30.8.11

PGBEA - PGBOU circular 28.8.2011

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)
------------------------------------------------------------------------------
website: www.pgbea.net    email:  pgbea.vnr@gmail.com. gspgbou@gmail.com
------------------------------------------------------------------------------

சுற்றறிக்கை எண் : 6/2011                              நாள்: 28.8.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசும், அமைச்சர்களும்,  உயர் அதிகாரிகளும் செய்யும் முறைகேடுகளால் தேசத்தின் வளமும், வருமானமும் சூறையாடப்படுகிறது. சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மலிந்து போன ஒரு சமூகத்தில் ஊழல் என்பது வேகமாகப் பரவும் தொற்றுநோயாய் இருக்கிறது. தாராளமயத்தாலும், உலகமயத்தாலும் ஊழல் இந்த நாட்டில் தலைவிரித்து தாண்டவமாடும் என எப்போதும் நாம் சொல்லி வந்திருக்கிறோம். அதுதான் நடந்திருக்கிறது. சமீபமாய் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஊழல்கள் அனைத்தும், இந்த நாட்டின் பெருமுதலாளிகளுக்குக் காட்டிய சலுகைகளாய் இருக்கின்றன. லட்சம் கோடிகள் என அவை வாயைப் பிளந்து தேசத்தையே விழுங்க முயற்சிக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் ஊழல் குறித்த ஒரு பெரும் உரையாடலை அன்னா ஹசாரே துவக்கி வைத்திருக்கிறார். தேசமே ஊழலுக்கு எதிராக வெப்பமடைந்து இருக்கிறது.  13 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்ததன் மூலம் ஒரு வலுவான லோக்பால் சட்டம் உருவாக வழி கிடைத்திருக்கிறது. ஆனால், சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. அந்தச் சட்டத்தை அமல்படுத்தும் அரசும் அமைப்பும் அதற்குரிய நேர்மையும், வலிமையும் கொண்டவையாய் இருக்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.


புதிய பணிநியமனம்

புதிய அலுவலர்களும், ஊழியர்களும் நம் வங்கியில் பணிக்குச் சேர்ந்து இருக்கின்றனர். புதிய காற்றாக, இளம் ரத்தமாக அவர்களின் வருகை இருக்கிறது. பெரும் ஆள் பற்றாக்குறையால் நெருக்கடிக்குள்ளாகியிருந்த நாம் இப்போது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம். புதிய தோழர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டியதும், அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டியதும் இருக்கிறது. நமது அடுத்த தலைமுறை அவர்கள். நமது வங்கியையும், நமது சங்கத்தையும் அவர்களே இனி வழிநடத்தப் போகிறவர்கள். இந்தப் புரிதல் அவசியமானது.  அவர்களுக்கு வேலைகளை கற்றுக்கொடுக்கும் நாம், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளையும் கற்றுத் தரவேண்டும்.

அவர்கள் மிகவும் வயது குறைந்தவர்கள்தான். நம்மில் பலருடைய குழந்தைகள் வயதுடையவர்கள்தான். அதனாலேயே  அவர்கள் பேரைச் சொல்லி அழைக்கவும், உரிமையோடு ஒருமையில் பேசவும் நம்மில் சிலருக்குத் தோன்றலாம். அது சரியான நடைமுறையல்ல என்று நமது சங்கம் கருதுகிறது. ‘சார்’, ‘மேடம்’ என மரியாதையுடன் அவர்களை அழைப்பதும், பழகுவதுமே நாகரீகமாக இருக்கும்.


Travelling Allowance

கிளைமேலாளர்களுக்கு சாங்ஷன் செய்ய power குறித்து புதிதாக ஒரு சர்க்குலர் வந்திருக்கிறது. அதில் குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. குறிப்பாக,  TAசாங்ஷன் செய்ய அளித்திருக்கும் powerமிகக் குறைவாக இருக்கிறது. FUNDS TAகூட அவர்கள் சாங்ஷன் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கிறது. நிர்வாகம் இதனைச் சரிசெய்ய வேண்டும்.

