(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)
_________________________________________________________
website: www.pgbea.net email: gs@pgbea.net , pgbea.vnr@gmail.com
_________________________________________________________
சுற்றறிக்கை எண் : 4/2011 நாள்: 14.7.2011
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. இன்னும் குழந்தைகளுக்கு தாங்கள் எதைப் படிக்கப் போகிறோம் எனத் தெரியாமல் இருக்கிறார்கள். முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்தை, முடக்கிவிட்டு இருக்கிறது இந்த அரசு. அது தகுதியற்றதாக இருக்கிறது என காரணம் சொல்கிறது. ஏற்கனவே இருக்கும் ஒன்றின் குறைகளைக் களைந்து, அதை மேலும் சிறப்புள்ளதாக்குவதே நேர்மையான செயல். அதை விடுத்து, ‘எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று ஆத்திரத்தாலும், ஆணவத்தாலும் முடிவெடுப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது. சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களில் குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் பல ஆண்டுகளாக, பழங்குப்பையாக இருந்த கல்வி முறைக்கு புதிய இரத்தமும், புதிய முகமும் கொடுத்தது சமச்சீர் கல்வி முறை. அதை மறுக்க முடியாது.
நமது வங்கியில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது பெரும் சுமையாக இருக்கிறது. ஆள் பற்றக்குறையால் பெரும் மன அழுத்தங்களுக்கும், உடல் சோர்வுகளுக்கும் தோழர்கள் ஆளாகிறார்கள். வங்கி நிர்வாகம் இதனைக் கருத்தில் கொள்ளாமல், தனது வேலைகள் மட்டும் நடந்தால் சரியென்பது போலிருக்கிறது. இதனை பிரதிபலித்து PGBEA தனது விமர்சனங்களை முன்வைத்தது. நிர்வாகத்தரப்பில் பேச்சுவார்த்தைக்கு 8.7.2011 அன்று PGBEAவுக்கும், PGBOUவுக்கும் ஒதுக்கப்பட்டது. அவைகளை அறியத் தருகிறோம்:
PGBEAவுடன் பேச்சுவார்த்தை:
1. Computer Increment, Newspaper Allowance உள்ளிட்ட அலவன்சுகள் குறித்து சேர்மன் ஐ.ஓ.பிக்கு நேரில் சென்று பேசியதாகவும், Computer increment குறித்த அரசாணையில் ஐ.ஒ.பி நிர்வாகம் சில சந்தேகங்கள் எழுப்பி இருப்பதாகவும், அவை clarify செய்யப்பட்டவுடன், நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவைகளை விரைவில் நமக்கு வாங்கித்தருவதற்கு தானே முழுப் பொறுப்பையும் ஏற்பதாகவும் உறுதியளித்தார்.
2. Complimentஐ நமது வங்கியின் போர்டு நிராகரித்து விட்டதையும், தான் செய்த முயற்சிகளையும் எடுத்துரைத்தார். நாம் நமது வங்கியின் லாபத்தில் 5 சதவீதத்தை இதுபோன்ற staff welfare fundக்கு ஒதுக்கலாமே என யோசனை தெரிவித்தோம். சேர்மன் உடனே அந்த யோசனையை வரவேற்றதோடு, ஐ.ஓ.பியில் இந்த நடைமுறை இருப்பதாகவும், தான் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.
3. பல கிராம வங்கிகளிலும், சில வணிக வங்கிகளிலும் one time measure ஆக, அங்கு temporary ஆக பணிபுரிபவர்களை நிரந்தரமாக்கியிருப்பதையும், நமது வங்கியியிலும் அது போன்ற நடைமுறைகளை சாத்தியமாக்கிட வேண்டும் எனவும் சொன்னோம். தனக்கும் இதில் சம்மதம் உண்டு என்றும், அனுமதிக்கப்பட்ட வழிகளில் முயற்சிப்பதாக சேர்மன் அவர்கள் தெரிவித்தார். இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நமது ஒப்புதல் எப்போதும் உண்டு என்றதோடு, இந்த நல்ல காரியம் பல குடும்பங்களில் விளக்கேற்றும் என்றும் தெரிவித்திருக்கிறோம்.
