ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை எதிர்த்து PGBEAவும், PGBOUவும் தொடர் இயக்கங்கள் ஆரம்பித்து நடத்தி வருகிறோம்.
விரைவாக புதிய பணிநியமனங்கள் நடத்தப்பட்டு கிளைகளில் அதிகரித்துவரும் பணி நெருக்கடிகளை தீர்க்கவேண்டும் என்றும், ஓய்வு பெறுகிறவர்களை ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் துன்புறுத்துவதை எதிர்த்தும், ஒழுங்கு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இரக்கமற்ற மனிதாபிமற்ற அணுகுமுறையை எதிர்த்தும், நிர்வாக நடைமுறைகளில் உள்ள அதீத காலதாமதத்தை எதிர்த்தும், தலைமையலுவலகத்தை மறுசீரமைக்கக் கோரியும் இந்த இயக்கம் நடைபெற்று வருகிறது.
நமது கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் விளக்கி முக்கிய நகரங்களில் பிளக்ஸ் பேனர்கள் வரிப்பது என முடிவு செய்திருந்தோம். அதன் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வைக்கப்பட்டு வருகின்றன.
நான்கு மண்டல அலுவலகங்கள் முன்பாக ஆரப்பட்டங்கள் நடத்துவது என அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தி வருகிறோம். 14.05.2014ம் தேதி தூத்துக்குடியிலும், 21.052014ம் தேதி நெல்லையிலும் மிகுந்த எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கின்றன. நமது உக்கிரமான கோஷங்களும், உண்மையான பிரச்சினைகளும் வீதிகளில் ஒலித்திருக்கின்றன.
இன்னும் விருதுநகர், சிவகங்கை மண்டல அலுவலகங்கள் முன்பாக நடக்க இருக்கின்றன. அதனையடுத்து ஜூன் 10ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பாக, நமது வங்கியில் ஓய்வு பெற்றவர்கள் குடும்பத்தோடு பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

14.5.2014 அன்று தூத்துக்குடி வட்டார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
21.5.2014 அன்று நெல்லை வட்டார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
இன்னும் விருதுநகர், சிவகங்கை மண்டல அலுவலகங்கள் முன்பாக நடக்க இருக்கின்றன. அதனையடுத்து ஜூன் 10ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பாக, நமது வங்கியில் ஓய்வு பெற்றவர்கள் குடும்பத்தோடு பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!