18.11.12

தற்காலிக ஊழியர்களின் மாநாடும், பேரணியும்


இன்று நமது சங்கத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு இருக்கிறது, மிகுந்த உற்சாகத்தோடும், எழுச்சியோடும் இந்த நாள் குறித்து வைக்கப்படுகிறது.

PGBEAவின் அழைப்பை ஏற்று 170க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள், விருதுநகரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் காலை 10 மணிக்கு திரண்டு இருந்தனர்,

தற்காலிக ஊழியர்களின் இந்த பிரத்யேக மாநாட்டிற்கு PGBEA தலைவர் தோழர். மாதவராஜ் தலைமை தாங்கி, 2009 ஆண்டிலிருந்து, தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய, சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவு கூர்ந்தார். தற்காலிக ஊழியர்களுக்காக PGBEA மற்றும், PGBOU சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தது, தோழர்கள் காமராஜ், அண்டோ கால்பர்ட் சஸ்பென்ஷன் செய்யப்பட்டது, லேபர் கமிஷனர் முன்பு தொழில்தாவா தொடர்ந்தது, மதுரை ஹைகோர்ட்டில் தற்காலிக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதை எதிர்த்து ஸ்டே ஆர்டர் வாங்கியது, தொடர்ந்த முயற்சிகளின் பலனாக பாண்டியன் கிராம வங்கி நிர்வாகக் குழு தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய பரிந்துரைத்தது என வரலாற்றை தொகுத்தார். தற்காலிக ஊழியர்களும், எங்களைப் போல வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் நாள் தொலைவில் இல்லை என அவர் பேச்சை முடித்தபோது அரங்கம் முழுவதும் நம்பிக்கையின் எதிரொலிகளாய் கை தட்டி ஆரவாரம் எழுந்தன.

தொடர்ந்து, PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம், AIRRBEA மாநிலத் தலைவர் தோழர்.பிச்சைமுத்து, PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கம் ஆகியோர் , கோரிக்கையை விளக்கியும், நம்பிக்கையளித்தும் பேசினர்.

சி.ஐ.டி.யூ தலைவர்களில் ஒருவரும், சி.பி.எம் கட்சியின் விருதுநகர் மாவட்டச்செயலாளருமான தோழர்.சேகர், ‘நிரந்தர ஊழியர்களாக இருந்து கொண்டு, தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துப் போராட இடதுசாரிக் கருத்துக்கள் கொண்டவர்களால்தான் சாத்தியம், அவர்களால்தான் உங்கள் எதிர்காலத்திற்கு உத்திரவாதமளிக்க முடியும்”  என்றார்.

திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ, தோழர்.பாலபாரதி, “இதுபோன்று தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்காமல் வைத்திருப்பது பாண்டியன் கிராம வங்கியில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை அல்ல, மத்திய அரசின் கொள்கையே இதுதான்” என்பதை விளக்கினார். மேஎலும் “ இன்று சகலதுறைகளிலும் இதுபோல தற்காலிக ஊழியர்களை வைத்து, வேலை வாங்குவது என்பது இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதற்கு எதிராக திரண்டு, பணிநிரந்தரம் செய்ய திரண்டு இருக்கும் தற்காலிக ஊழியர்களை வாழ்த்தினார். நமது ஒற்றுமையும், போராட்டக் குணமுமே நமக்கான விடியலைக் கொண்டு வரும். PGBEA சங்க அதை நிஜமாக்கும்” என நம்பிக்கையளித்தார்.

தொடர்ந்து மதிய உணவுக்குப் பின், தற்காலிக ஊழியர்களின் பேரணி ஆரம்பமாகியது. தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்திலிருந்து, கருமாதி மடம், தெப்பக்குளம், மார்க்கெட் வழியாகச் சென்று, தேசபந்து மைதானத்தில் ஆவேசமான கோஷங்களுடன் சென்றடைந்தது. BEFI  சார்பில் தோழர்.மாரிக்கனியின் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளுடன் பேரணி நிறைவடைந்தது.

பாண்டியன் கிராம வங்கியின் தற்காலிக ஊழியர்களின் பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இது அவர்களின் எதிர்காலத்திற்காக ஏற்றப்பட்ட வெளிச்சம் என்பதே உண்மை.

தற்காலிக ஊழியர்களின் மாநாட்டு, பேரணி காட்சிகள் இங்கே.....









 





















1 comment:

  1. Excellent efforts put forth by PGBEA AND PGBOU. Our hearty congratulations to the leadership and the team who made this possible. Keep it up and stop not till they are regularised.

    C P Krishnan

    ReplyDelete

Comrades! Please share your views here!