4. Deputation ஏற்பாடு செய்யப்படாமல் போனது, உடல்நலம் சுகவீனமுற்றது போன்ற காரணங்களால் சென்ற block yearல் LTC செல்ல முடியாமல் போனவர்களுக்கு, time extend செய்து , LTC செல்ல அனுமதிக்க வேண்டும் என்றோம். அவை ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய நியாயமான காரணங்களாய் இருந்தால் அனுமதிக்கிறோம் என்றிருக்கிறார் சேர்மன்.
5. நமது வங்கியில் பணிச்சூழல் பல வகையிலும் கெட்டுப் போய் உள்ளது. அதில் முக்கியமானது, கிளைகளில் computer, printer எல்லாம் காலாவதியாகியும், இன்னும் நாம் அதை வைத்து தினமும் போராடுவதும், அன்றாட வேலைகளை முடிக்க முடியாமல் திண்டாடுவதும் ஆகும். அவைகள் அனைத்திற்கும் புதியவைகளை replace செய்ய வங்கியின் போர்டு இப்போது அனுமதித்து இருப்பதாகவும், விரைவில் அவை யாவும் சரி செய்யப்படும் எனவும் சேர்மன் உறுதியளித்தார்.
6. புதிய பணி நியமனம் இந்த மாதம் ஜூலை 18ம் தேதி வாக்கில் போர்டில் வைத்து இறுதி செய்யப்படும் என தெரிவித்தார். அதையொட்டிய டிரான்ஸ்பர்களில், அனைத்து பாதிப்புகளும் சரி செய்யப்படும் எனவும் சேர்மன உறுதியளித்தார்.
8.புதிதாக திறக்கப்பட்ட கிளைகளுக்கு, நமது தோழர்களை டிரான்ஸ்பர்கள் செய்திருந்ததை நாம் கடுமையாக எதிர்த்திருந்தோம். சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தோம். நமது தோழர்கள் மெடிக்கல் லீவில் சென்றிருந்தனர். தன்னுடன் PGBEA பேசியிருந்தால், இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டு இருக்காது எனவும், தான் அதனை முதலிலேயே சரி செய்திருப்பேன் எனவும் சேர்மன் தெரிவித்தார். சங்கத்தின் எதிர்ப்பு தனக்கு வருத்தமளிப்பதாகவும் வெளிப்படையாகச் சொன்னார். தொடர்ந்து எங்கள் தோழர்கள் பாதிக்கப்படுவது எங்களுக்கு வருத்தமளிக்கிறது என நம் நிலையை நாம் விளக்கினோம். GM(o), PAD-SM ஆகியோருடன் பேசி இணக்கமாக இந்தப் பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள் என்றார் சேர்மன். நாம் சம்மதித்திருக்கிறோம்.
இந்தப் பேச்சுவார்த்தையில், நாம் united India medical claim ல் உள்ள குறைபாடுகளைச் சொன்னோம். அவைகள் சரி செய்யப்பட்டு improved claim procedure ஒன்று நமது போர்டில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், நமது வங்கியின் வணிகத்தில், அட்வான்ஸில் 90 சதவீதம் நகைக்கடனாகவே இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். சேர்மன் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொன்னதோடு, இந்நிலையை மாற்ற தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு நமது ஒத்துழைப்பு வேண்டும் எனவும் கூறினார். நாம் இவ்விஷயத்தில் அவரோடும், வங்கியோடும் முழுமையாக இருப்போம் எனவும் உறுதி கூறினோம்.
