PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் அவர்களின் மகள் திருமணத்தையொட்டி நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர். D.K.முகர்ஜி பள்ளத்தூருக்கு 28.1.2012 இரவு வந்தார். அதுசமயம் மணமக்களை வாழ்த்த நமது வங்கியின் சேர்மன், மற்றும் பொதுமேலாளர்களும் வந்திருந்தனர். அவர்களுடன் கிராம வங்கிகளின் இன்றைய நிலைமை குறித்து தோழர்.முகர்ஜி பேசிக்கொண்டு இருந்தார். அது ஒரு இனிய சந்திப்பாக இருந்ததாக தோழர்.முகர்ஜி நம்மிடம் குறிப்பிட்டார்.
அடுத்த நாள் 29.1.2012 அன்று காலை திருமணம் முடிந்த பிறகு, திரளாக வந்திருந்த பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கித் தோழர்களுக்கான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்களிடையே தோழர்.முகர்ஜி amalgamation மற்றும் pension குறித்து விரிவாகப் பேசினார். அதன் புகைப்பட மற்றும் வீடியோக் காட்சிகளை விரைவில் நமது இனையத்தளத்தில் வெளியிடுகிறோம்.
30.01.2012 அன்று 3 மணிக்கு இந்தியன் ஒவர்சீஸ் வங்கி பொதுமேலாளர் திரு.மிஸ்ரா அவர்களோடும், 4 மணிக்கு இந்தியன் வங்கி பொதுமேலாளருடன் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நமது தரப்பில் PGBOU தலைவர் தோழர்.போஸ்பாண்டியனும், PGBEA தலைவர் தோழர்.மாதவராஜும் கலந்துகொண்டனர். தோழர். ஆனந்த ரெட்டி தலைமையில் சித்தூரிலிருந்து தோழர்கள் வந்திருந்தனர். பல்லவன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உதவிப்பொதுச் செயலாளர் தோழர். பரிதி ராஜன் வந்திருந்தார்.
ஒரு அவசர வேலை நியமித்தம் திரு.மிஸ்ரா அவர்கள் பூனாவுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், AGM திரு.ஞானசம்பந்தம் அவர்களுடன் பேசுமாறு சொல்லிச் சென்றிருந்தார். அவருடன் நமது staff issues ஐ கவனிக்கும் அதிகாரியும் உடனிருந்தார்.
பேச்சுவார்த்தை விபரங்கள்:
1. Festival Advance இங்கே இருவகையாக கொடுக்கப்படுகின்றன. இந்த வங்கியில் ஏற்கனவே பணியாற்றி வருபவர்களுக்கு ஒரு மாத ஊதியமும், புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு மிகக் குறைவாக ரூ.10000 என்றும் Fixed amountஆக மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த முரண்பாடு களையப்பட்டு இருக்கிறது. புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை Festival Advance ஆக கொடுக்க நமது போர்டில் முடிவு செய்யப்பட்டு, அது ஐ.ஓ.பியில் இறுதியும் செய்யப்பட்டு விட்டது.
2. 2010ம் ஆண்டிற்கான புதிய பணிநியமனங்களும், பதவி உயர்வுகளும் மட்டுமே நடந்து முடிந்திருக்கின்றன. அதிலும் புதிய பணி நியமனங்களில் பலர் வேறு வேலைக்குச் சென்று கொண்டு இருக்கின்றனர். அந்தக் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், மேலும் 2011ம் ஆண்டிற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான பதவி உயர்வுகளும், புதிய பணிநியமனங்களும் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் புதிய கிளைகள் திறப்பதில் ஆள் பற்றாக்குறையால் சிரமங்கள் ஏற்படும் என தெரிவித்தோம். அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுக்கான vacancies ஐ.ஓ.பியில் இறுதிசெய்யப்பட்டு ஓரிருநாட்களில் அறிவிக்கப்பட்டுவிடும் என உறுதியளிக்கப்பட்டது.
2. Temporary employeesஐ நிரந்தரமாக்க பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் அதன் போர்டு மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டு இருப்பதை பாராட்டி வரவேற்றோம். இப்போது அந்த முடிவை ஐ.ஓ.பிக்கு approvalக்கு அனுப்பி இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். அதற்கு ஐ.ஓ.பியிலிருந்து நபார்டுக்கு அனுப்பி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சில கிராம வங்கிகளில் தற்காலிக உழியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு இருப்பதையும், நபார்டு இதுகுறித்து வெளியிட்டுள்ள சர்க்குலரையும் நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.முகர்ஜி சுட்டிக்காட்டினார். அந்த ஆவணங்களைத் தந்தால் துரிதமாக இந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும் என ஐ.ஓ.பி தரப்பில் சொல்லப்பட்டது. ஒரிரு நாட்களில் அனுப்பி வைப்பதாக தோழர்.முகர்ஜி சொன்னார். மேலும் நபார்டில் இதுகுறித்து தான் பேசுவதாகவும் தெரிவித்தார்.
3. ஐ.ஓ.பியில் உள்ளது போல் Halting allowance வழங்கப்பட்டாலும் பெருநகரங்களில் தங்குகிறவர்களுக்கு lodging expenses ஐ.ஓ.பியில் உள்ளதுபோல் வழங்கப்படவில்லை என்பதை விளக்கினோம். இந்தக் குறைகள் நிர்வர்த்தி செய்யப்படுவதற்கான வழிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
4. நம் வங்கியில் முறையான Transfer Policy இல்லாமல் இருக்கிறது. இதனால் பல குழப்பங்களும் குறைகளும் ஏற்படுகின்றன. இவைகளை எடுத்துரைத்தோம். ஒரு முறையான transfer policy வரையறுக்கப்பட வேண்டும் என்பதை கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
5. Newspaper allowance அனைவருக்கும் உடனடியாக வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
6. Disciplinary Proceedingsல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வருடக்கணக்கில் சார்ஜ்ஷீட்கள் கொடுக்கப்படாமல் நிர்வாகம் தாமதம் செய்வதை எடுத்துரைத்தோம். அதற்கான time frame வரையறுக்கப்பட்டு, இனி முறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஐ.ஓ.பியில் உள்ளது போல Reimbursement of fuel expenses, joining time leave வழங்கப்பட வேண்டும் என்பதையும் பேசியிருக்கிறோம். ஒவ்வொரு சலுகையாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
ஐ.ஒ.பி AGMமும், நமது வங்கியின் இயக்குனருமான திரு.ஞானசம்பந்தம் அவர்கள் தோழர்.முகர்ஜியை சந்தித்ததை மிகவும் சந்தோஷமான விஷயமாகக் குறிப்பிட்டார். அவரது அனுபவத்திலிருந்தும், பக்குவத்திலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். ஒரு பயனுள்ள சந்திப்பாக அமைந்திருந்தது.
ஐ.ஓ.பி உயரதிகாரிகளை சந்தித்த பிறகு தோழர்.முகர்ஜி இந்தியன் வங்கி பொதுமேலாளரை சந்தித்துப் பேசச் சென்றார். 75 வயதில் அவர் கிராம வங்கி ஊழியர்களுக்காகவும், அலுவலர்களுக்காகவும் ஓடிக்கொண்டு இருந்தார்.
hearty congrats.. all the above stipulations are very encouragable and must needed one!! hope we will get all of them very soon. thank u for all union leaders and mr. mukerji sir!!
ReplyDelete