5.1.12

கிராம வங்கி ஆபிஸர் கடத்தல்!



அசாம் கிராம விகாஸ் வங்கியின், நக்ரிஜூலி கிளையின் மேலாளர் தோழர். நரேன் ராஜ்போங்ஷி தீயசக்திகளால் கடத்திச் செல்லப்பட்டு இருக்கிறார் என்னும் துயரமான செய்தி நமது அகில இந்திய சங்கத்திலிருந்து வந்திருக்கிறது.

27.12.21011 அன்று காலையில் தோழர். நரேன் போங்ஷி, பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்சு கம்பெனியின் ஊழியரான திரு.சத்யஜித் தாஸ் என்பவரோடு தனது வங்கிக்கிளைக்குச் சென்று கொண்டிருக்கும்போது  கடத்தப்பட்டு இருக்கிறார்.

கடத்தப்பட்ட இருவர் என ஆனர்கள் என்று இதுவரை தெரியவில்லை.  காவல்துறையினரிடமிருந்து எந்த  நல்ல தகவலும் கிடைக்கவில்லை. கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் திரண்டு நிற்கிறார்கள். அந்தப் பகுதியில் பணிபுரிவர்கள் தங்களுக்கு பாதுகப்பு இல்லையென்று அச்சம் கொண்டிருக்கின்றனர்.

அங்குள்ள வங்கியின் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, அசாம் மாநில அரசினை அணுகியுள்ளனர். கடத்தப்பட்ட இருவரையும் மீட்டுத் தரவும், வங்கி ஊழியர்களுகும், அலுவலர்களுக்கும் பாதுகப்பு வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!