PGBOUவுடன் பேச்சுவார்த்தை:
1. வங்கியின் மொத்தக் கடனில் நகைக்கடன் மட்டுமே 86.5 சதவீதம் இருக்கிறது. நல்லதொரு வங்கியின் தன்மையாக இது நிச்சயம் இருக்க முடியாது. பன்முகங்களோடு வங்கியின் செயல்பாடுகள் இருப்பதே அதன் ஆரோக்கியத்திற்கான அம்சமாகும். இதனை கவலையோடு வலியுறுத்தினோம். சேர்மனும் இதே கருத்துடன் இருந்தார். நகைக்கடனை குறைத்து, மற்ற கடன்களை அதிகப்படுத்த திட்டமிருப்பதாக தெரிவித்தார். நடப்பு ஆண்டில் வங்கியின் மொத்தக்கடன் அளவில் நகைக்கடன் அளவை 75 சதவீதத்திற்கு குறைக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்தார். நாம் சில யோசனைகளை முன்வைத்திருக்கிறோம். மேலாளர்களுக்கு பவர் அதிகமாக்குவது, JLG லோன்களுக்கு இன்சூரன்சு பிடிப்பதை தவிர்ப்பது, இப்போது R.M எல்லாம் scale IV என்பதால் அனைத்து மண்டலங்களுக்கும் ஜீப் வழங்கி அவர்களது mobilityஐ விரிவாக்குவது, ஒவ்வொரு மண்டலமும் சில கிராமங்களை adopt செய்வது போன்றவை அதில் அடங்கும். சேர்மன் இவைகளை வரவேற்றதோடு, ஆராய்வதாகவும் தெரிவித்தார்.
2. ஏற்கனவே பல தோழர்கள் மாறுதல்களில் பாதிப்படைந்துள்ள நிலையில், நிர்வாகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு போட்ட டிரான்ஸ்பர்களில் மேலும் பல தோழர்கள் பாதிப்புகளுக்குள்ளாகியிருக்கின்றனர். இதனை மிகுந்த வலியுடன் எடுத்துச் சொன்னோம். இவைகள் சரி செய்யப்படுவதே வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் என்றோம். நிர்வாகம் சரிசெய்து தருவதாக உறுதியளித்துள்ளது.
3.யுனைட்டெட் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் நமக்கு ரூ.75000/- வரை claim செய்துகொள்ள வசதி இருக்கிறது. அதற்கு மேல் ஆகும் தொகைக்கும், இன்சூரன்ஸ் கம்பெனி மறுக்கும் claim களுக்கும் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதனைக் கடந்த ஒரு வருடமாக நாம் நிர்வாகத்துடன் பேசி வருகிறோம். இப்போது ரூ.75000/-த்திற்கு மேல் ஆகும் தொகைக்கும், இன்சூரன்சு கம்பெனி மறுக்கும் தொகைக்கும் நமது வங்கியே claim settle செய்வதாக ஒரு முறையை Board meetingல் வைத்து ஒப்புதல் வாங்கியிருக்கிறது நிர்வாகம். நமது சங்கம் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறது. தலைமையலுவலகத்திலிருந்து இது குறித்து சர்க்குலர்கள் வெளியானவுடன், பாதிக்கப்பட்ட தோழர்கள், உரிய பேப்பர்களையும், பில்களையும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
4. டிரான்ஸ்பர்களில் சென்றுள்ள பல தோழர்களுக்கு Joining Time மற்றும் Lumpsum கிடைக்கவில்லை. Family shift செய்திருக்க வேண்டும் எனவும், தங்குமிடத்திற்கு evidence காட்ட வேண்டும் எனவும் நிர்வாகம் வலியுறுத்தி வந்தது. நாம் இது குறித்து சேர்மனிடம் விரிவாகப் பேசினோம். நாம் ஏற்கனவே பெற்று வந்த சலுகை இது என்பதையும் எடுத்துரைத்தோம். புரிந்துகொண்ட சேர்மன் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.
