7.6.14

PGBEA News 7.6.2014


AIRRBEA representation to Prime Minister:

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்து, கிராம வங்கி ஊழியர்களின் பிரச்சினைகளை விளக்கி AIRRBEA சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பென்ஷன், ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளது போல அலவன்சுகள், தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்வது, NRBI ஆகிய விஷயங்களை முன்வைத்து, பிரதமர் தலையிட்டு தீர்த்து வைக்குமாறு AIRRBEA வேண்டுகோள் வைத்திருக்கிறது.

AIRRBEA Meeting with NABARD officials:

6.6.2014 அன்று AIRRBEA தலைவர்கள் மும்பை சென்று நபார்டு தலைமையலுவலகத்தில் Chairman மற்றும் Chief General Manager  ஆகியோரை சந்தித்து கிராம வங்கி ஊழியர்களின், அலுவலர்களின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றனர். அப்போது புதிதாக பணிக்குச் சேர்ந்திருக்கிற ஊழியர்களுக்கு இரண்டு Graduation increments கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறித்தும் பேசி இருக்கின்றனர். நபார்டு பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.

Bi-partite Talks:

10வது இருதரப்பு ஒப்பந்தத்திற்கான அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை மும்பையில் வரும் 13.6.2014 அன்று IBAவுக்கு UFBUவுக்கும் இடையில் நடக்க இருக்கிறது.

PGB Board meeting:

பாண்டியன் கிராம வங்கி Board meeting  வரும் 11.6.2014 அன்று நடப்பதாக நமது வெப்சைட்டில் செய்தி வெளியிட்டு இருந்தோம். ஆனால் 10.6.2014 அன்று நடக்க இருக்கிறது என இப்போது தெரிய வருகிறது.

PGBEA and PGBOU இயக்கம்:

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, PGBEAவும், PGBOUவும் சேர்ந்து இயக்கம் நடத்தி வருகிறோம். அதன் முதற்கட்டமாக, மண்டல அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென முடிவு செய்து, நெல்லை மற்றும் தூத்துக்குடியில் நடத்தினோம்.

இப்போது பாண்டியன் கிராம வங்கியில் உள்ள அனைத்துச் சங்கங்களும் Head Office revamping, Disciplinary actions by management  மற்றும் Attack on Retirment  ஆகிய விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்படுவதென முடிவு செய்து இருக்கின்றன. இதனையொட்டி சிவகங்கை மற்றும் விருதுநகர் மண்டல ஆர்ப்பாட்டங்களும், 10.6.2014 அன்று நடக்க இருந்த ஓய்வு பெற்றவர்கள் குடும்பத்தோடு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படுகின்றன.

Achievement of All TUs in PGB:

கடந்த மே மாதத்தில், மேலப்பாளையம் கிளையில் பணிபுரிந்து ஓய்வு பெற இருந்த அலுவலர் தோழர்.மதுரம் அவர்களுக்கு ஓய்வுகாலச் சலுகைகளை நிறுத்தி வைப்பதற்கான முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டது. ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்கள் இருந்தபோது, திடுமென சில பிரச்சினைகளை எழுப்பியது நிர்வாகம். நமது வங்கியில் உள்ள அனைத்துச் சங்கங்களும் ஓரணியாகத் திரண்டு, நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் விளைவாக தோழர் மதுரம் எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் சுமூகமாக ஓய்வு பெற்றிருக்கிறார். இது அனைத்துச் சங்கங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த முக்கிய வெற்றி. இந்த ஒற்றுமை தொடர வேண்டும் அனைத்துச் சங்கத் தோழர்களும் விரும்புகின்றனர்.

1 comment:

  1. Comrades..., awaiting for board meeting updates regarding scale 1/2/3 interview schedule...pls cascade to us.... eagerly awaiting.....

    ReplyDelete

Comrades! Please share your views here!