9.7.13

Pension : Govt submitted its Affidavit

கிராம வங்கி ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டத்தில் அடுத்த முக்கியமான நிகழ்வு நடந்திருக்கிறது.

கர்நாடகா ஹைகோர்ட்டிலும். இராஜஸ்தான் ஹைகோர்ட்டிலும் - கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என  தெளிவான தீர்ப்பு கிடைத்தது. இந்த சமயத்தில் அப்போதைய மத்திய நிதியமைச்சர் திரு,பிரணாப் முகர்ஜியும், அதற்கான ஒப்புதலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசு ஹைகோர்ட் தீர்ப்புகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலும் செய்திருந்தது.

எனவே, கிராம வங்கி ஊழியர்களுக்கு சென்ற வருடமே அமலாக வேண்டிய பென்ஷன் திட்டம் காலதாமதமாகியது.

இதுவரை, கிராம வங்கி ஊழியர்களின் பென்ஷனுக்காக எந்தப் போராட்டமும் நடத்தாத பல கிராம வங்கி சங்கங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென முயற்சி செய்து வந்தன.

இந்த நிலையில் இப்போது மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தன் தரப்பை affidavit-ஆக தாக்கல் செய்திருக்கிறது. இதையொட்டி, சங்கங்கள் சார்பில் இதற்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து,  பென்ஷன் வழக்கு அடுத்து செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

லாபம் ஈட்டும் கிராம வங்கிகளில் மட்டுமே பென்ஷன் அமல்படுத்தப்படும் என்றும், பென்ஷனுக்கான நிதிக்கு ஊழியர்கள் தரப்பிலிருந்து  30 சதவீதம் ஏற்க வேண்டுமெனவும் அதில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவைகளை சரி செய்ய வேண்டியதிருக்கிறது என்றாலும், சுப்ரீம் கோர்ட்டில் கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கொள்கை ரீதியாக மத்திய அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது.அது மிக முக்கியமான முன்னேற்றம். நல்ல செய்தியும் கூட. அந்த affidavit-ஐ தோழர்களின் பார்வைக்கு தருகிறோம்.









No comments:

Post a Comment

Comrades! Please share your views here!