19.5.14

நமது PF கணக்குகளில் குளறுபடி!


மாதா மாதம் நமது சம்பளத்தில் Provident Fundற்கான பணம் பிடிக்கப்படுகிறது. அவை நமது கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட்டு, அதற்குரிய வட்டியெல்லாம் நமது கணக்கில் ஏறிக்கொண்டு இருக்கிறது என நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நிஜம் அப்படியில்லை. இது ஒரு பெரும் அதிர்ச்சியாக பலருக்கும் இருக்கும்.

நமது தோழர்கள்  பெரும்பாலும் இந்த PF slip குறித்து அலட்டிக்கொள்வதில்லை. சிலர் அதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். அந்த வருடத்தில் நமது ஷேர் எவ்வளவு, எம்பளாயர் ஷேர் எவ்வளவு, எவ்வளவு வட்டி கிடைத்திருக்கிறது என கவனமாய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்போதாவது தொடர்பு கொண்டு, “என்ன தோழர், இந்த வருசம் PF slip வரலியே, என்னன்னு பாருங்க” என்பார்கள். நாமும் PAD-யில் இதுகுறித்து பேசுவோம். ‘வந்துவிடும்’ என்பார்கள். கொஞ்சம் காலதாமதானாலும் வந்துவிடும்.

ஆனால் 2013 மார்ச்சுக்குரிய  PF slip வரவேயில்லை. 2014 மார்ச்சும் வந்து இரண்டு மாசங்களாகிறது. PF  slipஐக் காணோம். தோழர்கள் சிலர் நம்மிடம் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார்கள். PAD-ல் கேட்டால் வழக்கம்போல் சரியான பதில் இல்லை.

PF Officeக்குரிய Websiteல் போய் members portalல் register செய்து நமது e-passbookஐ பார்த்த பிறகுதான் அதிர்ச்சியடைய ஆரம்பித்தோம். ஒவ்வொரு மாதமும் நமது சம்பளத்தில் பிடிக்கப்படுகிற  தொகை நமது கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் 2012 வரை நமக்குரிய interest  மட்டுமே credit ஆகியிருக்கிறது. 2013, 2014 மார்ச்சுக்கு interest ceredit ஆக வில்லை.

PAD-ல் உள்ள தோழர்களிடம் ‘ஏனிப்படி’ என கேட்டோம். இரண்டு வருசமாய் PGBக்கும், PF Officeக்கும் எதோ டேலி ஆகாமல் இருப்பதாக தெரிவித்தார்கள்.

சென்ற சனிக்கிழமை (17.5.2014) அன்று ஜெனரல் மேனேஜரை PGBEA சார்பில் சந்தித்து, இதுபற்றி கேட்டபோது, அவர், இது ஒரு பிரச்சினையே இல்லாத மாதிரி சர்வசாதாரணமாக கேட்டு, என்னெவென்று பார்ப்பதாகச் சொன்னார்.

“2013ம் வருடம் மார்ச்சில் உரிய நேரத்தில் வட்டி PF கணக்கில் ஏற்றப்பட்டு இருந்தால், அதற்குரிய வட்டியும் சேர்த்து 2014 மார்ச்சில் கிடைக்குமே, இப்போது அது இழப்புத் தானே?” என்றோம்.

“இல்லை. அதெல்லாம் சரி செய்யப்பட்டுவிடும்” என கூலாகச் சொன்னார்.

இரண்டு வருடமாக, இந்த வங்கியில் பணிபுரியும் 900க்கும் மேற்பட்டவர்களின் PF கணக்குகளில் வட்டி ஏற்றப்படவில்லை. அதற்குரிய பதற்றமும், பதைபதைப்பும் கொஞ்சம் கூட நிர்வாகத்தில் இல்லை. இதுதான் இவர்களது லட்சணம்.

PF officeம் PGBயும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் யாருக்கு இழப்பு?

இரண்டு வருடமாய் டேலி ஆகவில்லை என்றால் என்ன செய்துகொண்டு இருக்கிறது PAD?

ஊழியர்களுக்கு விரோதமான விஷயங்களில் துடிப்பாய் இருப்பவர்கள், இந்த மிக முக்கியமான விஷயத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

வங்கிக்கு ஒரு இழப்பு என்றால் மட்டும் நமது ஓய்வுகாலச் சலுகைகள் வரை கைவைத்து நமது வயிற்றிலடிக்கிறது நிர்வாகம், இப்போது நமக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த இழப்புக்கு யாரைப் பொறுப்பாக்குவது?

இதுகுறித்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை PGBEAவும், PGBOUவும்  துவக்கியிருக்கின்றன. விடப்போவதில்லை.

2 comments:

  1. Sir, u r right. I have checked with pf website for my pf balance because of my salary revision a good amt supposed to be credited and found it was not updated. This matter is a cause of our concern.

    ReplyDelete

Comrades! Please share your views here!