நமது அகில இந்தியச் சங்கத்திலிருந்து 28.6.2011 அன்று நிதித்துறை இணைச்செயலாளர் (Joint Secretary) திரு. உமேஷ் குமார் அவர்களையும், இயக்குனர் (director) திரு. சமீர் சின்ஹா அவர்களையும் சந்தித்து கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன், அலவன்சுகள் குறித்து பேசியிருக்கிறார்கள்.
வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல, கிராம வங்கி ஊழியர்களுக்கும் பென்ஷன் திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு ஜனவரி 2011க்குள் ஆணை பிறப்பிப்பதாய் சொல்லியிருந்தது. தனது வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்பதை நமது தரப்பில் முதலில் சுட்டிக்காட்டப்பட்டது. பென்ஷன் குறித்து இதுவரை நடந்திருப்ப வைகளையும் சுருக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.
கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கினால் எவ்வளவு செலவாகும் அந்தந்த கிராம வங்கிகளிடமிருந்து புள்ளிவிபரங்களை பெற்று 31.3.2010லேயே இறுதிப்படுத்திவிட்டது மத்திய அரசு. 40 கிராம வங்கிகளுக்கு additional capital support கொடுக்க அமைக்கப்பட்ட சக்ரபர்த்தி தலைமையிலான குழு , CARR maintain செய்யவும், அரியர்ஸ் மற்றும் கிராஜூட்டி கொடுக்கவும், மேலும் பென்ஷன் வழங்கவும் என்று தேவைகளை பட்டியலிட்டு இருந்தது. அதை அரசும் ஒப்புக்கொண்டு இருந்தது.
19.4.2011 அன்று ஸ்பான்ஸர் வங்கி சேர்மன்களின் மீட்டிங்கில், கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்குவதால் ஏற்படும் நிதிச்சுமையை மத்திய அரசு 50 சதவீதமும், ஸ்பான்ஸர் வங்கிகள் 35 சதவீதமும், மாநில அரசு 15 சதவீதமும் ஏற்றுக்கொள்ளலாம் என ஒரு யோசனையை அரசுத்தரப்பில் சொல்லப்பட்டது. ஸ்பான்ஸர் வங்கிகள் தரப்பில், வணிகவங்கிகளில் ஊழியர்களிடமிருந்து contribution பெறப்பட்டதைப் போல பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாம் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. வணிக வங்கிகளில் second option கொடுக்க நேரிட்டதால்தான், ஊழியர்கள் தங்கள் contributionஐ செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் கிராம வங்கி ஊழியர்களுக்கோ இதுதான் first option. இதை விளக்கி நமது அகில இந்திய சங்கம் AIRRBEA உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இவைகள் யாவையும் 28.6.2011 பேச்சுவார்த்தையில் நாம் நிதித்துறை இணைச்செயலாலரிடமும், இயக்குனரிடமும் நாம் விளக்கினோம். மேலும், கிராம வங்கிகள் ஒட்டுமொத்தமாக இப்போது வருடத்திற்கு 2000 கோடி லாபம் ஈட்டுகின்ற நிலமையில் இருக்கின்றன. எனவே, உடனடி நிதிச்சுமை எதுவும் ஏற்பட்டுவிடாது என்பதையும் தெரியப்படுத்தினோம்.
நமது கருத்துக்களை கேட்டறிந்த நிதித்துறை இணைச்செயலாலரும், இயக்குனரும், நிச்சயம் கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் கொடுப்பதற்கான வழிகளை ஆராய்ந்துகொண்டு இருப்பதாகவும், மிக விரைவில் அதற்கான வடிவம் முழுமை பெறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். நமது தரப்பில், மேலும் காலதாமதம் வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.