நம்மைச் சுற்றி தினமும் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த வார்த்தைகளில், புரிந்தும், புரியாமலும் ஓராயிரம் விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அப்படிப்பட்டவைகளை இங்கே தொகுக்க ஆரம்பிக்கிறோம். கேட்க, கேட்க அர்த்தங்கள் புரிகின்றன. உண்மைகள் வெளிப்படுகின்றன. அசிங்கங்கள் அம்பலமாகின்றன. சமீபத்தில் கேட்ட குரல்கள் இவை:
------------------------------------------
"சார், எங்க வீட்டுக்கு திடீர்னு வந்தாங்க. யார்னு தெரியல. பெரிய பெரிய ஆளா இருந்தாங்க. ”
“சார், கையிலும் கழுத்திலும் அரை கிலோ தங்கம் இருந்துச்சு அவருக்கு. சினிமா வில்லன் தோரணையில வந்தாரு”
“ வீட்டுக்கு வந்தவங்க யாராயிருந்தாலும், வெளியே போங்கன்னா சொல்ல முடியும்.”
“யாரும் சும்மா இவ்வளவு தரை ரேட்டுக்கு இறங்கிப் பேச மாட்டாங்க. அதுலயேயே இவங்க நோக்கம் தெரியுது”
“அது யாரு சார் அண்ணன், அண்ணன்னு சொல்றங்க. மகாத்மா காந்தி ரேஞ்சுல மரியாதை செய்றாங்க. என்ன தியாகம் சார் செஞ்சிருக்காரு?”
“கைய கையப் பிசைஞ்சுகிட்டே ஒருத்தர் இருந்தார். அவர்தான் கையெழுத்துப்போடுங்க, கையெழுத்துப் போடுங்கன்னு இம்போஸிசன் மாதிரிச் சொல்லிக்கிட்டே இருந்தாரு. ஆனா அவர் நம்ம பேங்க்ல வேல பாக்குற மாதிரி தெரியலயே”
“வீட்டுல பெரியவங்க யாரும் இல்லன்னு சொன்னேன். ஆனாலும் அவங்க போகல சார். எனக்கு ஒரே பயமாய்ட்டு.”
“என்ன ஏதுன்னே தெரியாம கையெழுத்துப் போட்டுக் குடுத்திட்டேன். இப்படி திடும்னு வந்து நின்னா என்ன சார் நாங்க செய்ய?”
“மூனு மாசத்துல திருநெல்வேலிப் பக்கம் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்காங்க.”
“ புதுசா வந்திருக்கோம்.யார் நல்லவங்கன்னு கெட்டவங்கன்னு எப்படி சார் தெரியும்?”
“இதுதான் யூனியனா சார்?”
“ரொம்பக் கேவலமா இருந்துச்சு சார். இவங்கக் கூட சேரக் கூடாதுன்னு அப்பமே முடிவுக்கு வந்துட்டேன்.”
------------------------------------------