGBOUவையும் பாராட்டினார். சரியாக இந்த நேரத்தில் பென்ஷன் கோரிக்கை நிறைவேறி இருப்பது சந்தோஷமளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, வணிக வங்கியில் பென்ஷன் கோரிக்கையின் வரலாற்றை மிக சுருக்கமாகவும், தெளிவாகவும் முன்வைத்தார் BEFI-TN மாநிலச் செயலாளர் தோழர்.C.P.கிருஷ்ணன்.  வணிக வங்கியில் இருக்கும் பெரிய சங்கங்கள் செய்துகொண்ட சமரசங்களையும், அவைகளை அம்பலப்படுத்தி  BEFI சார்பில் நடத்தப்பட்ட பிரச்சாரங்களையும் ஒவ்வொரு காலக்கட்டத்தோடும் நினைவு கூர்ந்தார். அதன் விளைவாக இன்று பென்ஷன் இரண்டாவது ஆப்ஷனாக நிறைவேறி இருப்பதையும், அதேநேரம் புதிதாக பணிக்குச் சேர்பவர்களுக்கு வாய்த்திருக்கும் ‘புதிய பென்ஷன்’ திட்டத்தில் இருக்கும் குறைகளையும் சுட்டிக்காட்டினார். மேலும் பென்ஷனுக்கான போராட்டங்கள் தொடரும் என நம்பிக்கையோடு அவரது பேச்சு அமைந்திருந்தது.

கர்நாடகாவிலிருந்து  வந்திருந்த AIRRBEA Organising secretary தோழர். நாகபூஷண் ராவ், கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் என்னும் கோரிக்கை எப்படி வெற்றி பெற்றது என்பதை புள்ளி விபரங்களோடு சொன்னார்.  பென்ஷன் என்பது 'equal pay for equal work' என்னும் நமது கோரிக்கையோடு சம்பந்தப்பட்டது, ஒரு முப்பது வருட வரலாறும் பின்னணியும் கொண்டது என்பதை விளக்கினார். வணிக வங்கிக்கான ஊதியம் நமக்கும் வழங்கப்பட்ட போதே, வணிக வங்கியின் பென்ஷன் திட்டம் நமக்கு அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அரசு செய்த சதியின் விளைவாக அந்தக் குறை இருந்ததையும் அதை எதிர்த்து நடத்திய போராட்டங்கள், வழக்குகள் எல்லாவற்றையும் தொகுத்தார். கர்நாடகாவில் நமது சங்கங்களின் முயற்சியால் AIRRBEA நடத்திய வழக்கின் தீர்ப்பு, பென்ஷனுக்கான நமது நெடிய பயணத்தில் முக்கியமான மைல்கல் என்பதை உணர்த்துவதாக அவரது கருத்துரை அமைந்திருந்தது.

கருத்தரங்கத்தின் முதல் பகுதி நிறைவடைந்தது . அனைவரும் ரசித்து, அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மதிய உணவருந்தினர். எங்கும் பேச்சும், உற்சாகமான விசாரிப்புகளும், சிரிப்பும் என கோலாகலமாய் காட்சியளித்த அனுபவம் அது.

கருத்தரங்கத்தின் இரண்டாவது பகுதியாக, வணிக வங்கியில் இருக்கும் பென்ஷன் திட்டம் பற்றி தோழர்.C.P.கிருஷ்ணன் விளக்க ஆரம்பித்தார். ஏறத்தாழ ஒரு வகுப்பு போலவே இருந்தது. அதே நேரம் சுவாரசியமாகவும் இருந்தது. தோழர்கள் அனைவரும் ஆர்வத்துடன் குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். ‘பென்ஷன் திட்டம் ‘ என்பது எவ்வளவு விபரங்களும், விர்வான வரையறைகளும் கொண்டது என்பதை தோழர்கள் புரிந்துகொண்டனர்.  தொடர்ந்து பலரும் சந்தேகங்கள், கேள்விகள் எழுப்ப அனைத்திற்கும் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்கமளித்தார் தோழர்.சி.பி.கிருஷ்ணன். PGBOU பொதுச்செயலாளர் தோழர். சங்கரலிங்கம் இறுதியாக நன்றியுரை கூற கருத்தரங்கம் நிறைவடைந்தது.

வந்திருந்த அனைவருமே  நமது சங்க நிர்வாகிகளை கைகுலுக்கி, தோள் தட்டிச்சென்றனர். பல்வேறு வார்த்தைகளில், தொனிகளில் சொல்லியிருந்தாலும் அவர்கள் அனைவருமே சொன்னதன் அர்த்தம். “ ரொம்ப நல்லா இருந்தது!” என்பதுதான்.  “இதை PGBEAவாலும், PGBOUவாலும்தான் செய்ய முடியும்” என்பதையும் சேர்த்தேச் சொன்னார்கள். இன்று காலையில் ஒரு தோழர் இப்படியொரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார்: “thanx for a nice conference with nice food for ears and stomach".



செமினார் காட்சிகள்



























2 comments:

  1. அன்பிற்குரிய தோழர்களுக்கு

    வாழ்த்துக்கள்...

    மிகவும் அருமையான கருத்தரங்கை, நேரே கலந்து கொண்டது போன்ற உணர்வு தோன்றும் வண்ணம் இருக்கிறது இந்த அற்புதமான பதிவு...படங்களும் சேர்த்தது, தவற விட்ட விருந்தையும் சுவைத்த மாதிரி உணர வைத்துவிட்டது..அதிலும் குறிப்பாகப் பெண் தோழர்கள் கணிசமாகப் பங்கேற்றது சிறப்பு. வாழ்த்துக்கள்...

    கருத்தரங்கில் பங்கேற்ற சேர்மன் உள்ளிட்ட உயர் நிர்வாகிகள், கவிதை மேற்கோள்களோடு வாழ்த்திய பொதுமேலாளர் கார்த்திகேயன் (என்னென்ன என்று குறிப்பிட மாட்டியளோ.. நாங்களும் இரசிப்போம்ல..) மற்றும் வகுப்பெடுத்த சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் கிருஷ்ணன் - அதாங்க சி பி கே., அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுதல்கள்..

    எங்கள் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர், மறைந்த தோழர் சி செல்வராஜ் கூட்டங்களில் அடிக்கடி சொல்வார், வெற்றி பெற்றால் போதாது, அது எப்பேற்பட்ட போராட்டங்களை அடுத்து, எத்தனை சிரமங்கள், தடைகளைத் தாண்டி பெறப்பட்டது என்பதை தொழிலாளிகளுக்கு உணர்த்தினால் தான் அந்த வெற்றிக்குப் பெருமை என்று. குலேபகாவலி படத்தை எடுத்துக் காட்டாகச் சொல்லி, மலை முகட்டில் இருந்து பறித்து வரும் பூ மாதிரி தான் இத்தகைய போராட்ட வெற்றி என்றும் சொல்வார் அவர்..

    பென்ஷன் போராட்ட வெற்றி அத்தகையதானது...வாழ்த்துக்கள்..

    எஸ் வி வேணுகோபாலன்
    இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் - தமிழ்நாடு

    ReplyDelete
  2. பெருமகிழ்வாக இருந்தது...ஆர் ஆர் பீ ஊழியர்-அதிகாரிகள் வணிகவங்கிக்கு இணையான பென்ஷன் பெற்றது! கருத்தரங்க வெற்றிக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Comrades! Please share your views here!