பணி ஓய்வு பெற இருக்கிற நேரத்தில் சார்ஜ் ஷீட்கள் கொடுத்து, அவர்களின் ஓய்வுகாலச் சலுகைகளை நிறுத்தி வைப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம். தவறுகள் இருப்பின், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ஒருபோதும் நாம் கூறவில்லை. ஆனால் அந்த ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய காலத்திலே எடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, சம்பந்தப்பட்டவர்களின் பணி ஓய்வு பிரச்சினையின்றி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.
ஆனால், நமது வங்கியின் இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட் இதனை ஒரு போதும் கடைப்பிடிப்பதில்லை. மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த பிரச்சினைகளை எல்லாம் தூக்கி சுமந்துகொண்டு, சம்பந்தப்பட்டவரின் பணி ஓய்வு நெருங்கும் வரை காத்திருக்கும். பணி ஓய்வு பெற சில தினங்களே இருக்கும்போது, அவருக்கு சார்ஜ் ஷீட் வழங்கும். சார்ஜ் ஷீட், என்கொயரி எல்லாம் முடிய பல வருடங்கள் ஆகும். அதுவரை, அவர்களும், அவர்கள் குடும்பமும் ஓய்வு காலச் சலுகைகள் கிடைக்காமல் துன்புற வேண்டி இருக்கும். இது ஒரு பெரும் சித்திர வதை. முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த வங்கியில் பணி புரிந்தவர்களை இந்த நிர்வாகம் இப்படித்தான் மதிக்கிறது. இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற, வக்கிரமான இந்த செயல்கள்தான் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் சுயரூபம்..
மேலே இருப்பவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான பிஸினஸை கீழே இருப்பவர்கள் கொண்டு வர வேண்டும். வங்கியின் நலனிலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்ட வேண்டும். ஆனால் கீழே இருப்பவர்களின் நலன் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவர்களாக மேலே இருப்பார்கள். கீழே இருப்பவர்களின் வாழ்க்கையை துச்சமாக மதிப்பார்கள். இது எப்படி சுமூக உறவாக இருக்க முடியும். பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஊழியர் விரோதப் போக்கின் மையம் இதுதான்.
இந்த ஊழியர் விரோதப் போக்கை அம்பலப்படுத்துவதும், அதற்கு எதிராக ஊழியர்களை அணி திரட்டுவதும், அதைக் களைவதற்காக போராடுவதும் தொழிற்சங்கத்தின் முக்கிய நடவடிக்கையாகிறது. இப்படிப்பட்ட தொழிற்சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்களை பழிவாங்க எப்போதும் நிர்வாகங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அவர்கள் மீது எதாவது குற்றச்சாட்டுகள் சுமத்தி, தண்டனை வழங்கி, அவர்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கி விடலாம் என முயற்சிகள் செய்கின்றன. அப்படித்தான் தோழர்.மாதவராஜ் மீது, அதிகமான லீவு எடுத்துவிட்டார் என்னும் அற்பமான குற்றச்சாட்டை சுமத்தி சார்ஜ் ஷீட் கொடுத்து, என்கொயரி நடத்தி, தண்டனை வழங்கி இருக்கிறது நிர்வாகம்.
இதனை கண்டித்து, AIRRBEAவின் தலைவர்களில் ஒருவரான தோழர்.வெங்கடேஸ்வரரெட்டி உடனடியாக பாண்டியன் கிராம வங்கி சேர்மனிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். AIRRBEAவின் பொதுச்செயலாளர் தோழர்.சையீது கான் அவர்களும், BEFI-TN மாநிலச் செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன் அவர்களும், பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்திற்கு, இந்த தண்டனையை திரும்பப் பெறுமாறு கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். அவைகளை அப்படியே தருகிறோம்:
Letter From AIRRBEA:
All India Regional Rural Bank Employees
Association
(A Coordinating Body of National
Federation of RRB Officers & National Federation of RRB Employees)
Adviser: Ajit Kumar
Ghosh GOLDERS
GREEN
President: C. Rajeevan Ground Floor F-G Block
Secretary
General: A. Sayeed Khan 1 Nazrul Islam Avenue
(VIP
ROAD )
Ref. No.201 Date:
-28-01-2015
The
Chairman,
Pandyan
Grama Bank,
Collectorate
Complex,
Virudunagar
Tamil
Nadu
Dear
Sir,
Sub: - Reported punishment imposed
on Sri J Mathavaraj, leader of our affiliated unit in
Pandyan Grama Bank.
