18.6.14

PGBEA News - 18.06.2014


10 வது இருதரப்பு பேச்சுவார்த்தை:

சென்ற 13.6.2014 அன்று IBAவுக்கும்  United Forum of Bank unions (UFBU) வுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. 11% க்கு மேல் ஊதிய உயர்வு இல்லை என IBA பிடிவாதமாக இருந்திருக்கிறது.
UFBU தரப்பில் 25% உதிய உயர்வு வேண்டும் என உறுதியாய் இருந்திருக்கின்றனர். மேலும் ‘வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை’ என்னும் கோரிக்கையையும் IBA  நிராகரித்து விட்டது. இந்த நிலையில் UFBU உடனடியாக மத்திய நிதியமைச்சரை சந்தித்துப் பேசுவது என முடிவு செய்திருக்கிறது. பேச்சுவார்த்தையைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை UFBU  தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Office Assistants Recruitment:

பாண்டியன் கிராம வங்கியில் Office Assistantsற்கான recruitment notification இந்த வார இறுதிக்குள்  வெளியாகும் என உறுதியாகக் கூறப்படுகிறது.

Training for Newly Recruited Officers:

Officers recruitmentல், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 30 முதல் நான்கு நாட்கள் முதல் batchஆகவும், ஜூலை 4ம் தேதி முதல் 4 நாட்களுக்கு அடுத்த batch ஆகவும் டிரெய்னிங் தலைமையலுவலகத்தில் (விருதுநகரில்) கொடுக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து தனித்தனியாக கடிதங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன.

PGBEA-PGBWU இணைப்பு மாநாடு:

PGBEA- PGBWU இணைப்பு மாநாடு வரும் ஜூலை 6ம் தேதி நடக்க இருப்பது குறித்து தெரிவித்து இருந்தோம்.  திருநெல்வேலியில் மகாராஜா நகரில் அமைந்துள்ள ‘ஆரியாஸ் மஹால்’ என்னும் மண்டபம், மாநாடு நடக்கும் இடமாக முடிவுசெய்யப்பட்டு இருக்கிறது. PGBEA, PGBWU தலைவர்கள் நேற்று தலைமையலுவலகம் சென்று வங்கியின் சேர்மன், ஜீ.எம்மை சந்தித்து மாநாட்டிற்கு வரவேண்டுமென  முறையாக அழைப்பு விடுத்துள்ளனர்.

4 comments:

Comrades! Please share your views here!