3. “அப்புறம் ஸார்.... பிரமோஷன் வாய்ப்புகள் எல்லாம் எப்படி ஸார்?”
பதில்: முதலில் officer assistant குறித்து பார்ப்போம்.
officer assistant to officer scale I:
officer assistantலிருந்து ஆபிஸராகுவதற்கு இரண்டு வகை channelகளிருக்கின்றன. ஒன்று normal channel. இன்னொன்று fast track channel. பிரமோஷனுக்குரிய இடங்களில் 50 சதவீதம் normal channel மூலமும், 50 சதவீதம் Fast track channel மூலமும் நிரப்பப்படும்.
இந்த Normal channel என்பது இங்கு பலகாலம் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கானதாய் இருக்கிறது. ஆனால் 10வருடம் service இருக்க வேண்டும்.
இந்த fast track channel. என்பது இங்கு புதிதாய் பணியில் சேர்பவர்களுக்கானதாய் இருக்கிறது. 6 வருடம் service இருந்தால் போதுமானது.
இரண்டு வகையான channelக்கும் ஒரேவிவிதமான written exam மற்றும் interview. written testக்கு 50 makrksம், interviewக்கு 20 marksம் , performanceக்கு 30 marksம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
Normal channelல் வருகிறவர்களுக்கு எல்லாவற்றிலும் சேர்த்து மொத்தம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது minimum qualifying marksஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. seniority அடிப்படையில் அவர்கள் பதவி உயர்வு பெறுவர்.
Fast Track channelல் வருகிறவர்களுக்கு எல்லாவற்றிலும் சேர்த்து மொத்தம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது minimum qualifying marksஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் பதவி உயர்வு பெறுவர்.
officer scale I to scale II:
இங்கும் இரண்டு வகை challelகளிருக்கின்றன. ஒன்று normal channel. இன்னொன்று fast track channel. பிரமோஷனுக்குரிய இடங்களில் 50 சதவீதம் normal channel மூலமும், 50 சதவீதம் Fast track channel மூலமும் நிரப்பப்படும்.
இந்த Normal channel க்கு ல் 8 வருடம் service இருக்க வேண்டும்.
இந்த fast track channelக்கு 6 வருடம் service இருந்தால் போதுமானது.
இரண்டு வகையான channelக்கும் ஒரேவிவிதமான written exam மற்றும் interview. written testlக்கு 50 makrksம், interviewக்கு 20 marksம் , performanceக்கு 30 marksம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
Normal channelல் வருகிறவர்களுக்கு எல்லாவற்றிலும் சேர்த்து மொத்தம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது minimum qualifying marksஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. seniority அடிப்படையில் அவர்கள் பதவி உயர்வு பெறுவர்.
Fast Track channelல் வருகிறவர்களுக்கு எல்லாவற்றிலும் சேர்த்து மொத்தம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது minimum qualifying marksஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் பதவி உயர்வு பெறுவர்
இதே போல் Scale III,Scale IV என தொடர்ந்து பதவி உயர்வுகள் இருந்து கொண்டே இருக்கின்றன.
இது போக ஒவ்வொரு வருடமும், இங்கு அனைத்து நிலைகளிலும் புதிய பணிநியமனம் நடந்து கொண்டேதான் இருக்கும். அதிலும் தாங்கள் தேர்வு பெற முடியும். அப்போது கூடவே உங்களுக்கு அனுபவமும் இருக்கும்.
4. “ஸார்...புதுவா சேர்றவங்களுக்கு நம்ம பேங்க்ல futureஎப்படி இருக்கும்?”
பழைய தடங்களிலிருந்து புதிய தடங்களுக்கு மாறும் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நீங்கள் இங்கே பணிக்குச் சேர்ந்திருக்கிறீர்கள்.
வங்கியின் வணிக வளர்ச்சியும் அபாரமாக இருக்கிறது. கிளைகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது. நடப்பு ஆண்டில் இன்னும் 20 கிளைகள் திறக்க நிர்வாகம் திட்டம் வகுத்துக்கொண்டு இருக்கிறது. இது ஒரு புறம்.
இன்னும் ஒரு மூன்று நான்கு வருடங்களில், இந்த வங்கியிலிருந்து300 க்கும் மேற்பட்டவர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள். இது இன்னொரு புறம்.
ஆக, புதிய பணிநியமனம், பதவி உயர்வுக்கான இடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிர்கரித்துக்கொண்டேஇருக்கும்.. எனவே புதியவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வணிக வங்கிகளில் கூட இந்த வாய்ப்புகள் இருக்கப்போவதில்லை.
அடுத்தது, தாங்கள் இங்கு 60 வயது வரை பணி புரியலாம். கிராஜுவிட்டி உண்டு. பென்ஷனுக்காக நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம். மிக விரைவில் அதுவும் உறுதி செய்யப்பட்டு விடும்.
நாம் இங்கு பணத்தோடு மட்டும் புழங்குவதில்லை. மனிதர்களிடமும் அதிகமாகநேரடியாக புழங்குகிறோம். வேறு எந்த நிறுவனத்திலும்கிடைக்காத வாய்ப்பு இது. நாம் செய்யும் சேவை நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். job securityயோடு, job satisfactionம் இங்கு இருக்கிறது. எனவே தயக்கங்கள் தேவையில்லை.
உங்கள் future எப்படி இருக்குமென்கிறீர்கள். ஆனால் நீங்கள்தான் எங்களுக்கும், இந்த வங்கிக்கும் future!
(அடுத்த பகுதியில் பணித்தன்மைகள் குறித்து பார்போம்!)