5. பணி ஓய்வு பெறும் தோழர்கள் தொடர்ச்சியாக அவதிக்குள்ளாகின்றனர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற அனைவரிடமும் எதாவது காரணம் காட்டி பணம் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இது வருத்தத்திற்குரிய செய்தி. சேர்மனிடம் விரிவாக பேசினோம். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஃபைல்கள் குறித்து 6 மாதத்திற்கு முன்பே ஆராய்ந்து, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் உறுதியளித்தார்.
6. நாளுக்கு நாள் கிளைகளும், ஊழியர்களும் நகைக்கடன்களில் பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதால் purity and weight காட்டும் இயந்திரத்தை நிர்வாகச் செலவில் வாங்க வேண்டும் என நாம் கோரிக்கை வைத்தோம். நிர்வாகத்திற்கு கடிதம் அளித்திருந்தோம். நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், முதலில் test-ற்காக ஒரு இயந்திரத்தை import செய்ய ஆர்டர் கொடுத்திருக்கிறது.
7. கடந்த ஆண்டிற்குரிய பதவி உயர்வு நடந்து முடிந்திருக்கிறது. நடப்பு ஆண்டில் அளிக்க வேண்டிய பதவி உயர்வுகளுக்கான காரியங்களை உடனடியாகத் துவக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அதுகுறித்து ஏற்கனவே PADக்கு பணித்துவிட்டதாக சேர்மன் தெரிவித்தார். 25 scale IIIக்கான இடங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.
PGBEAவுடனான பேச்சுவார்த்தையின் இடையே சேர்மன் அவர்கள் சொன்ன வாக்கியம் மிக முக்கியமானது மட்டுமல்ல, அற்புதமானதும் கூட. “We are not opposite parties. We are coailtion parties" என்பதே அது. நிச்சயமாக நாம் இதனை வரவேற்கிறோம். இதன் அர்த்தமும், பரிமாணங்களும் உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்படுமானால், நாமும், நமது வங்கியும் சிகரங்களைத் தொட முடியும். ஆனால் நடைமுறைப்படுத்துவது எப்போதும் நிர்வாகத்தின் கைகளிலேயே இருக்கிறது. கடந்தகால அனுபவங்கள் அதனை கசப்பாகவே நமக்கு தந்திருக்கிறது. இதனையும் சேர்த்து நிர்வாகம் புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகும்.
ஆகஸ்ட் 5 வேலை நிறுத்தம்:
ஜூலை 7ம் தேதி அகில இந்திய ஒருநாள் வேலைநிறுத்தத்தையொட்டி தலைமையலுவலகம் முன்பாக 22.6.2011 அன்று நாம் நடத்திய வாயிற்கூட்டம் உற்சாகமளிப்பதாகவும், எழுச்சி மிக்கதாகவும் இருந்தது. அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கான, இந்த வாயிற்கூட்டத்துக்கும், IR சர்க்குலர் போட்டு நிர்வாகம் ‘wage cut' என்று சட்ட விரோதமாக மிரட்டிய போதிலும், கடுமையான ஆள் பற்றாக்குறையும் பணிச்சுமையும் மிக்க நெருக்கடியிலும், 80க்கும் மேற்பட்ட தோழர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து நாம் 25.6.2011 அன்று நெல்லையிலும், 30.6.2011 அன்று மதுரையிலும், வேலை நிறுத்ததிற்கான தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தியும் இருந்தோம். இந்த நிலையில் ஜூன் 7ம் தேதி வேலை நிறுத்தம் ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட செய்தி வந்தது. எஸ்.எம்.எஸ் மூலமும், நமது PGBEA website மூலமும் தோழர்களுக்கு தகவலை தெரியப்படுத்தினோம். பாராளுமன்றக் கூட்டத்தொடரையொட்டி வேலை நிறுத்தம் நடப்பது கவனம் அளிப்பதாகவும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இருக்கும் என்பதால்தான் இந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுள்ளது. கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் இப்போது இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தயாராவோம்.
