பாண்டியன் கிராம வங்கியில் ஊழியர்கள் நலன்களும், உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதனை பாண்டியன் கிராம வங்கியில் உள்ள அனைத்து சங்கங்களும் சமீப காலமாக விமர்சித்து வருகின்றன.
ஏற்கனவே அப்ரைசர்கள் இடமாறுதலின் போது, அனைத்து சங்கங்களும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து, ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் பிரச்சினையிலும் அனைத்து சங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
எனவே, பொதுவான பிரச்சினைகளில் கூட்டு இயக்கத்தை கட்டுவது, பேச்சுவார்த்தைகள் நடத்துவது என PGBEA, PGBOU சங்கங்களின் கடந்த கூட்டு செயற்குழு முடிவு செய்தது. ஏறத்தாழ இதுபோன்ற முடிவை அனைத்துச் சங்கங்களும் எடுத்திருந்தன.
எனவே அனைத்துச் சங்கங்களின் தலைவர்களும் கூடி, விவாதித்து, முன்னிறுத்தப்பட வேண்டிய பொதுவான பிரச்சினைகளை இறுதி செய்ய, PGBEA சார்பில் PGBOU, PGBWU, PGBSEWA, PGBBOA ஆகிய சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்குக் கடிதம் எழுதப்பட்ட்து.
இந்நிலையில், நிர்வாகம் கடந்த சில தினங்களில் எடுத்த சில ஒழுங்கு நடவடிக்கைகளின் முடிவுகள் இரக்கமற்றும், கடுமையாகவும் இருந்தன. அவைகள் குறித்து உடனடியாக நிர்வாகத்துடன் பேச சங்கங்கள் முடிவு செய்தன. 23.5.2014 அன்று, available ஆக இருந்த PGBEA, PGBOU, PGBSEWA, PGBWU ஆகிய நான்கு சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் முறையே தோழர்.மாதவராஜ், சங்கரலிங்கம், ராஜேந்திர சோழன், பாலாஜி பாலகிருஷ்னன் ஆகியோர் வங்கியின் சேர்மனை சந்தித்துப் பேசினர்.
பேச்சுவார்த்தையில் நாம் முன்வைத்த விஷயங்களை கவனமாகக் கேட்டுக்கொண்ட, சேர்மன் அவைகள் குறித்து பொதுமேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விவாதித்து இயன்றவரை சாதகமான முடிவுகள் எடுப்பதாகக் கூறினார். தலைமையலுவலகத்தை புனரமைப்பது குறித்தும், sensitive postகளில் மூன்று வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒருவர் பணியாற்றக் கூடாது என்னும் CVC guidelines குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இது ஒரு ஆரம்பம்தான். முன்னோட்டம்தான். விரைவில் PGBEA, PGBOU, PGBWU, PGBSEWA, PGBOA ஆகிய ஐந்து சங்கங்களும் கூடி விவாதித்து, ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பிரச்சினையில் கூட்டாக செயல்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!