Results of Officers recruitment:
பாண்டியன் கிராம வங்கியில் scale I ஆபிஸர்களுக்கான இண்டர்வியூ நடந்து முடிந்திருந்தது. அதன் முடிவுகள் நேற்று வங்கியின் வெப்சைட்டில் வெப்சைட்டில் www.pandyangramabank.in ல் வெளியிடப்பட்டு இருக்கிறது. கீழ்கண்ட இந்த லிங்க்கில் போய் பார்க்கலாம்:
http://www.pandyangramabank.in/SCALE%20I%20RESULTS%2010.06.2014.pdf
விரைவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வங்கியிலிருந்து முறையான கடிதங்கள் வரும். எப்போது join செய்ய வேண்டும், என்றைக்கு டிரெயினிங், என்னென்ன சர்டிபிகேட்கள் கொண்டு வரவேண்டும் என்பதெல்லாம் தெரிவிக்கப்படும். அந்தப் புதிய தோழர்களுக்கு வாழ்த்துகள்.
Retirement of GM (A)
பாண்டியன் கிராம வங்கியில் 19 மாத காலம் GM-A வாக பணிபுரிந்து வந்த மிஸ்டர் ராமநாதன் VRS கொடுத்து ரிடையர் ஆகியிருக்கிறார். அவருக்கு கடந்த சனிக்கிழமை 7.6.2014 அன்று, வங்கியின் தலைமையலுவலகத்தில் பிரிவுபச்சார விழா நடைபெற்றிருக்கிறது. அவருக்குப் பதிலாக புதிய ஜீ.எம்மை, ஸ்பான்ஸர் வங்கியான ஐஓபி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Managers certificate - New Format:
இதுவரை இருந்த Managers Certificateக்குப் பதிலாக புதிய format ஒன்று பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தால் கிளைகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு பக்கத்திலும், மேனேஜருடன், Office Assistant-ஆகிய கிளரிக்கலும் கையெழுத்திடும்படி அமைந்திருக்கிறது. இதமூலம் கிளையின் நடைபெறும் சகல காரியங்களுக்கும் கிளரிக்கலையும் பொறுப்பாக்குவதாய் தெரிகிறது.
ஏற்கனவே ஒவ்வொரு cadreக்கும் அவரவர் duties and responsibilities-ஐ வரையறுக்க வேண்டும் என நமது சங்கங்கள் வலியுறுத்திக்கொண்டு இருக்கின்றன. எதாவது சாக்குப் போக்குச் சொல்லி மறுக்கிற நிர்வாகம், இதுபோன்ற Managers certificateஐ வெளியிடுவது ஊழியர் விரோதச் செயலாகவே கருதுகிறோம்.
Joint Custodian ஆக, கிளரிக்கல் ஊழியர்கள், cash on handற்கும், No.of jewel packetsற்குமே பொறுப்பாவார்கள். இதுதவிர மற்ற விஷயங்களுக்கு கிளரிக்கல் ஊழியர்கள் பொறுப்பாக மாட்டார்கள் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதற்கட்டமாக, PGBEAவும், PGBWUவும் இணைந்து நிர்வாகத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய கடிதம் கொடுக்க பேசி வருகிறோம்.
PGB Educational Award:
பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் குழந்தைகள் இந்த வருடம் பிளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றமைக்கு பாராட்டும் விதமாக அவர்களை அழைத்து வரும் 14.6.2014 சனிக்கிழமை அன்று தலைமையலுவலகத்தில் விழா ஒன்று நடத்த இருக்கிறது நமது நிர்வாகம். அவர்களுக்கு PGB Educational Award கொடுத்து கௌரவிக்கவும் இருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் நமது பாராட்டுகள்.
AIRRBEA meets New Ministers at Delhi:
நேற்று 10.6.2014 அன்று டெல்லியில் நமது AIRRBEA தலைவர்கள் அடங்கிய குழு மாண்புமிகு புதிய அமைச்சர்கள் - சந்தோஷ் கங்வார், ராம்விலாஸ் பஸ்வான், டாக்டர் சஞ்சீவ் பல்யாண், எடியூரப்பா - ஆகியோரையும், எம்பிக்கள் - ஜெகதாம்பிகா பால், ராஜேந்திர அகர்வால், ஜிதேந்திரா சௌத்திரி, எஸ்.பி தத்தா ஆகியோரையும் மேலும் பல மாநிலத் தலைவர்களையும் சந்தித்து பென்ஷன் உள்ளிட்ட நமது பிரச்சினைகளை விளக்கி ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
only 81 candates are selected????????
ReplyDeletethere is possblity for secnd list
ReplyDeleteOnly 81 candidate selected but called for 100 vacancis
ReplyDeleteCongrates to all selected candidate...is there any second list
ReplyDeleteStill no notification for office assistant???
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWHAT ABOUT REMAINING 19 VACANCIES.WHY THERE IS NO MARK INDICATION FOR SELECTED CANDIDATES.HOW CAN WE TRUST THIS
ReplyDeleteany news regarding scale 2 interview ?
ReplyDeleteon wht.basis u have selected these candidates????????
ReplyDeletethere is a possiblity for second list????
ReplyDeleteஇங்கு பலரும் 81 இடங்களே அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து விளக்கம் கேட்டு இருக்கின்றனர்.கடந்த சில Recruitmentல், ST பிரிவினருக்கான ஒதுக்கீட்டிற்கு ஏற்ற வகையில் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. அதற்குரிய backlog vacancies நிரப்பப்படுவதற்காக. 19 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக நிர்வாகத்தரப்பில் சொல்லப்படுகிறது.
ReplyDeletesir,when is office recruitment?pls reply ..
Deletesir,when is office assistant recruitment...pls reply us..
Deleteஅறிவிக்கப்பட்ட இந்த 81 பேரில், சிலர் வேலைக்குச் சேராமல் இருப்பார்கள். அந்த இடங்களுக்கு இரண்டாவது லிஸ்ட் அறிவிக்கப்படும். இதுதான் நடைமுறையாய் இருந்து வருகிறது.
ReplyDeletesir, when can we expect assistant notification .............pls reply sir
DeleteSir why don't they release the mark obtained written exam mark +interview mark
ReplyDeleteSir, Any news about scale 2, IT officer post?
ReplyDeletePallavan had made recruitment twice in tis year bt in pandyan for office assistant no recruitment ha done so far.. only 2 more months for ibps scorecard 2 expire.. from ur site we came 2 knw tat iob had given permission 2 recruit bt still wat is the delay?? kindly talk with managment abt tis issues..
ReplyDeleteSir IBPS announce RRB recruitment 2014.. registration starts on 18-06-2014. then what about Pandyan Bank Clerk recruitment 2013? sir please kindly give me your kind information.
ReplyDelete