3.11.12

Tamil Nadu Grama Bank?


கிராம வங்கிகளை ஒன்றிணைக்கும் (Amalgamation) மத்திய அரசின் இரண்டாம் கட்டத் திட்டம் குறித்து ஏற்கனவே நாம் குறிப்பிட்டு இருந்தோம்.

அக்டோபர் 1லிருந்து டிசம்பர் 31க்குள் 82 கிராம வங்கிகள் 46 கிராம வங்கிகளாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு துரிதமாக அரசுத்தரப்பில் இருந்து notificationகள் அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டன.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 82லிருந்து 71 கிராம வங்கிகளாக குறைக்கப்பட்டு இருக்கின்றன. அதன் பட்டியல் இதோ:



SL. NO.Name of the amalgamating RRB Name of the amalgamated RRB Head Office Sponsor Bank NO. of RRBs amalgamated
1Aryabarta G.B.  & Khetriya Kisan G.B. (Mainpuri)Aryabarta Khetriya G.B.Lucknow Bank of India
2
2Satpura Narmada G.B., Vidisha Bhopal G.B. & Mahakaushal G.B.  Central M.P. Gramin Bank Chindwara Central Bank of India3
3Bihar Ksh. Gramin Bank & Samastipur Gramin Bank Bihar Gramin Bank Bebusarai UCO Bank 2
4Madhya Bharat G.B., Sharda G.B. & Rewa Sidhi G.B.Madhya Pradesh Madhyanchal G.B. Sagar SBI 3
5Narmoda Malwa G.B.& Dhar Jhabua G.B. Nalanda Jhabua G.B. Indore Bank of India
2
6Cauvery Kalpataru G.B., Chikmagalur Kodagu G.B.,& Visveshvaraya G.B. Kavery Grameena Bank Mysore State Bank of Mysore 3
7Uttaranchal G.B. & Nainital Almora K.G.B. Uttarakhand Gramin Bank Dheradun SBI 2
8Utkal G.B. & Rushikullya G.B. Utkal Grameen Bank Bolangir SBI 2

நவம்பர் 1ம் தேதி ஒரிசா மாநிலம் உள்ளிட்ட பல மாநிலங்களில் amalgamationக்கான notificationகள் மேலும் புதிதாக அரசுத்தரப்பில் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. நவம்பர் 30க்குள் மேலும் பல amalgamation notificationகள் இருக்கும் எனவும், அதற்கான, பூர்வாங்க நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டன எனவும் தெரிய வருகிறது.

அரசு கீழ்க்கண்ட மாநிலங்களில் amalgamation செய்வதற்கான முடிவை அதிகாரபூர்வமாக எடுத்து இருக்கிறது. நிதியமைச்சகத்தின் office noteன் படி, amalgamation செய்ய முடிவெடுக்கப்பட்ட  மாநிலங்களின் பட்டியல் இதுதான்:

1.Andhra Pradesh, 
2.Bihar, 
3.Chhatisgarh, 
4.Haryana, 
5.Himachal Pradesh, 
6.J & K, 
7.Jharkhand, 
8.Karnataka, 
9.Kerala, 
10.Madhya pradesh, 
11.Maharaashtra 
12.Orissa, 
13.Punjab, 
14.Rajashtan, 
15.Tamilnadu, 
16.Utar prasesh, 
17.Uttarakhand and 
18.West Bengal.

தமிழ்நாட்டில் பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் amalgamation செய்யப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.

இந்த amalgamationக்கான consentஐ பெறுவதற்கு மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வந்த கடிதத்திற்கு, தமிழக அரசு கீழ்க்கண்ட ரீதியில் பதில் அளித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
“ஏற்கனவே தமிழ்நாட்டில் இரு கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அப்போது இதுபோல consent கேட்கப்பட்டதா? அப்படி கேட்கப்பட்டு, அதற்கு பதிலளிக்கப்பட்டு இருந்தால், அதுகுறித்த பேப்பர்களை தாருங்கள். இப்போதைய amalgamation குறித்து முடிவெடுக்க உதவியாய் இருக்கும்”

ஏற்கனவே அதியமான கிராம வங்கியும், வள்ளலார் கிராம வங்கியும் இணைக்கப்பட்டபோது இதுபோல, ‘மாநில அரசிடமிருந்து consent' கேட்கப்பட்டதாவெனத் தெரியவில்லை.

மேலும் இந்தியன் வங்கித் தரப்பிலிருந்து, தமிழ்நாட்டில் அப்படி ஒன்றிணைக்கப்படும் கிராம வங்கியின் கிராம வங்கியின் ஸ்பான்ஸர் வங்கியாக இந்தியன் வங்கியே இருக்க வேண்டுமெனவும் கோரிக்கை தீவிரமாக வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. ஒரிஸ்ஸாவில் உள்ள மூன்று கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து, அதன் ஸ்பான்ஸர் வங்கியாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பைத் தமிழகத்தில் தர வேண்டும் என இந்தியன் வங்கி தங்கள் தரப்பில் இருந்து வலியுறுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அகில இந்திய அளவில் AIBOC, AIBEA போன்ற சங்கங்கள் இந்த amalgamationக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட முயற்சிகள் செய்து வருகின்றனர்.

ஆனால், இவையெல்லாவற்றையும் மீறி மிக விரைவில் தமிழ்நாட்டில் பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியுன் ஒன்றாக இணைக்கப்பட்டே தீரும் என்பது உறுதி. திருநெல்வேலியில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு, உத்தேசிக்கப்பட்ட / (After amalgamation) இணக்கப்பட இருக்கிற கிராம வங்கியின் Board of Director ஆக இப்போதே நியமனம் செய்யப்பட்டு மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் Amalgamation விரைவில் வர இருக்கிறது என்பதற்கு இதையே நாம் சமிக்ஞையாக எடுத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!