Deputation சென்றால், அந்த deputation நாட்களுக்குரிய TA மட்டுமே சாங்ஷன் செய்யப்படுவதை ஏற்கனவே நாம் சேர்மன் அவர்களிடமே பேசி இருக்கிறோம். சாவி வாங்கவும், கொடுக்கவுமான அதற்கு முன்னும் பின்னுமான காலத்துக்கும் வழங்கப்படுவதுதான் சரியான நடைமுறை எனச் சொல்லி இருக்கிறோம். அதனைச் சரிசெய்வதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும் இன்னும் சில வட்டார மேலாளர்கள் தானடித்த மூப்பாக, deputationக்குரிய நாட்களுக்கு மட்டுமே TA சாங்ஷன் செய்கிறார்கள். உடனடியாக இந்த வழக்கம் களையப்பட வேண்டும்.


Transfers

இந்த மாதத்தின் ஆரம்பத்தில், அலுவலர்களுக்கும், மெஸஞ்சர்த் தோழர்களுக்கும் போட்ட டிரான்ஸ்பர்களில் பெரும்பாலும் சாதகமாகவே இருந்தன. சில பாதிப்புகள் இருக்கின்றன. அவைகள் குறித்து சங்கம் நிர்வாகத்துடன் பேசிவருகிறது. மேலும், இன்னும் ஒரு சில நாட்களில் கிளரிக்கல் தோழர்களுக்கும், அலுவலர்த் தோழர்களுக்கும் டிரான்ஸ்பர்கள் இருக்கும். பாதிப்புகளைச் சரிசெய்ய நாம் லிஸ்ட் கொடுத்து பேசி வருகிறோம்.

இந்த வங்கியில் ஒரு டிரான்ஸ்பர் பாலிசி என்பது இப்போது இல்லாமல் இருக்கிறது. வணிக வங்கியில் உள்ளதுபோல், ஒரு பாலிசி உருவாக்க வேண்டும் என நமது சங்கங்களின் செயற்குழுக்கள் முடிவு செய்திருக்கின்றன. விரைவில் அதுகுறித்தும் நாம் முன் முயற்சி எடுப்போம்.


வலுப்பெறும் தொழிற்சங்க இயக்கம்!

PGBOAவின் செயல்பாடுகள் மற்றும், நடவடிக்கைகளை விமர்சனம் செய்து, அந்தச் சங்கத்திலிருந்து முக்கியமான தோழர்கள் பலரும் இப்போது PGBOUவில் நாள் தோறும் இணைந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும்  வாழ்த்தி வரவேற்போம். PGBOAவின் முக்கியத் தலைவரும், AIRRBOF, AIBOC போன்ற அகில இந்திய சங்கங்களில் பொறுப்பு வகித்தவருமான தோழர்.T.கிருஷ்ணன் அவர்களும் நமது சங்கத்தில் இணைந்திருக்கிறார்.  தொழிற்சங்கங்களில் முன்னணித் தலைவர்களாயிருந்த தோழர்கள் சிதம்பரம், சண்முகம் ஆகியோரும் இணைந்திருக்கின்றனர். பாண்டியன் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தில் இது ஒரு முக்கிய நிகழ்வு. இதன் மூலம் எண்ணிக்கையில் PGBOU மிகப்பெரும்பான்மை கொண்டதாகியிருக்கிறது. நமது உறுதியும், ஒற்றுமையும் மேலும் வலுப்படுகிறது.


செப்டம்பர் 6 தர்ணா!




முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் நடத்துவதென நமது அகில இந்திய சங்கம் AIRRBEA  முடிவு செய்திருக்கிறது.
பென்ஷன் குறித்த வழக்கில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.  இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே பென்ஷன் வழங்கப்பட்டுவிடும் என அரசு தரப்பில் நம்மிடம் உறுதிமொழியும் தரப்பட்டது. சாதகமான நிலைமைகள் இருந்துவந்த போதிலும், காரியங்கள் காலதாமதமாகவே நடந்து வருகின்றன.
Newspaper allowance, loans  போன்றவை ஐ.ஓ.பியில் உள்ளது போல நமக்கு இல்லை. இதுபோல தேசம் முழுவதும் வணிக வங்கிக்கு இணையான அலவன்சுகள் மற்றும் சலுகைகளை கிராம வங்கிகளுக்கு வழங்குவதில் முரண்பாடுகள் தொடர்ந்து நிலவுகின்றன. பல ஸ்பான்ஸர் வங்கிகள் இதில் மிக மோசமாக நடந்துகொள்கின்றன.

