சுற்றறிக்கை எண் : 12.2012 நாள்; 10.09.2012
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
ஒரு மகத்தான காரியத்தைச் செய்து, வங்கி ஊழியர் இயக்கத்தை தலை நிமிர வைத்திருக்கிறார்கள் வணிக வங்கி ஊழியர்கள். வங்கித்துறையை சீரழிக்கும் விதமாக, பாராளுமன்றத்தில் ‘வங்கி சீர்திருத்த மசோதாவை' அரசு கொண்டு வரவிருந்த சூழலில், வெகுண்டு எழுந்த வணிக வங்கியில் உள்ள முக்கிய சங்கங்கள் அனைத்தும் இணைந்து நடத்திய ஆகஸ்ட் 22, 23 இரண்டுநாள் வேலைநிறுத்தம் முழு வெற்றி கண்டு இருக்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நமது வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். NUBE சங்கம் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை என்றபோதிலும் ஐ.ஓ.பியின் அனைத்துக் கிளைகளும் மூடப்பட்டு இருந்தன. ஐ.ஓ.பியில் செயல்பட்டு வரும் அலுவலர் சங்கத்தின் ஒற்றுமைக்கும், உறுதிக்கும் நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Monetary demands:
நமது வங்கியின் சேர்மன் அவர்கள் நம்மிடம் Courtesy meetingல் ஒப்புக்கொண்டது போல், Newspaper allowance ஜூலை மாதத்திலிருந்து வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக நாம் வலியுறுத்தி வந்த கோரிக்கை இது. இப்போது நனவாகி இருக்கிறது. இந்த விஷயத்தில் நிர்வாகத்திற்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் மெஸஞ்சர்த் தோழர்களுக்கு மட்டும் Newspaper alowanceஐ ரூ.75/- என நிர்ணயம் செய்திருப்பது சரியல்ல. அவர்களுக்கு ரூ.100/- வழங்கப்பட வேண்டும்.
இன்னும் பல பொருளாதாரக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதையும், ‘ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக' நிர்வாகம் சொன்ன வார்த்தைகளையும் இந்த நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.
System generated NPA and Transfers:
கடந்த மாதத்திலிருந்து System Generated NPAவை மையப்படுத்தி நமது வங்கியின் கவனமும் செயல்பாடுகளும் ஒருபக்கம் இருந்து வருகின்றன. அதனை சீராக்குவதற்காக ஆபிஸர்கள் டிரான்ஸ்பர்களை தள்ளி வைப்பதாக அறிவித்தது நிர்வாகம். நாம் system generated NPAவுக்கும், transferக்கும் சம்பந்தமில்லையென்றோம். அதே நிலைபாடுதான் இப்போதும் நாம் கொண்டிருக்கிறோம். Transferஐ நிறுத்தி வைத்ததற்கு வேறு காரணங்கள் இருப்பதாகவே கருதுகிறோம். System Generated NPA குறித்தும் நாம் ஆராய வேண்டி இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு சேர்மன் அவர்களிடம் இதுகுறித்து பேசினோம். ‘நிச்சயமாக அக்டோபர் முதல் வாரத்தில் டிரான்ஸ்பர்கள் இருக்கும். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்' என்று உறுதியளித்தார். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பு நிர்வாக வசதிகளுக்காக சில டிரான்ஸ்பர்கள் போடப்பட்டன. அந்த டிரான்ஸ்பர்களைக் கூட விருப்பங்களில் அடிப்படையில்
ஆரோக்கியமான முறையில் தீர்மானித்திருக்கலாம். அதற்காக சங்கங்களை கலந்தாலோசித்திருக்கலாம். ஆனால் தன் இஷ்டத்திற்கு நிர்வாகம் டிரான்ஸ்பர்களை முடிவு செய்தது. இது சரியான நடைமுறையல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். வங்கியின் வளர்ச்சிக்கு இதுபோன்ற செயல்பாடுகள் உதவாது என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
Disciplinary Actions:
நாம் மே மாதத்தில் ‘ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள்' என நிர்வாகத்தின் Disciplinary Actions குறித்து நமது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தோம். அவைகள் சரிசெய்யப்பட வேண்டும் என புதிய சேர்மன் அவர்களிடமும் பேசியிருந்தோம். நல்ல மாற்றங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்த்தோம். ஆனால் நிலைமைகள் இங்கு மேலும் மோசமாகிக்கொண்டு இருக்கிறது. எந்த தார்மீக நெறிகளும், கோட்பாடுகளும், வரையறைகளும் இன்றி இரக்கமற்று, மூர்க்கத்தனமாக வெறியாட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறது நிர்வாகம். மனிதாபிமானமற்ற chargesheets, show couse notices, punishments என்று ஊழியர்களையும், அலுவலர்களையும் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது.
நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளை மூன்று விதமாக இங்கு சுட்டிக்காட்டலாம்.
1) நிர்வாக அமைப்பில் உள்ள தவறுகளை சரிசெய்யாமல் தனிப்பட்ட நபர்களின் மீது குற்றம் சாட்டி அவர்களை பலிகிடாவாக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள். கன்னியாகுமரி மாவட்டத்தில் SHG லோன் கொடுத்தும், மேலப்பாளையம் போன்ற கிளைகளில் நகைக்கடன்கள் கொடுத்தும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கும் தோழர்கள் அப்படிப்பட்டவர்கள்தாம். அவர்கள் மீது குற்றம் சாட்டி, நிர்வாகம் வசதியாக தன் தவறுகளை மூடி மறைத்துக்கொண்டு இருக்கிறது. அற்புதமான வீரர்கள் உடம்பில் போட்டிக்கு தயார்படுத்துவதற்காக ஊக்க மருந்தை செலுத்தியது இந்த நிர்வாகம்தான். அவர்கள் வெற்றி பெற்ற போதெல்லாம் தனது வெற்றியாக மார்தட்டிக்கொண்டது இந்த நிர்வாகம்தான். ஒருநாள் அந்த வீரர்கள் உடம்பில் ஊக்கமருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், 'அந்த வீரர்கள் இனி ஓட்டபந்தயத்திற்கே லாயக்கில்லாதவர்கள்' என அறிவிப்பதும் இந்த நிர்வாகம்தான். என்ன விசித்திரம் இது.
2) தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவும், நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காகவும் பழிதீர்க்கும் விதமாக நிர்வாகத்தால் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள். நேரடியாக இதனைச் செய்யாமல், அதற்கென காரணங்களைத் தேடி அதை பூதாகரமாக்கி காலகாலமான தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறது நிர்வாகம்.
தோழர்கள் மாதவராஜ், சோலைமாணிக்கம் ஆகியோருக்கு 2005ம் ஆண்டில் இருந்து இன்கிரிமெண்ட் வழங்கப்படவில்லை. 2009ல் கொடுக்கப்பட்ட சார்ஜ்ஷிட்டிற்காக இந்த நடவடிக்கையாம். அதிக நாள் லீவு எடுத்துவிட்டார்களாம். அவர்கள் என்ன சொந்தக்காரணங்களுக்காகவா லீவு எடுத்தார்கள்? எந்த வங்கியிலும் தொழிற்சங்கத்தலைவர்களுக்கு ஏற்படாத நிலைமை இது. அதுபோல்தான் தோழர்.செல்வகுமார் திலகராஜ் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையும். ஒரே நபருக்கு அதிகமாக நகைக்கடன் கொடுத்துவிட்டார், ஒருவர் மீதுள்ள லோனுக்கு இன்னொருவர் part payment கட்டிவிட்டார் என்பதெல்லாம் அதில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள். இந்த விதிகளின்படி இந்த வங்கியில் எவரையும் குற்றவாளியாக்கிவிட முடியும். என்ன வெட்கக்கேடு இது.
3) வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை நிறுவி, பேருக்கு ஒரு என்கொயரி நடத்தி, கண்ணை மூடிக்கொண்டு 'proved' என்று சொல்லி, ஊழியர்களையும் அலுவலர்களையும் வீட்டுக்கு அனுப்புவது என்பது லேட்டஸ்ட் வகை. இவ்வகை ஒழுங்கு நடவடிக்கைகளில் நிர்வாகத்திடம் வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் யாரும் முறையிட்டு இருக்க மாட்டார்கள். எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இருக்காது. ஆனாலும் நிர்வாகம் பொய்யாய் ஒரு கதையை ஜோடித்து இங்கு பலரை வீட்டுக்கு அனுப்ப ஆயத்தமாகி வருகிறது.
