13.11.14

PGB நிர்வாகத்தின் கெடுபிடிகளை மீறி நவம்பர் 12 வேலைநிறுத்தம் வெற்றி!

10 வது இருதரப்பு ஒப்பந்தப்படி, நியாயமான ஊதிய உயர்வு, 2012ம் ஆண்டு நவம்பர் மாதமே வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு வருடங்கள் காலதாமதமாகியும், அரசும், IBAவும் சேர்ந்து இழுத்தடிக்கின்றன. இந்த தேசத்தில் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் சலுகைகள் தாராளமாகக் கிடைக்கின்றன. உழைப்புக்கு உண்டான ஊதியத்தை பெறுவதற்கு மட்டும், உழைப்பாளர்கள் எப்போதுமே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.


அப்படி ஒரு போராட்டத்தின் ஒரு பகுதிதான் நேற்று (12.11.2014) இந்தியா முழுவதும் நடந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம்.

இந்த வேலைநிறுத்தத்தில், Probationary Officerகளும், Probationary Employeesம் பங்கேற்க வேண்டாம் என நாம் ஒரு தார்மீக நெறியில் அடிப்படையில் முடிவெடுத்தோம். அவர்களால் வங்கிக்கிளைகளை இயக்க முடியாது, இயக்க அனுமதிக்கக் கூடாது, எனவே வங்கிகிளைகள் இயங்காது என்னும் புரிதலில் இங்குள்ள PGBWU, PGBOU, PGBOA ஆகிய சங்கங்கள் முடிவெடுத்தன.

இதனை நிர்வாகமும் புரிந்துகொண்டு, நெறிமுறைகளின் அடிப்படையில் இந்த வேலைநிறுத்தத்தை கையாண்டிருக்க வேண்டும். ஆனால், நேர்மாறாக Probationary Officerகளையும், Probationary Employeesகளையும் வைத்து வங்கிக்கிளைகளை இயக்குவது என முடிவெடுத்தது. இது அப்பட்டமான Foul play.

Probationary Officerகளும், Probationary Employeesகளும் வங்கிக்கிளைகளை இயக்கும் சாவியை வாங்கிக்கொள்ள வேண்டும், அவர்களிடம் சாவியை Confirmed Staff கொடுக்க வேண்டும் என வட்டார அலுவலகங்கள் மூலமாக Oral Orders' பிறப்பிக்கப்பட்டன. ‘written orders'  இருந்தால் obey பண்ணுங்கள், இல்லையென்றால் அந்த ‘வாய் வார்த்தைகளை’ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தோழர்களிடம் சங்கங்கள் தெளிவு படுத்தின.

ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன் இந்த வங்கியில் பணிக்குச் சேர்ந்த, அனுபவம் அற்ற, இளம் வயதினரை வங்கிக்கிளைகளை இயக்க அனுமதிப்பதில் எத்தனை பெரிய ஆபத்துக்களும், விதிமீறல்களும் இருக்கின்றன. எங்காவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? இதையெல்லாம் புரிந்துகொண்டுதான் PGB  நிர்வாகம் இந்தக் கெடுபிடிகளை நடத்தியிருக்கிறது. அப்படி இந்த வேலைநிறுத்தத்தை முறியடிப்பதில் இந்த நிர்வாகத்திற்கும், அதன பொறுப்பிலிருப்பவர்களுக்கும் ஏன் இந்த வெறி?

நாம் கேட்கும் ஊதியம், நமக்கு மட்டுமல்லவே. இந்த சேர்மன், ஜீ.எம்கள், வட்டார மேலாளர்கள், முதன்மை மேலாளர்கள் அனைவருக்கும் சேர்த்துத்தானே? நாளை ஊதிய உயர்வு கிடைக்கும்போது, “இந்த ஊதிய உயர்வு எங்களுக்கு வேண்டாம்” என்று சொல்லப் போகிறார்களா?.

ஆனாலும், இந்த நிர்வாகத்தின் உயர் பொறுப்பிலிருப்பவர்கள் ஏன் இப்படி ஒரு எதிர்மறையான நிலை எடுக்கிறார்கள்? அதுதான் உழைக்கும் வர்க்கத்தின் சாபம். அதிகார வர்க்கத்தின் வரம்!  கிடைத்திருக்கும் அதிகாரம் கொஞ்சமாயிருந்தாலும், அவர்கள் முதலாளி வர்க்கத்தின் ஊதுகுழல்களாகவும், அடிமைகளாகவும் மாறிவிடுகிறார்கள்.

இதையெல்லாம் மீறி, மொத்தமுள்ள 247 கிளைகளில், 213 கிளைகள் இயங்கவில்லை. வேலைநிறுத்தம் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். தங்கள் ஊதியத்திற்காக, தாங்களே போராடிய மகத்தான வீரர்கள் அவர்கள். அடுத்தவர்கள் போராட்டம் நடத்தி அதில் பெறும் ஊதிய உயர்வுக்காக காத்திருக்கும் பிச்சைக்காரர்கள் அல்ல!

விருதுநகர் வட்டாரத்தில் 6 கிளைகளும், நெல்லையில் 5 கிளைகளும், தூத்துக்குடியில் 12 கிளைகளும், சிவகங்கையில்5 கிளைகளும், திருச்சியில் 6 கிளைகளும் இயங்கி இருக்கின்றன. இதற்கு காரணமானவர்களை சங்கங்கள் அறிந்தே வைத்திருக்கின்றன.

இந்த வேலைநிறுத்தம் ஒரு படிப்பினையை தந்து சென்றிருக்கிறது. விதியை மீறுபவர்களோடு, விதிப்படி மோதக்கூடாது. எனவே, அடுத்த வேலை நிறுத்தத்தில் Probationary Officerகளும், Probationary Employeesகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்னும் நிலைபாட்டை சங்கங்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆமாம், காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது!!!

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!