Recruitment: Scale I Officer results
இட ஓதுக்கீட்டில் நிலவிய குழப்பங்களை சங்கங்கள் சுட்டிக்காட்டி சரிசெய்த பிறகு, பாண்டியன் கிராம வங்கியில் Scale I Officerக்கான இண்டர்வியூ நடந்து முடிந்திருக்கிறது.
மே 29ம் தேதி போர்டு மீட்டிங் நடத்தப்பட்டு, அதன் பிறகு Results அறிவிக்கப்படும் என முதலில் சொல்லப்பட்டது. இப்போது போர்டு மீட்டிங் ஜூன்11ம் தேதிக்குத் தள்ளிப் போயிருக்கிறது. எனவே ஜூன் 11ம் தேதிக்குப் பிறகுதான் results தெரிவிக்கப்படும்.
Recruitment: Office Assistants
IBPS 2014ம் ஆண்டிற்கான தேர்வு செப்டமபரில் நடக்க இருக்கிறது. அதுவரைதான் IBPS2013ம் ஆண்டில் எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண்களை பயன்படுத்த முடியும். எனவே தேர்வு எழுதிய பலரும் எப்போது பாண்டியன் கிராம வங்கியில் Office Assistantற்கான advertisement வெளியாகும் என காத்திருக்கின்றனர். பாண்டியன் கிராம வங்கியில் கடும் ஆள் பற்றாக்குறை இருப்பதால் ஊழியர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தொழிற்சங்கங்களும் விரைவாக Office Assistantற்கான இண்டர்வியூவை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. நிர்வாகமோ ஸ்பான்ஸர் வங்கியான ஐ.ஓ.பியிலிருந்து இன்னும் அனுமதி வரவில்லை என இதுவரை சொல்லிக்கொண்டு இருந்தது.
சிலநாட்களுக்கு முன்பு ஐ.ஓ.பியிலிருந்து அனுமதி வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் Office Assistant recruitment குறித்து பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்திலிருந்து உரிய advertisement அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Joint Forum of All Trade Unions in PGB
பாண்டியன் கிராம வங்கியில் உள்ள அனைத்து சங்கங்களின் முக்கிய தலைவர்கள் நேற்று (29.5.2014) சந்தித்துப் பேசி இருக்கின்றனர். ஒட்டுமொத்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நலன்களையும் உரிமைகளையும் முன்னிறுத்தி கூட்டு இயக்கம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுவான கோரிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக -
1. ஒழுங்கு நடவடிக்கைகளில் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மீதான தாக்குதல்கள்
2. ஓய்வு பெறும் தோழர்களின் பாதிப்புகள்
3. தலைமையலுவலகத்தை மறுசீரமைப்பது
ஆகிய மூன்று விஷயங்களிலும், இனிவரும் காலங்களில் PGBEA, PGBWU, PGBSEWA, PGBOU, PGBOA ஆகிய ஐந்து சங்கங்களும் ஒருமித்த பார்வையுடன், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
Sir..your information is very much useful...eager to join in your union...but still waiting for scale 2 interview dates...if you know any tentative date, please share...
ReplyDelete