இதற்கு ஒரு பலமான காரணம் உண்டு. பின்னணியும் உண்டு. கிட்டத்தட்ட நகைக்கடன் மட்டுமே வங்கியின் மொத்த பிஸினஸ் என்றாக்கி விட்டன சென்ற இரு சேர்மன் காலத்திய நிர்வாகங்கள். இதன் ஆரோக்கியமற்ற தன்மையினை பலமுறை சர்க்குலரில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அவைகளுக்கு எதிராக இயக்கங்களும் நடத்தி இருக்கிறோம். இந்தக் காலக்கட்டத்தில்தான் நகைகளைப் பராமரிப்பதில் சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. கிளைகளில் அப்பிக்கொள்ளும் வாடிக்கையாளர் கூட்டம், ஆள் பற்றாக்குறை, பணி நெருக்கடிகள் போன்றவைகளே முக்கியமான காரணங்கள். அதை சரிசெய்ய வக்கில்லாமல், ஊழியர்கள், அலுவலர்கள் மத்தியில் ஒரு கடுமையான பயத்தை விதைப்பதன் மூலம் சரிசெய்துவிடலாம் என நினைக்கிறது நிர்வாகம். ஒரு பெருங்கூட்டத்தைக் கலைக்க இராணுவமோ, காவல்துறையோ துப்பாக்கியால் யாராவது இருவரை சுட்டு வீழ்த்துவது போலத்தான் இதுவும். ஹிட்லரின் பாசிச பேயாட்டத்தில் இதுபோல பல ஆயிரம் உதாரணங்களைக் காணலாம். என்ன பயங்கரம் இது.
இவ்விஷயத்தில் புதிய சேர்மனின் அணுகுமுறையைக் காட்டிலும், நமது ‘டிபார்ட்மெண்ட் குட்டிச்சாத்தான்களின்' கைவரிசைதான் ஒங்கி இருப்பதாக நாம் கருதுகிறோம். (தலைமையலுவலகத்தில் பல டிபார்ட்மெண்ட் குட்டிச்சாத்தான்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக விரைவில் அலசுவோம். அவர்களின் ஒழுக்கங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவோம்.) ஒழுக்கத்தைக் காக்க வந்த இந்த சாத்தான்களின் இதயத்தில் ஈரம் என்பது துளியும் கிடையாது. இவர்களுக்கு பக்க பலமாக இருப்பது Enquiry officerகள். இவர்களில் பலரும் தங்கள் மூளையையும், இதயத்தையும் கழற்றி வைத்துவிட்டுத்தான் தங்கள் தீர்ப்பினை எழுதுகிறார்கள். கண்ணெதிரே இருக்கும் ஆதாரங்களையும், உண்மைகளையும், வாதங்களையும் ஒதுக்கிவிட்டு ‘proved' என எழுதுவதில்தான் அவர்களுக்கு எத்தனை சந்தோஷம். பேரானந்தம். அப்புறம் மரணதண்டனைக்கு ஆமென் போடும் மகான்களாய் நமது Disciplinary Authorityகள் இருக்கவே இருக்கிறார்கள். மொத்தத்தில் நமது வங்கியில் ஊழியர்களையும், அலுவலர்களையும் சதா நேரமும் ஒரு இறுக்கமான மனோநிலையில், அவநம்பிக்கையான சூழலில் பணிபுரியுமாறு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தோழர்களே!
இதனை நாம் அனுமதிக்க முடியாது.
ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.
ஒழுங்கு நடவடிக்கைகள், என்பது நேர்மையாகவும், சுயவிமர்சனம் கொண்டதாகவும், பாரபட்சமற்றதாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கைகள், வங்கிப் பணியில் ஒரு நாட்டத்தையும், நம்பிக்கையான பணிநிலைமையையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கைகள் தவறுகளை சரிசெய்வதற்காக இருக்க வேண்டும். ஆனால், தண்டனைகளை மட்டுமே முன்னிறுத்தி இங்கு ஒழுங்கு நடவடிக்கைகள் பயத்தையும், விரக்தியையும், சக ஊழியர்களிடையே மனக்கசப்பையும் உருவாக்குவதாக இருக்கின்றன.
இதனை தடுக்க உடனடியாக நாம் களம் இறங்கியாக வேண்டும். நிர்வாகம் அதன் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும். சரிசெய்யவேண்டும். ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு வழி வகுக்க வேண்டும். இல்லையென்றால் இங்கு ஒரு யுத்தம் செய்ய சித்தமாவோம். சகலவிதத்திலும் நமது எதிர்ப்பினை காட்டுவோம். இதுகுறித்து ஐ.ஓ.பி உயரதிகாரிகளையும், வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களையும் நாம் சந்தித்து முறையிடவும் இருக்கிறோம்.
இனி வங்கியின் அமைதிக்கு நாம் உத்திரவாதம் அளிக்க முடியாது. விரைவில் கூடும் நமது இரு சங்கங்களின் செயற்குழுக்கள் போராட்டத்திற்கான திட்டம் வகுக்கும். சந்திப்போம்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
good beginning
ReplyDeletekeep it up
write about kuttychathans
yar babu