திட்டமிட்டபடி, மதுரை வட்டாரக்கூட்டம் 30.6.2011 மாலை 6 மணிக்கு, TNGEA அலுவலகத்தில் நடைபெற்றது. நாகலாபுரம் கிளையில் பணிபுரியும் தோழர்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஜூன்7ம் தேதி வேலைநிறுத்தம், ஆகஸ்ட் 5 ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட செய்திக் தோழர்களிடம் பரவியதாலும், ஜூன் காலிறுதியாண்டு கணக்குகள் முடிக்க வேண்டியிருந்ததாலும், 50 தோழர்கள் போலவே கலந்துகொண்டனர்.
BEFI சங்கத்தின் சார்பில், இந்தியன் வங்கியில் பணிபுரியும் தோழர் ராமசமி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். ஆகஸ்ட் 5ம் தேதி நிச்சயம் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறும், நாம் தயாராய் இருப்போம் என தெரிவித்தார். PGBOU தலைவர் தோழர்.போஸ்பாண்டியன், அரசும், நிர்வாகங்களும் சேர்ந்து வங்கித்துறையை சீரழிப்ப்பதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ், இது நம் எதிர்காலத்திற்கான போராட்டம் என்பதையும், பாண்டியன் கிராம வங்கியில் நிர்வாகத்தின் அராஜகப் போக்கையும், ஊழியர்களின் நலனை கொஞ்சம் கூட மதிக்காத நிலைமைகளையும் எடுத்துரைத்தார். PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம், நம்மைத் தற்காத்துக்க்கொள்ள, நாம் போராட்டத்திற்கு தள்ளப்படுகிறோம் என்பதை விவரித்தார். PGBOU செயற்குழு உறுப்பினர் தோழர்.விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார்.