16.7.14

PGBEA - PGBWU இணைப்பு மாநாடு!

13.7.2014,!
ஞாயிற்றுக்கிழமை!!

 நமது தொழிற்சங்க இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாளாகி விட்டிருந்தது. மாநாடு நடந்த ‘ஆரியாஸ் மஹாலின்’ ஒவ்வொரு பகுதியிலும் சந்தோஷமும், நட்பும் ததும்பி இருந்தது. ஏக்கங்கள் எல்லாம் கலைந்து, ஒரு கனவு மெய்ப்பட்ட சிலிர்ப்போடு தோழர்கள் அனைவரும் காணப்பட்டனர்.

’ஒற்றுமையின் திருவிழாவாக’ நடந்த நம் இணைப்பு மாநாடு அதற்குரிய எழுச்சியோடு விளங்கியது. நானூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் நிறைந்த அந்த மாபெரும் சபையில் 2008க்குப் பிறகு பணிக்குச் சேர்ந்த தோழர்கள் அதிகமாக கலந்துகொண்டு உற்சகாகமாக இருந்தனர். அவர்களே இந்த மாநாட்டின் அர்த்தமாகத் திகழ்ந்தனர். எதிர்காலம் நம்பிக்கையோடு தெரிந்தது.

மாநாட்டிற்கு  தோழர்.S.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தோழர்.S.சங்கரசீனிவாசன் முன்னிலை வகித்தார். நமது அழைப்பை ஏற்று வங்கியின் சேர்மன் திரு.கார்த்திகேயன், பொதுமேலாளர் திரு.ராமசுப்பு ஆகியோர் வந்திருந்தனர். AIRRBEAவின் அகில இந்தியத் தலைவர்கள் தோழர்.வெங்கடேஷ்வரரெட்டி, தோழர் நாகபூஷண்ராவ் ஆகியோரும்,  AIRRBEA-TN ஆலோசகரும், BEFI -TN மாநிலப் பொதுச்செயலாளருமான தோழர். சி.பி.கிருஷ்ணன் மற்றும் AIRRBEA-TN தலைவர் தோழர்.டி.கிருஷ்ணனும் வந்திருந்தனர். மேலும் நமது சகோதரத் தொழிற்சங்கங்களின் சார்பில் நமது அழைப்பை ஏற்று தோழர்.சங்கரலிங்கம் (GS - PGBOU), தோழர்.போஸ்பாண்டியன் (Vice President - PGBOU), தோழர்.இலக்குவன் (GS - PGBOA), தோழர்.ஐ.சுப்பிரமணியன் (President - PGBOA), தோழர்.ராஜேந்திரசோழன் (GS - PGBSEWA) ஆகியோரும் வந்திருந்தனர். இணைப்பு குறித்து பேசுவதற்கு தோழர்.மாதவராஜும் தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணனும் இருந்தனர். அனைவரையும் தோழர்.விவேகானந்தன் வரவேற்று மேடையில் வந்து அமருமாறு அழைப்பு விடுத்தார்.


மாநாட்டின் சில காட்சிகள்...

(மாநாட்டில் புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் தந்த புகைப்படங்கள் இவை. பல காட்சிகள் விடுபட்டிருக்கலாம். மன்னிக்கவும்.)

உற்சாகத்தோடு தோழர்கள் மாதவ்ராஜ், பாலசுப்பிரமணியம், சி.பி.கிருஷ்ணன்

நம் தோழர்கள்

இணைப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன

நம் தோழர்கள்

தோழர். ஐ.சுப்பிரமணியம் வாழ்த்துகிறார்

தோழர்.போஸ்பாண்டியன் வாழ்த்துகிறார்

நம் தோழர்கள்

தோழர்.மாதவராஜ் இனைப்பு குறித்து.....

நம் தோழர்கள்

தோழர்.பாலசுப்பிரமணியன் இணைப்பு குறித்து.....

தோழர்.சி.பி.கிருஷ்ணன் வழிகாட்டுகிறார்

தோழர்.நாகபூஷண்ராவ், AIRRBEA குறித்து விளக்குகிறார்

தோழர்.வெங்கடேஸ்வரரெட்டி, AIRRBEA வில் இணைந்தமைக்கு பாராட்டுகிறார்

நம் தோழர்கள்

சேர்மன் திரு.கார்த்திகேயன் வாழ்த்துகிறார்!

நம் தோழர்கள்!

பத்திரிகையாளர் சந்திப்பில் தோழர்கள் பாலசுப்பிரம்ணியன், மாதவராஜ்






1 comment:

  1. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Comrades! Please share your views here!