பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என நம் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து, போராடியது. சட்ட ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. லேபர் கமிஷனர் முன்பு நமது சங்கம் தொழில் தாவா ஏற்படுத்தியது. விசாரணை நடைபெற்று வந்தது.
தற்காலிக கடைநிலை ஊழியர்களை நிரந்தரம் செய்ய பாண்டியன் கிராம வங்கி நிர்வாகக்குழுவில் முடிவு செய்து, ஸ்பான்ஸர் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள ஐ.ஓ.பி எம்பளாயிஸ் யூனியனின் ஊழல் மற்றும் முறைகேடுகளால், இங்குள்ள தற்காலிக கடைநிலை ஊழியர்களை நிரந்தரம் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டது.
எனவே லேபர் கமிஷனர் முன்னிலையில் நடந்த விசாரணை ஃபெயிலியர் ஆகியது. இனி, டிரியூப்னலில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அங்கு நிச்சயம் தற்காலிக கடைநிலை ஊழியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
இந்த நிலையில், தற்காலிக கடைநிலை ஊழியர்களின் தினசரி ஊதியத்தை ரூ.175/-லிருந்து ரூ.300/-க்கு உயர்த்த வேண்டும் என PGBEA கோரிக்கை வைத்தது. நிர்வாகத்திடம் பேசி வந்தது. ரூ.300/-ஆக இல்லையென்றாலும், ஒரளவுக்கு உயர்த்துவதாக நிர்வாகம் நம்மிடம் ஒப்புக்கொண்டது.
ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், இப்போது தற்காலிக கடைநிலை ஊழியர்களின் தினசரி ஊதியத்தை ரூ.225/-ஆக நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இன்று, கிளைகளுக்கு வட்டார அலுவலகங்களில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை PGBEAவும், PGBOUவும் பாராட்டுகின்றன. நேரம் காலம் இல்லாமல் வேலை பார்க்கும், அந்த ஊழியர்களுக்கு இது ஆறுதலாய் இருக்கும்.
அவர்களின் பணியை PGBயில் நிரந்தரப்படுத்தும் முயற்சியில், PGBEA தொடர்ந்து ஈடுபடும். வெற்றி பெறும்.
அதிகார கொலுவேறிய மனிதர்கள் முதலில் மறந்து போவது மனித நேயத்தை தான் போலும். தங்கள் பைகளில் இருந்து எந்த இழப்பும் ஏற்பட்டு விட போவதில்லை என்றாலும் உழைப்பை சுரண்டுவதில் அதிகாரச் செருக்கிற்கு எப்போதும் அலாதி ஆனந்தம் இருக்கவே செய்கிறது. இவை எல்லாவற்றையும் புரிந்து கொண்டே நாம் இயக்கங்களை முன்னெடுக்கிறோம்... இது போன்ற சிறு சிறு வெற்றிகள் நம்மை மேலும் முன்னெடுக்க வைக்கிறது.... வாழ்த்துக்கள் தோழர்களே!!! நம்பிக்கையோடு தொடர்வோம் நம் பயணத்தை....
ReplyDelete