கிராம வங்கிகளில் தினக்கூலியாகவும், ஒப்பந்தம் மூலமாகவும் பணிபுரிகிறவர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களாக பணிபுரிகிறவர்களை அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும் எனவும் AIRRBEA கோரிக்கை வைத்து இருக்கிறது.

ஏறத்தாழ அனைத்து கிராம வங்கிகளிலும் நமது AIRRBEA இணைப்புச் சங்கங்களே பெரும்பான்மையானவையாக இருக்கின்றன. அவர்களின் பிரதிநிதிகள், வங்கியின் நிர்வாகக்குழு இயக்குனர்களாக இருக்க வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கை. இவைகளை உள்ளடக்கியக் கோரிக்கைகளாக-

1) PARITY OF SUPERANNUATION BENEFITS/OTHER ALLOWANCES/BENEFITS/SERVICE CONDITIONS.
2) REGULARIZATION/ABSORPTION/PROMOTION OF ALL DAILY WAGED/PART TIME/CASUAL MESSENGERS/SWEEPERS/WORKERS
3)REPRESENTATION OF WORKMAN/OFFICERS IN THE BOARD OF MANAGEMENT OF RRB.

ஆகியவற்றை முன்வைத்து, செபடம்பர் 6ம் தேதி ஒருநாள் தர்ணா போராட்டம் தலைமையலுவலகம் முன்பாக நடத்த AIRRBEAஅறைகூவல் விடுத்திருக்கிறது. அதன்படி நாம் நமது தலைமையலுவலகம் முன்பாக நடத்த இருக்கிறோம். திரளாக தோழர்கள் வந்து பங்கேற்கும்படி அழைக்கிறோம்.

செப்டம்பர் 6!
நமது கோஷங்களால் நிறையட்டும்!
வாருங்கள்!

தோழமையுடன்

   
(M.சோலைமாணிக்கம்)   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU

3 comments:

  1. //அது சரியான நடைமுறையல்ல என்று நமது சங்கம் கருதுகிறது. ‘சார்’, ‘மேடம்’ என மரியாதையுடன் அவர்களை அழைப்பதும், பழகுவதுமே நாகரீகமாக இருக்கும்.//

    இது தனிப்பட்ட நபர்களின் பிரச்சினை.இதைபொதுமைப்படுத்துவது சரியில்லை எனத்தோன்றுகிறது. அலுவலக ரீதியான விதிகளில் இருந்து கரம் நீட்டுவதும் நேசம் வைப்பதும் புரிதல்களைக்கொண்டு வரும். அண்ணன் தம்பி மாப்ளை தோழர் நண்பர் என்கிற வார்த்தைகளை வீட்டில் போய் தேடவா ? கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டீர்கள்.

    ReplyDelete
  2. சரிதான் தோழர் காமராஜ். பழக்கத்தினாலும், நட்பினாலும் உருவாகும் நெருக்கத்தினால் உறவுகளைச் சொல்லி அழைப்பதும், பேர் சொல்லி அழைப்பதும் சிறப்பானதும், அற்புதமானதும் ஆகும். ஆனால் அதில்லாமல் எடுத்த எடுப்பிலேயே அப்படி அழைக்கத் தோன்றுவதைத்தான் நம் சங்கங்கள் விமர்சனம் செய்கின்றன.

    சர்க்குலரில், //அவர்கள் மிகவும் வயது குறைந்தவர்கள்தான். நம்மில் பலருடைய குழந்தைகள் வயதுடையவர்கள்தான். அதனாலேயே அவர்கள் பேரைச் சொல்லி அழைக்கவும், உரிமையோடு ஒருமையில் பேசவும் நம்மில் சிலருக்குத் தோன்றலாம்.// என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  3. புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களின் உறவினர் ஒருவர் நம் சங்கத்தோழர் ஒருவரிடம், இதனைச் சுட்டிக்காட்டியதால் PGBOUவின் செயற்குழுவில் இப்படி ஒரு வேண்டுகோளை சுற்றறிக்கையில் வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

    ReplyDelete

Comrades! Please share your views here!