27.6.14

PGBEA News - 27.6.2014


Office Assistants Recruitment:

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த Office Asssistantsற்கான Recruitment பாண்டியன் கிராம வங்கி வெப்சைட்டில் ( http://www.pandyangramabank.in ) வெளியாகி இருக்கிறது. மொத்தம் 102 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. Online Application 27.6.2014ல் ஆரம்பித்து, 14.7.2014ல் முடிவடைகிறது.

Advertisement
Challan
Apply Online

PGBEA - PGBWU Amalgamation conference:

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கமும், பாண்டியன் கிராம வங்கி வொர்க்கர்ஸ் யூனியனும் ஒரே சங்கமாக இணையும் மாநாடு குறித்தும் மாநாடு தேதி 6.7.2014 என்றும் தெரிவித்திருந்தோம். மாநாடு தேதி 13.7.2014 என இப்போது முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Temporary Messengers Regularisation:

தற்காலிக மெஸஞ்சர்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென்று லேபர் கமிஷனர் முன்பு PGBEA தொழில் தாவா ஏற்படுத்தியதும், அந்தத் தாவா பின்னர் Industrial Tribunalக்கு refer செய்யப்பட்டதும் தோழர்களுக்கு நினைவிலிருக்கும். அந்த வழக்கில் நமது தரப்பிலும், நிர்வாகத்தரப்பிலும் affidavitகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. இனி சாட்சியங்கள் அளிக்கப்பட வேண்டும். அதன் பிறகு இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட வேண்டும். எதிர் வரும் ஜூன் 30ம் தேதி, நமது தரப்பில் சாட்சியாக PGBEA பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ் ஆஜராகி சாட்சியம் அளிக்க இருக்கிறார்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. When will u schedule for clerk interview ... Waiting for one year with valid ibps score.. Next IBPS RRB 2014 also announced... How long do u take for scheduling for interview.. Plz reply

    ReplyDelete

Comrades! Please share your views here!