PGBEA வெப்சைட்
நமது PGBEA வெப்சைட் www.pgbea.net ஆரம்பிக்கப்பட்டு இருப்பதை தோழர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். தினமும் சராசரியாக 150 பேர் படித்து வருகின்றனர் என்பது உற்சாகமாக இருக்கிறது. நேர்த்தியாகவும் தேர்ந்த தொழில்நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக அகில இந்தியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். சங்க செய்திகள், சமூகக் கட்டுரைகள், அகில இந்தியச் செய்திகள், சுற்றறிக்கைகள் என பல பகுதிகளில் உடனுக்குடன் விஷயங்களை தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது நமக்குத் தேவையான staff circulars, loan applications எல்லாம் அப்லோட் செய்யப்பட்டு வருகின்றன. தோழர்கள் தங்கள் கிளை அனுபவங்களை, சங்கச் செய்திகளை இந்த வெப்சைட்டில் பகிர்ந்துகொள்ளலாம். gs@pgbea.net அல்லது pgbea.vnr@gmail.com என்ற இ-மெயிலுக்கு எழுதுங்கள். இந்த வருடம் பத்தாம் வகுப்புத் தேர்வில் 400க்கு மேலும் , பிளஸ் டூ தேர்வில் 1000த்திற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றிருக்கும் நமது பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள்/அலுவலர்களின் குழந்தைகளைப் பற்றிய செய்திகளை நமது வெப்சைட்டில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். குழந்தைகளின் போட்டோ, படித்த பள்ளி, எடுத்த மதிப்பெண்கள் குறித்த விபரங்களை இ-மெயில் மூலமாகவே கடிதம் மூலமாகவோ தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
Computer increment:
வங்கித்துறையில் கம்யூட்டரை புகுத்துவதற்காக, தொழிற்சங்கங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, அனைத்து அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்கப்பட்டது. அதையே கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்கியிருக்க வேண்டும். அரசு அதை மறுத்துவந்த நிலையில் நமது அகில இந்திய சங்கம் AIRRBEA வழக்குத் தொடர்ந்தது. தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்திருக்கிறது என்பதை ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தோம். (இதற்கிடையில் 100 சதவீதம் CBS ஆன கிராமவங்கிகளுக்கு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்கலாம் என அரசு ஒரு ஆணையை இந்த வருடம் மார்ச் மாதத்தில் பிறப்பித்தது. அதையும் நமது வங்கி நிர்வாகம் அமல்படுத்தவில்லை.) இப்போது நமது அகில இந்திய சங்கம் AIRRBEA, கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்க மறுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அதை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் சம்பந்தப்பட்ட கிராம வங்கி சேர்மன்களுக்கு கடிதம் அனுப்புமாறும் அறைகூவல் விடுத்திருக்கிறது. அதற்கான model letterஐ இணைத்திருக்கிறோம். அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் நகலெடுத்து நமது வங்கிச் சேர்மனுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
தோழர்களே!
தொடர்ந்து இயங்குவோம். பேசுவோம். சந்திப்போம்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
* தோழர்.சுப்புராஜ் பணி ஓய்வு பெற்றத் தொடர்ந்து, கந்தவர்க்கோட்டை கிளை மேலாளரான தோழர்.A.ஆறுமுகப்பெருமாள் நமது சங்கத்தின் உதவிப்பொருளாளராக, PGBOU செயற்குழு தேர்தெடுத்திருக்கிறது. அவருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
* சேர்மனுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 14.7.2011 அன்று நிர்வாகத் தரப்பில் அமைக்கப்பட்ட, டிரான்ஸ்பர் கமிட்டியுடன் (GM-O, PAD-SM, AIVD-SM) PGBEAவும், PGBOU வும் பேச்சுவார்த்தை நடத்தின. பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு மாறுதல்கள் மாற்றித்தர வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறோம்.