We understand that on some
flimsy grounds and with a motive to attack democratic trade union functioning
in the bank, a Charge Sheet was issued to Sri J Mathavaraj on 25-01-2010.
Enquiry proceedings were
carried for a long time and the Enquiry Officer submitted his findings to the Competent
Authority on 08th February, 2014.
Instead of putting an end to
the unnecessary and motivated proceedings, a Show Cause Notice was issued on
28-11-2014, and subsequently a punishment letter has also been issued on
22-01-2015 “lowering one stage for two years”.
Any impartial man, if goes to
the facts of the case and the allegations levelled against Sri J Mathavaraj, it
will be very much clear to him that the entire exercise has been planned to
punish a trade union activist on some plea or the other.
General Leave Rules are there,
but Trade Union leaders are always treated leniently not only in Banking
Industry but in other sectors also and they are always supposed to be on leave
without pay when the leave on credit is exhausted, and the same is allowed only
to facilitate carrying on the democratic trade union activities.
As Sri J Mathavaraj has been
serving as one of the principal Office Bearers of the Union in your bank, his
case cannot be and should not be considered on a dotted line, and as such the
charge sheet on such flimsy ground does not stand the taste of reasoning.
We therefore request you to review
and revoke the order of punishment so that cordial industrial relation may be
ensured in your bank for the greater interest of the customer service and the
institution as a whole.
Expecting your early action on
this issue, and with thanks.
Yours faithfully
(A Sayeed Khan)
Secretary General
----------------------------------------------------------------------------------------------------------
Letter from BEFI-TN:
BANK EMPLOYEES FEDERATION OF INDIA –
TAMILNADU
(State unit of BEFI)
27, V VKoil Street, VellalaTeynampet, Chennai -600086
Phone No. 044 24356932, 24311825 Email ID: befitn@gmail.com _____________________________________________________________________
27.01.2015
The Chairman and Managing Dirctor,
PandianGramina Bank,
Collectorate Complex,
Virudunagar
Dear Sir,
Re: Punishmentimposed on Shri J Mathavaraj
forlegitimate Trade Union Activities
We learn from our
affiliate PandianGramina Bank Workers Union that Shri J Mathavaraj, General
Secretary of our Unit has been awarded a punishment of 'lowering
one stage for two years' for availing Leave on Loss of Pay for legitimate Trade
Union Activities.
You are aware thatShri J
Mathavaraj is the principal office bearer of the Union and therefore general
leave rules are not applicable to him. Imposing punitive action on the principal
office-bearer under some pretext or the other for legitimate trade union
activities and trying to stifle the voice of the Trade Union amount to unfair
labour practice under Industrial Disputes Act.
Therefore we strongly express our
displeasure and protest over the action of the Management in indulging unfair
labour practice and request you to withdraw the punishment imposed on Shri JMathavaraj for establishing smooth industrial relations.
Regards,
Yours faithfully,
(C P KRISHNAN)
General Secretary
--------------------------------------------------------------------------------------------------------
தோழர்களே!
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் கடைப்பிடித்து வரும் ஊழியர் விரோத, தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, AIRRBEAவின் இணைப்புச் சங்கங்களான PGBWUவும், PGBOUவும் இணைந்து போராடுவது என்றும், இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, 30.1.2015 அன்று தலைமையலுவலகத்திற்கு இரு சங்கத்தின் தோழர்களும் பெருந்திரளாகச் சென்று முறையிடுவது (Mass deputation to PGB chairman) எனவும், அன்று மாலை பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
ஊழியர்களை, அலுவலர்களை மதிக்காத, தொழிர்சங்கங்களை மதிக்காத இந்த நிர்வாகத்திற்கு நாம் பாடம் புகட்டுவோம்!
அணி திரளுவோம்!
போராடுவோம்!!
வெற்றி பெறுவோம்!!!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!