‘சென்றது இனி மீளாது’ என்னும் மகாகவியின் பாடலில் வரும், ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ என்னும் வார்த்தைகள் காற்றைப் போல நம்மிடையே இந்த நேரத்தில் வீசிக்கொண்டு இருக்கிறது.
ஒற்றுமை ஒன்றை மட்டும் முன்னிறுத்தி, நம் இடையே இருந்த முரண்பாடுகளை களைந்து நிற்பது என முடிவு செய்திருக்கிறோம்.
ஆம், தோழர்களே!
PGBEAவும், PGBWUவும் இணைந்து ஒரே சங்கமாக நிமிர்ந்து நிற்கும் காலம் கனிந்திருக்கிறது.
இரண்டு சங்கத்தின் தலைவர்களும் கடந்த சில நாட்களாக- திறந்த மனதுடன் பேசியதன் விளைவாக இப்படியொரு மகத்தான நிகழ்வு சாத்தியமாகி இருக்கிறது. நாம் பிரிந்திருப்பதனால் இழந்தவைகளையும், நாம் ஒன்றுபட்டால் பெற இருப்பவைகளையும் நினைத்துப் பார்த்ததால் இந்த அபூர்வமான, ஆக்கபூர்வமான காரியம் நிஜமாகி இருக்கிறது.
15.6.2014 அன்று கூடிய நமது இரு சங்கங்களின் செயற்குழுக்கள் PGBEA, PGBWUவின் இணைப்பை ஏக மனதாக உறுதி செய்து இருக்கின்றன. இனி- இரண்டு சங்கங்களின் உறுப்பினர்கள் நிறைந்த சபையில், பொதுக்குழுவில், இந்த இணைப்பு ஒரு முறையான தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டியது இருக்கிறது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டு இருக்கிறது.
ஜூலை, 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), திருநெல்வேலியில் ‘நம் ஒற்றுமை மாநாடு’ எழுச்சியோடு நடக்க இருக்கிறது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுவிட்டன. விரைவில் அழைப்பிதழ்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்க இருக்கிறோம்.
மாநாட்டுச் செலவுக்காக, திருப்புவனம் கிளையில் PGBEA-PGBWU conference fund என்னும் பெயரில் சேமிப்புக்கணக்கு,துவங்கப்பட்டு தோழர்களுக்கு சர்க்குலரில் தெரியப்படுத்தப்படும். தோழர்கள் தங்கள் பங்களிப்பாக கிளரிக்கல் தோழர்கள் ரூ.600/-ம், மெஸஞ்சர்த் தோழர்கள் ரூ.400/-ம் உடனடியாக அனுப்பி வைக்கும்படி வேண்டுகிறோம்.
தோழர்களே!
நம் இரு சங்கங்களும் இனி வேறு வேறு இல்லை.
நமக்குள் பிரிவும் இல்லை. பேதமும் இல்லை.
ஒரு மகத்தான அத்தியாயம் பிறக்கிறது. நமது ஒற்றுமையால் அதன் பக்கங்களை நாம் எழுதுவோம். வாருங்கள்.
06.07.2014....!
நமது மாநாடு மட்டுமல்ல,
‘ஒற்றுமை’ யின் திருவிழா!
வாருங்கள்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்.எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.வரவேண்டும் திருநாட்டில் பொது உடைமை.
ReplyDeleteஊழியர் நலனை முன்னிருத்தும் உங்கள் இரு சங்கங்களின் ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteBEFI மாரிக்கனி S.C.
மாற்றம் ஒன்றே மாறாதது !
ReplyDeleteவாழ்த்துக்கள்